ரிஷிப ராசி சனிபெயர்ச்சி பலன்

ரிஷப ராசி சனி பெயர்ச்சி 2023 பலன் :

உங்கள் ராசியில் இருந்து பத்தாம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார் சனி பகவான். பத்தாம் வீடு தொழிலை மட்டுமின்றி உங்கள் கர்மாவையும் குறிக்கும். உங்கள் ராசிக்கு சனி சுபர் என்றாலும் அதற்கேற்ற உழைப்பை நீங்கள் போட வேண்டி இருக்கும். உங்கள் உழைப்பிற்கேற்ற நல்ல பலனை நீங்கள் அடைய இயலும். அதற்கு மேல் நீங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது. என்பதை நினைவில் கொள்ளுங்கள்.உத்தியோக நிலையில்
தடுக்க முடியாத சில தடைகளை நீங்கள் சந்தித்தாலும் முன்னேற்றம்  காண்பீர்கள். நீங்கள் கடினமாக உழைத்தாலும் சனி குறைவாக பலன்களை அளிப்பார்.  சனி நீதி வழங்கக் கூடியவர். எனவே சனி உங்களை கடினமாக உழைக்கச் செய்வார். குறுக்கு வழியில்  முன்னேற்றம் காண முடியாது..  உங்கள் கடமை மற்றும் பொறுப்புகளை உணர்ந்து பயணம் கொள்ளுங்கள். பலன் நடக்க பொறுமையுடன் இருங்கள்.குறைந்த வயது ரிஷப  ராசி அன்பர்கள் குறுகிய கால காதல் விவகாரங்களில் ஈடுபடலாம். இருப்பினும், சிலருக்கு இந்த ஆண்டு சரியான துணை கிடைக்காமல் இருக்கும்.. மேலும் திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் இந்த ஆண்டின் இறுதியில் திருமண ஏற்பாடுகள் மற்றும் திட்டங்களில் வெற்றி உண்டு. திருமணமான தம்பதியர்கள் வேலை மற்றும் இலக்குகளுக்கான நேர  அர்ப்பணிப்பு காரணமாக நீங்கள்  பிரிந்து காதல் என்கிற விசயத்தில் முக்கியத்துவம் அளிக்க இயலாமல் இருக்கும். சிலருக்கு காதல் தோன்றிய வேகத்தில் இருக்காது.

திருமண வாழ்க்கையில்  தங்களுக்கு ஏற்ற துணையை கண்டு கொள்வார்கள். திருமணமான தம்பதிகள் சில சமயங்களில் கருத்து வேறுபாடுகளை சந்திப்பார்கள். இது குடும்ப அமைதியை பாதிக்கும். ச உடன்பிறப்புகள் உங்கள் கருத்துகளுக்கு எதிராக செயல்படுவார்கள். விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போவதில்லை என்பதை கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுங்கள்.
இந்த காலக்கட்டத்தில் உங்கள் பணநிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர்முன்னேற்றம் சந்திப்பீர்கள். உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் ராகு  இருப்பதால் நீங்கள் சுக போகங்களுக்காக அதிக பணம் செலவு செய்வீர்கள். எனவே உங்கள் செலவுகளில் கவனம் தேவை. உங்களில் ஒரு சிலர் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.  கடன் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். முதலீடுகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை.
மாணவர்கள் படைப்பாற்றல் மற்றும் புத்திசாலித்தனம் வெளிப்படும். உங்கள் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிட்டும். என்றாலும் உங்கள் முன்னேற்றத்தில் சில தடைகள் காணப்படும்.  எனவே முன்னேற்றம் காண மனதை ஓருமுகப்படுத்தி கவனமாக முன்னேற வேண்டும். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து அதில் கவனம் செலுத்த வேண்டும்.

Loading