வாஸ்து காலண்டர் சென்னை தமிழ்நாடு 5.6.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

5.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 5.6.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
22ந் தேதி ஞாயிறு நாள் முழுவதும் வ.சஷ்டி திதி.   இரவு 12.10 வரை ஆயில்யம் நட்சத்திரம் பிறகு மகம் நட்சத்திரம்.

ராகுநேரம்:
4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இரவு  12.10 வரை  நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:

வாசல் சார்ந்த வகையில் ஒரு சில மக்கள் புதன் வாசல் என்று சொல்வார்கள். புதன் வாசல் என்று சொல்கிற அந்த வார்த்தை திசையை ஒன்பது பாகங்களாக பிரித்து 9  நவகிரஹ பெயர்களை வைத்து கூறுவார்கள். அந்த வகையில் புதன் வாசல்  என்று வைப்பது என்னை பொறுத்த அளவில் ஒரு சில இடங்களில் மிகப் பெரிய தவறுகளை கொடுத்துவிடும். ஒரு இடம் திசைகாட்டிக்கு பொருந்தாது டிகிரிக்கு திருப்பி இருந்தால் கூட புதன் வாசல் வைக்கும் போது ஒரு சில இடங்களில் குற்றமாக நீச்ச பகுதியில் அந்த வாசல் வந்து விடும். அந்த வகையில் நவகிரகம் சார்ந்த விஷயங்களை வாஸ்துவில் ஒதுக்கித் தள்ளிவிட்டு உச்சமான நடை என்பது மிக மிக முக்கியம். இந்த இடத்தில் எந்த பொருளாக இருந்தாலும் அது சுத்தமாக இருந்தால்தான் நாம்  உணவாக உட்கொள்ள முடியும். அது போல ஒரு இல்லத்திற்கு சுத்தம் என்கிற விஷயம் உச்ச வாசல்தான். அதனைவிடுத்து புதன் வாசல், குரு வாசல், செவ்வாய் வாசல் , சூரிய வாசல், சந்திர வாசல் என்று கூறிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கும் செயலை யாரும் செய்ய வேண்டாம். இந்த விசயம் எனது வாஸ்து சார்ந்த பயணத்தில் ஏற்பட்ட அனுபவ பதிவு. அப்படிப்பட்ட உச்சவாசல் என்பது  இல்லத்தில் அனைத்து அறைகளுக்கும் பொருந்தும்.ஆக தலைவாசல் மட்டும் கிடையாது. படுக்கை அறையாக இருந்தாலும், சமையல் அறையாக இருந்தாலும், குளியலறை இருந்தாலும், கழிவறையாக இருந்தாலும்,   உச்ச வாசல் என்கிற விஷயம் மிக மிக முக்கியம். ஒரு சில இடங்களில் பூஜை சார்ந்த அறைக்கு நடுமையத்தில் புதன் வாசல் என்று வரும்போது அந்த விஷயம் கூட தவறு என்றுதான் சொல்லுவேன். யார் புதன் வாசல் என்கிற விசயத்தை  கேட்கிறார்களோ அல்லது என்னைப்போல வாஸ்து பார்க்கும் மனிதர்கள் சொல்கிறார்களோ அவர்களுக்கு வாஸ்து சாஸ்திரம் சார்ந்த ஞானம் இல்லை என்றுதான் சொல்லுவேன்.
_______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- சிந்தனை
ரிசபம்- வரவு
மிதுனம்- தாமதம்
கடகம்-  செலவு
சிம்மம்- ஆதரவு
கன்னி- முயற்சி
துலாம் – வெற்றி
விருச்சிகம்- மேன்மை
தனசு – நன்மை
மகரம்- அசதி
கும்பம்- தெளிவு
மீனம் –   நேர்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
june_05

உலக சுற்றுச்சூழல் தினம்

டென்மார்க் அரசியல் நிர்ணய தினம்

முதலாவது தனிக்கணினியான ஆப்பிள் 2 விற்பனைக்கு வந்தது(1977)

சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது(1959)

____________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading