மீன ராசி சனி பெயர்ச்சி 2023 /Meenam | Sani Peyarchi Palan 2023

Meenam | Sani Peyarchi Palan 2023


மீன ராசி சனி பெயர்ச்சி 2023 பலன்கள்

உங்கள் ராசிக்கு 12 மற்றும் 11 வீட்டின் அதிபதியான சனி உங்கள் ராசிக்கு வீட்டில் பெயர்ச்சி ஆகி பயணம் செய்கிறார்கள்.. 71/2 சனியின் ஆரம்ப காலக்கட்டம் இது.  விஷயத்தையும்  இந்தக் காலக்கட்டத்தில் உங்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும். குறுக்கு வழியில் செல்வதோ கோபம் கொள்வதோ தவறு. உங்கள் தகுதிக்கு மீறி எதையும் எதிர்பார்க்காதீர்கள். தினமும் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். சோதனைக் காலங்களில் சவால்களை எதிர்கொள்ள இறைவழிபாடு செய்யுங்கள்.

தொழிலைப் பொறுத்தவரை மந்தமாக இருக்கும். எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்க சிரமமாக இருக்கும். வேலைகள் அதிகமாக இருக்கும். திட்டமிட்டு வைலைகளை மேற்கொள்ளுங்கள். வேலை மாற்றம் விரும்புகிறீர்கள் என்றால் கவனமாக செயல்பட வேண்டும்.   உங்கள் தொழிலில் நீங்கள் வளர்ச்சி காண நீங்கள் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றாலும் ஊதியம் குறைவாக இருக்கும்.

உறவுகளில் சில கருத்து வேறுபாடுகள் எழும் வாய்ப்பு உள்ளது. அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நல்லது நடக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.ஆரம்பகட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பின்னர் மெதுவாக  கருத்து வேறுபாடுகள் இருக்கும்.

இந்தக் காலக்கட்டத்தில் சில தாமதங்களை சந்திக்க நேரும். முதலீடுகள் மேற்கொள்வதை ஒத்திப் போடுங்கள். உண்மையில் சொல்லப் போனால் உங்களுக்கு நெருங்கியவர்களே உங்களுக்கு சில தொல்லைகளை அளிக்கலாம். எனவே யாரையும் எளிதில் நம்பிவிடாதீர்கள். இந்த காலக்கட்டத்தில் கடன் வாங்குவதைத் தவிருங்கள்.ஸ்டாக் சேர் வணிகங்களில் ஈடுபடாதீர்கள்.மாணவர்கள் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும். அப்படி படித்தால் தான் மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற பயம் காரணமாக படிப்பில் வேண்டாம் .மேற்கல்வி பயிலும் மாணவர்கள் வெற்றிகரமாக தங்கள் ஆராய்ச்சியை முடித்து அளிப்பார்கள். வெளிநாடு சென்று உயர் கல்வி படிக்க நினைக்கும் மக்கள் தங்கள் கனவு நனவாக கூடும்..அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.  மாணவர்கள் புதிய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. அதிவேகத்தில் பிரயாணம் செய்யாதீர்கள்.  சிறிய அளவிலான பாதிப்பு என்றாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்று நலம் பெற வேண்டும்.Meenam | Sani Peyarchi Palan 2023

Meenam | Sani Peyarchi Palan 2023

Loading