வரவேற்பு அறை வாஸ்து | Hall Vastu tamil

வாஸ்து அமைப்பில் வரவேற்பு அறைகள் பற்றி தெரிந்து கொள்வோம். வரவேற்பு அறைகள் என்பது எந்த இடத்திலும் இழுத்த அமைப்பில் வரக்கூடாது. செவ்வகம் அல்லது , சதுரம் அமைப்பாக வர வேண்டும். ஒரு மூலை இல்லாத, ஒருதிசை இல்லாத, எக்காரணம் கொண்டும் வரவேற்பறைகளில் இருக்கக் கூடாது. வரவேற்பறை எந்த இடத்தில் இருக்கலாம் என்கிற சந்தேகம் நிறைய மக்களுக்கு இருக்கிறது. ஒரு இல்லத்தில் தென்மேற்கு பகுதி தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் வரவேற்பு அறை இருக்கலாம் என்பது சென்னை வாஸ்து ஜெகநாதனாதனாகிய எனது ஒரு பதிவாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். வரவேற்பறை என்பது முதல் தரமாக வடகிழக்குப் பகுதியிலும், இரண்டாம் தரமாக வடமேற்கு பகுதியிலும், மூன்றாம் தரமாக தென் கிழக்குப் பகுதியிலும் வரலாம். அதே இரண்டாம்தர அமைப்பில் வடக்கு மத்திய பாகமும், கிழக்கு மத்திய பாகமும், மிகச் சிறந்த வரவேற்பு அறை உள்ள இடங்களாகும். அப்படிப்பட்ட வரவேற்பறைகளில் ஒரு சில இடங்களில் வடகிழக்கு பகுதியை வரும்  வழியாக ஒதுக்கிவிட்டு அதற்கு மேற்கிலோ, அல்லது கிழக்கு பகுதியில் பூஜை அறைகளை ஒரு சில இடங்களில் அமைத்திருப்பார்கள். இந்த மாதிரி அமைப்பது என்பது வரவேற்பறைக்கு தோசத்தை ம கொடுக்கக் கூடிய இடமாக மாறிவிடும். ஒரு இல்லத்தில் வரவேற்பறை என்பது அனைவரையும் வரவேற்று அமர வைக்க கூடிய பகுதி. அந்த பகுதி வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருப்பது சாலச் சிறந்தது.
வரவேற்பறை சார்ந்த பகுதிகளில் அதிக எடைகளை எங்கு வைக்கலாம்? எங்கு வைக்க கூடாது என்கிற விதிமுறைகள் இருக்கின்றன. அந்த வகையில் வட கிழக்குப் பகுதியில், ஒரு இல்லத்தில் வடக்கு வரவேற்பு இருக்கிற பட்சத்தில், எக்காரணம் கொண்டும் அந்த வரவேற்பறை சார்ந்த வடகிழக்கு பகுதியில் வடக்கு பாகத்தில், கிழக்கு பாகத்தில் அதிக கனமான பொருட்களை வைப்பது மிக மிகத் தவறு. இந்த விதி என்பது வடகிழக்கு பகுதியில் வருகிற வரவேற்பறைக்கு மட்டும் பொருந்தும். இதே வரவேற்பறையில் வடமேற்குப் பகுதில் வரும்பொழுது வடமேற்கு சார்ந்த மேற்கு மற்றும் மேற்கு சார்ந்த வடக்கு பகுதிகளில் தாராளமாக பொருட்களை, உதாரணமாக சோபா  சேர் டேபிள் போன்ற விஷயங்களை  அந்தந்த இடத்தில் புகுத்துவது நீங்கள் தாராளமாக செய்து கொள்ளலாம் . அதனை விடுத்து அதிக எடையுள்ள பொருட்களை அங்கு வைப்பது தவறு. வரவேற்புரையை பொருத்தளவில், தென்மேற்கு தவிர்த்து மற்ற பகுதிகளில் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும்கூட வடமேற்கு, தென் கிழக்குப் பகுதிகளில் உபயோகிக்கும்போது சரியான முறையில் உட்காரும் நாற்காலி , சோபா, சார்ந்த விஷயங்களை, தொலைக்காட்சிப்பெட்டி எங்கு வரவேண்டும் இதனை உன்னிப்பாக கவனித்தும்,  ஈபி சார்ந்த மெயின் பாக்ஸ் சரியான இடங்களில் வரும்பொழுது நல்ல பலனைக் கொடுக்கக்கூடிய வரவேற்பு  அறையாக இருக்கும்.  எந்த வரவேற்புஅறையாக இருந்தாலும்,  வரவேற்பு அறையில் வாசல் என்பது உச்சத்தில் இருக்கவேண்டும். அதேபோல அந்த அந்தப் பகுதியிலிருந்து, உள்ளே செல்லக்கூடிய அடுத்த அறைகளுக்கான வழி என்பது ஒரு நேர் அமைப்பாக இருப்பது நலம். அதுவும் இடது, வலது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் செல்லும் அமைப்பில் ஏற்படுத்திக் கொள்வது சாலச்சிறந்தது. எதுவாக இருந்தாலும்  உச்சத்தில் வைத்து வரவேற்பு அறையில் இருந்து செல்லக்கூடிய பகுதியை நீச்ச அமைப்பாக வைக்கும்பொழுது வாஸ்து ரீதியாக ஒரு குற்றமாக விஷயமாக என்னால் பார்க்கப்படுகிறது. முடிந்த அளவுக்கு அனைத்து பகுதிகளுமே உச்ச ஸ்தானத்தில் இருக்கிற அமைப்பாக வைக்க வேண்டும் .

அதேபோல் வரவேற்பறையில் இருக்கக்கூடிய ஜன்னல்கள் ண சுவருக்கு ஒரு உச்ச அமைப்பிலும்,  சுவரின் நீச்ச பாகத்தில் கடைசியில் கொண்டு வைப்பது தவறு. ஒரு சில இடங்களில் வரவேற்பறையில் வாசலுக்கு நேர் ஜன்னல் வேண்டும் மற்றும் ,படுக்கையறை மற்றும் உணவு உண்ணும் அறை நேர் எதிரில் ஜன்னல் வேண்டும் படுக்கையறைக்கு செல்கின்ற வாசலுக்கு நேர் வேண்டும் என்பதற்காக நீச்ச பகுதிகளில் ஜன்னல்களை வைப்பார்கள். இது சார்ந்த விஷயங்களை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள்.  வரவேற்பறையை பொறுத்தளவில் மிக மிக சிறப்பான அற்புதமான வரவேற்பறை என்னால் பார்க்கப்படுவது சதுர அமைப்பில் தான் என்பேன். அந்தவகையில் முதல்தரமான வரவேற்பறை என்பது, பட்ஜெட் வீடுகளாக இருந்தாலும் கூட 16 அடிக்கு 16  வரவேற்பறையை  அமைப்பது சாலச்சிறந்தது. அதேபோல இரண்டாம்தர வரவேற்பறையாக இருப்பதென்பது, 16 அடிக்கு 22 அடிகளை வைப்பது சாலச்சிறந்தது .அல்லது 22 அடிக்கு 22 அடி ஆகவும் அல்லது, மிகப்பிரமாண்டமான அமைப்பில் ஒரு வரவேற்புரை வேண்டும் என்கிற பட்சத்தில் 20 அடிக்கு 26 அடி களை வைத்து அமைப்பது மிக மிக சிறப்பானது. இந்த விதிகளைப் பின் பற்றி ஒரு இல்லத்தை அமைக்கும் பொழுது வரவேற்புஅறை என்பது நல்ல அதிர்ஷ்டம் கொடுக்கக் கூடியவையாக இருக்கும்  என்னைப் பொறுத்த அளவில் வடகிழக்கு பகுதியில் அமைக்கின்ற வரவேற்பறைக்கு முன்பாக, ஒரு படிக்கின்ற அறையை ஏற்படுத்திக் கொள்வது மிக மிக சிறப்பு . அல்லது ஒரு இல்லத்தின் அலுவலக அமைப்பு கூட அதனை மாற்றி வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. ஏனென்றால்  இன்னைக்கு இன்று இந்த கொரணா கால கட்டத்தில்,ஒர்க் அட் ஹோம்   என்கிற ஒரு விஷயம் இருக்கின்றபடியால் படிக்கும் அறை அல்லது மினி அலுவலகம் ஆக வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. ஒரு சில இடங்களில் ஆண்கள் வரவேற்பறை, பெண்கள் வரவேற்பது என்று இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். இதனை மிகச் சரியாக அமைக்கும் பொழுது நன்மையைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *