வாஸ்து முதல்தர மனைகள்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

Vastu first class land house

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

6.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.58.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 6.8.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
21ந் தேதி சனிக்கிழமை  .நாளை அதிகாலை 2.12  வரை நவமி திதி. பிறகு வ. தசமி திதி.இன்று மாலை 5.38   வரை விசாகம் பிறகு அனுசம் நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:

வாஸ்து ரீதியாக முதல்தரமான இல்லங்கள் மற்றும் மனைகள் என்று சொல்லும் பொழுது, ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன. அந்த வகையில் அது சார்ந்த ஒரு சில கருத்துக்களை பார்ப்போம். நான்கு திசைகளிலும் சாலைகள் இருக்க வேண்டும். அதுவும் தென்மேற்கு தெருக்குத்து இல்லாத அமைப்பாக இருக்கவேண்டும். வடக்கு மற்றும், கிழக்கு சாலைகள் மனையை விட பள்ளமாக இருக்க வேண்டும். மேற்கு தெற்கு சாலைகள் உயரமாக இருக்க வேண்டும். எப்பொழுதுமே வடக்கு சாலையை பயன்படுத்த வேண்டும் . வடக்கு சாலையில் வாயில் வைக்க வேண்டும். வடக்கு திசை,காம்பஸ் காட்டும் திசை 360 டிகிரியில் இருந்து 30 டிகிரி உள்ளாக இருந்தால் முதல் தரமான மனை இடமாக இருக்கும். அந்த இடத்தில் இல்லத்தை அமைத்து, ஒரு கட்டிடம் கட்டும் பொழுது சிறப்பான நிலையை கொடுக்கிற இல்லமாக இருக்கும். அதே சமயம் வடக்கு மட்டும் சாலை இருக்கிற மனை முதல் தரமான மனையாக இருக்கும். முதல் தரமான மனைக்கு மற்றும் ஒரு விதியாக வடக்கும், கிழக்கும் சாலைகள் இருக்கும் மனை முதல்தரமான மனையாக இருக்கும்.

First Grade Plots … Grading of plots is often done after scanning through barren or open plots. These plots are always considered prime plots. A plot of land is the first and foremost prerequisite of a building. While selecting a plot of land, you must be very careful regarding its shape A flat land should be preferred for residential construction. However, if there are slants then plots with north-east or south-west slopes should be considered.Here are some Vastu tips and recommendations can help in subsidising the negative effects of irregular shapes of plots/flats.
  
—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –  செலவு
ரிசபம்-  ஆதாயம்
மிதுனம்- வரவு
கடகம்- தடங்கல்
சிம்மம்- நன்மை
கன்னி- சுகம்
துலாம் – பெருமை
விருச்சிகம்- நலம்
தனசு – கீர்த்தி
மகரம்- உழைப்பு
கும்பம்- உதவி
மீனம் – அலைச்சல்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
# August_06

ஹிரோஷிமா, டோரோ நாகாஷி நினைவு தினம்

ஜமைக்கா விடுதலை தினம்(1962)

பொலீவியா விடுதலை தினம்(1825)

உலகளாவிய வலை (WWW)தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ் லீ வெளியிட்டார்(1991)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading