ராஜகோபாலசுவாமி Mannargudi Rajagopalaswamy

Mannargudi Rajagopalaswamy

இன்றைய ஆலய தரிசனம்

அருள்மிகு
ஶ்ரீ செங்கமலத்தாயார் சமேத
ஶ்ரீ (ராஜகோபாலர்)
வாசுதேவப்பெருமாள் திருக்கோயில்,
(ராஜமன்னார்குடி)
மன்னார்குடி நகரம்,
திருவாரூர் மாவட்டம்.

( 11-ஆம் நூற்றாண்டில், குலோத்துங்க சோழரால் கட்டப்பட்ட இந்த வைணவ திருத்தலத்தில், தாயார் தனி சன்னதியில் வீற்றிருக்க,
மூலவர்; (12-அடி உயரம் கொண்ட) வாசுதேவராகவும் உற்சவர்; ராஜகோபாலராகவும்  நம் வேங்கடவன் அழகுத்திருக்கோலம்  பூண்டிருக்ககறார்.

(சிறப்புக்கள் பல பெற்ற, இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்)

ஒரு புராண நிகழ்வின்படி; இத்தலத்தில்,
கோபிலர், கோபிரளயர் என்ற இரு முனிவர்களின் வேண்டுதலுக்காக,  பெருமாள் முதலில் வாசுதேவராகவும்,  பின்னர்
கிருஷ்ண லீலையில்
32-ஆம் லீலையாக, கோகுலத்தில் பசுக்கள் மேய்க்கும் (பாலகனாக) இடையனாகவும் அருட்காட்சியளித்ததாக
தலவரலாறு கூறுகிறது.

இந்நிகழ்வின் அடிப்படையில் பெருமாள்,
இக்கோயில் மூலவராக ‘ஶ்ரீவாசுதேவர்’ எனும் திருநாமம் கொண்டும், உற்சவமூர்த்தி ‘ஶ்ரீ ராஜகோபால சுவாமி’யாகவும் திருஅருட்காட்சியளிக்கின்றனர்.

தினமும் காலையில் வாசுதேவர் சன்னதி திறக்கும்போது பசு, யானைக்கு முதல் பூஜை செய்யப்படுவது தலச்சிறப்பு.

(மற்றுமொரு தலச்சிறப்பு; பெண்ணாக காட்சிதரும் கருடாழ்வார். 8-ஆம் புகைப்படப்பதிவு)

11-நிலையுள்ள பிரமாண்ட ராஜகோபும், 16-கோபுரங்கள், 18-விமானங்கள், 7-மண்பங்கள்,  7-பிரகாரங்கள், 9-தீர்த்தங்கள் என, 23-ஏக்கர் பரப்பளவில் இத்தலம் காண பிரமிக்க வைக்கிறது.

இத்தல 11-நிலை ராஜகோபுரத்தின் (கீழிருந்து மேலாக) முதல் 6-நிலைகளில் சுதை, சிற்பங்கள் எதுவும் இல்லை என்பது,
மற்ற ஆலய கோபுரங்களிலிருந்து
வித்தியாசப்படுகிறது.

(ஆலயத்தின் சற்று தூரத்தில் இருக்கும் தீர்த்தக்குளம், கிருஷ்ணரின் தரிசனம் வேண்டி முனிவர்கள் தவம் இருந்த குளமாம். அதனாலேயே,  இதனை பமுனை நதியாகவே கருதுவதும், இக்குளத்தினை
“ஹரித்ரா நதி” என்னும் பெயரில் அழைக்கப்படுவதும் தலச்சிறப்புக்களில் ஒன்றாகும்)Mannargudi Rajagopalaswamy

உற்சவருக்கு ராஜமன்னார் என்றும் பெயருண்டு. இப்பெயரே பிரசித்தி பெற்றதால், முற்காலத்தில் ‘ராஜமன்னார்குடி’ என்றக்கப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில் அப்பெயர் மருவி, தற்போதைய ‘மன்னார்குடி’ என்றானதாம்.

வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை நாட்களில் விழாக்கோலம் கொண்டிருக்கும் இத்தலத்தில்,
18-நாட்கள் நடைபெறும் பங்குனிப்பெருவிழாவும் அதைத்தொடர்ந்து வரும்
12-நாட்கள் நடைபெறும் கிருஷ்ண தீர்த்த தெப்ப விடையாற்றி விழா மற்றும், ஆடிப்பூரம் அன்று செங்கமலத்தாயார் தேரில் எழுந்தருளும்
உள்பிரகார தேரோட்ட விழாக்கள் இந்த பெரும் ஆலயத்தின் பிரசித்தி பெற்ற திருவிழா காலங்களாகும்.
ஓம் நமோ நாராயணாய நம

Mannargudi Rajagopalaswamy

Loading