கும்பராசி சனிபெயர்ச்சி 23

இந்த சனி பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் நீங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் சோர்வாகவும் எதிலும்  பற்று இல்லாமலும் இருப்பீர்கள்.   சனி மேதூவான கிரகம் என்பதால் நீங்கள் முன்னேற்றங்களைக் காண்பீர்கள் என்றாலும் அது மெதுவான முன்னேற்றமாக இருக்கும். இந்தக் காலக் கட்டங்களில் நீங்கள் எல்லோரையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கடந்த கால அனுபவங்களை நினைவு படுத்தி வாழுங்கள்.

இப்போதைய காலக்கட்டத்தை தெரிந்து கொள்வதற்கான நேரமாக கருதுங்கள், அதிகம் கவலைப்பட வேண்டாம். பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்.  வேலையில் பொறுப்புகள் அதிகமாகும். அதிக வேலைப்பழு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சிலர் நல்ல வேலை இல்லாமல் தேட வேண்டிய  சூல்நிலை இருக்கும் . ஆனால் வேலையில்  சேர்வதற்கு முன் வேலை குறித்து சாத்தியமான அனைத்து விசயங்களை தெரிந்து செய்யுங்கள். உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. 
குடும்பத்தில் நடக்கும் பல விஷயங்கள் உங்களுக்கு சோர்வை அளிக்கும். நீங்கள் இந்தக் காலக்கட்டத்தில் குடும்பத்தினரை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு பிரியமான உறவுகளே உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புள்ளது. தங்களின் சுய நலத்திற்காக பிறர் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதால் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். கண்மூடித்தனமாக யாரையும் நம்புவதை தவிருங்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் இன்னும் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். நேரம் கனிந்து வரும் வரை அவசரப்படாதீர்கள்.

திருமண வாழ்க்கை:

கணவன் மனைவி உறவில் ஒற்றுமை குறையும். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளது. அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் உறவில் அமைதி காக்க இயலும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் இந்த காலக்கட்டத்தில் திருமணம் குறித்த எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். திருமணம் குறித்த முடிவுகளை எடுக்க யாதுஇது சரியான தருணமல்ல. திருமணம் காலதாமதம் ஆகலாம் என்பதால் நீங்கள் பொறுமை காக்க வேண்டும்.

நிதிநிலை:

உங்கள் பணபுழக்கம் சீராக இருக்கும் என்றாலும் சில சமயங்களில் நீங்கள் பின்னடவை சந்திப்பீர்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கடன் வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. பணம் சம்பந்தமான எந்தவொரு முடிவையும் நீங்கள் நன்கு யோசித்து எடுக்க வேண்டும். முதலீடுகளை மேற்கொள்ளும் போது அதிக கவனம் தேவை. பணம் தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் விதிமுறைகளை நன்கு அறிந்து செயல்படுங்கள். சட்ட விரோதமாக நடந்து கொள்வதோ அல்லது குறுக்கு வழியில் செல்வதோ கூடாது. நீங்கள் முதலாளியாக இருந்தால் தொழிலாளர்களின் சம்பளம் குறித்த விஷயங்களில்  நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள். மாணவர்கள்  கல்வி பயில  சில தடைகளும் தாமதங்களும் ஏற்படும். என்றாலும் நீங்கள் கவனமுடன் திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம். ஆசிரியரின் ஆலோசனை கேட்டு நடப்பது வெற்றிக்கு வழி வகுக்கும். கல்வியில் உங்கள் ஆர்வம் குறையாமல் கவனித்துக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் இந்த காலக்கட்டத்தில் கடின உழப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்கள் வெற்றி காண்பார்கள்.மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

Loading