துலா ராசி சனி பெயர்ச்சி பலன்கள்

துலா ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:  

உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சனியின் பயணம் நடைபெறுகிறது. நல்லது தரும் இடமாக இது கருதப்படுகிறது. உங்கள் ராசிக்கு சனி யோகநிலையில் இருப்பவர் என்பதால் உங்களுக்கு இந்த பெயர்ச்சி யோகம் தரும். சோதனைக் காலங்களை கடந்து விட்டீர்கள். இதற்கு முன்பு இருந்த தடைகள் தாமதங்கள் நீங்கி விட்டன. உங்கள் முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி காண்பீர்கள்.தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பதவி உயர்வுக்காக காத்திருந்த காலம் இப்பொழுது முடிவுக்கு வரும். சனி பலன்களை அளிப்பதில் தாமதங்களை ஏற்படுத்துவாறே தவிர அளிக்காமல் விடமாட்டார். ஒரு சிலர் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. பொறுப்புகள் அதிகரிக்கும்.காதல் / குடும்ப உறவு நிலையில் உங்கள் அன்புக்குரியவர் உங்கள் கருத்துகளுக்கு எதிராக செயல்படும் வாய்ப்பு இருக்கும்.  உடன்பிறப்புகளுடைய ஆதரவு கிட்டுவது சிரமம். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து  அமைதி கடைப்பிடிக்க வேண்டும். தனித்திருப்பவர்கள் தங்கள் உறவுகளில்  கவனம் தேவை. திருமணமான தம்பதிகள் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது.   நிதிநிலையில் இரண்டும் கலந்த பலன்கள் காணப்படும். தேவையான பணம் கையில் புழங்கும்.ஷேர் வணிகங்களில் ஈடுபட்டு கொள்ளுதல் கூடாது. முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன் அதனை பற்றி நன்கு அறிந்து பின்னர் மேற்கொள்வது நல்லது.இதனால் நல்ல பலன்கள் கிட்டும்.  
மாணவர்கள்  இந்த காலக்கட்டத்தில்   புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் இலக்குகளில் கவனமாக இருங்கள். மனதை ஒருமுகப்படுத்தி செயல்படுங்கள். கவனச்சிதறலுக்கு ஆளாகாதீர்கள். வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கு ஏற்ற காலம். ஒரு சிலருக்கு வெளிநாட்டில் படிக்க உங்கள் படைப்பாற்றல் சிறப்பாக இருக்கும்.
ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதால் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். சிறிய குறைபாடுகள் என்றாலும் அலட்சியம் காட்டாதீர்கள். உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. மது அருந்துவதைத் தவிருங்கள்.

Loading