Chennai vastu calendar 2.10.2022

Tamil Daily Calendar 2022

#காந்தி_ஜெயந்தி

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

2.10.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 02 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி

தினசரி நாள்காட்டி 2.10.2022 #சுபக்கிருது; #புரட்டாசி மாதம்.15ந் தேதி .  ஞாயிறு. மாலை 6.49 வரை சப்தமி திதி . பிறகு  வ.அஸ்டமி திதி.இரவு 1.40 வரை மூலம் நட்சத்திரம். பிறகு பூராடம் நட்சத்திரம்.

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pmTamil Daily Calendar 2022

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.

வாஸ்து வகையில் நின்று போன தொழிற்சாலைகள், நஷ்டத்தில் உள்ள ஆலைகள் வாஸ்து மாற்றத்துடன் மாற்றங்களை செய்யும்பொழுது லாபத்தோடு இயங்க வைக்க முடியும். நின்று போன தொழிற்சாலைகளில் மீண்டும் இயக்க வைக்க முடியும். எனது வாஸ்து பயணத்தில் அதிக நிறுவனங்களை, தொழிற்சாலைகளை எங்களுடைய சொந்த ஊரான பெருந்துறை சிப்காட் பகுதிலும், ஓசூர்,மதுரை சிப்காட் பகுதிகளும் ராணிப்பேட்டை சிப்காட் பகுதிகளும், அதே சமயம் சென்னை அம்பத்தூர்  எஸ்டேட் சார்ந்த பகுதிகளிலும், நிறைய நின்று போன தொழிற்சாலைகளுக்கு மீண்டும் இயக்க வைத்த நிலை எனக்கு உண்டு. இந்த இடத்தில் ஏன் அந்த தொழிற்சாலை நின்று போகிறது என்கிற ரகசியத்தை தெரிந்து கொண்டால், அந்த தொழிற்சாலை இயங்கும் வழி தெரிந்து விடும். அந்த வகையில் ஒரு தொழிற்சாலைக்கு நான்கு திசைகள், நான்கு மூலைகள் முக்கியம். அந்த வகையில் எந்த மூலைகளை அடைக்கலாம். எந்த மூலைகளை திறந்து வைக்க வேண்டும். எந்த திசையை அடைக்க வேண்டும். எந்த திசையை மூட வேண்டும் என்கிற ரகசியம் தெரிந்து கொண்டால் செய்ய முடியும் . ஒரு சில இடங்களில் ஒரு சில தொழிற்சாலைகளில் தொழிற்சாலையின் கட்டிட அமைப்புகளும், தொழிற்சாலைக்கு வெளியில் இருக்கக்கூடிய கட்டிட அமைப்புகளும், ஒரு நிறுவனத்தை இழக்கவும் வைக்கும்.  இயங்கவும் வைக்கும். இதை தெரிந்து கொள்வது மிகவும் கடினம் என்று தான் சொல்வேன்.  பறந்து விரிந்த, பல நூறு ஏக்கர் கணக்கில் இருக்கிற தொழிற்சாலைகளாக இருந்தாலும் சரி, ஓரிரு ஏக்கரில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகளாக இருந்தாலும் சரி , ஒரு சில இடங்களில் கட்டிட அமைப்புகள் மிகவும் கடினத் தன்மையுடன் இருக்கும். அந்த இடத்தில் சரி செய்வதோ மாற்றி வைப்பதோ கடினம். அது போன்ற இடங்களில், பெரிய இடங்களில் தவறான கட்டிட அமைப்பு இருக்கும் பொழுது, பெரிய அளவில் கட்ட வேண்டும். இல்லையேல் தடுப்பு சுவர்களை ஏற்படுத்தி இட அமைப்பு சரி செய்ய வேண்டும். இதுபோலத்தான் ஒரு தொழிற்சாலைக்கு கிழக்கிலும், வடக்கிலும் இடம் இல்லை என்று சொன்னால் , அதனை இயக்கவதும், இயங்க வைப்பதும் கடினம். தெற்கிலும், மேற்கிலும் இடம் இல்லாவிட்டால் பரவாயில்லை. ஆனால் வடக்கும் கிழக்கும் இடமில்லாமல் போகக்கூடாது. இந்த இடத்தில் வாய்மூலை மூடிவிடுவதோ, அக்கினி கூட திறந்து விடுவதோ, தென்மேற்கு மூலை திறப்புக்களாக இருப்பதோ, ஒரு தொழிற்சாலையை இயங்குகிற நிலையை தடுக்கும். இதை தெரிந்து கொண்டு ஒரு தொழிற்சாலையின் நிலையில் மாற்றி வைக்கும் பொழுது, வாஸ்துரீதியாக உச்ச பலன்களை கொடுக்கிற நிறுவனமாக இருக்கும். நிறைய இடங்களில் எனது வாஸ்து பயணத்தில் இயக்க வைத்தேன்  என்கிற பெருமையும், அதே சமயம் ஒரு  பழைய ஓடாமல் நின்று போன நிறுவனத்தை புதிதாக வாங்குகிற அந்த முதலாளி என்னை அழைத்து வாஸ்து பார்த்த பிறகு அந்த நிறுவனத்தில் உள்ளே அமரும் பொழுது அது பெரிய அளவில் நன்றாக இருக்கும் தொழிற்சாலையாக மாறி இருக்கிறது என்பதை பெருமைப்பட்டு செல்கின்றேன். ஆக ஒரு தொழிற்சாலை இயங்காமல் இருக்கிறது என்று சொன்னால், விற்பதற்கு முன்பு ஒரு தடவை பார்த்துவிட்டு விற்பனை செய்யுங்கள். அதேசமயம் வாங்குவதற்கு முன்பு பார்த்துவிட்டு வாங்க முயற்சி செய்யுங்கள். ஒரு சில மாற்றங்களோடு மாற்றி வைக்கும் பொழுது நின்று போன தொழிற்சாலையை இயக்கி வைக்க முடியும். இது நிச்சயமாக வாஸ்து துணையோடு இயங்கும்.Tamil Daily Calendar 2022
______________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – செலவு
ரிஷபம்- நிறைவு
மிதுனம்- வரவு
கடகம்- சுகம்
சிம்மம்- பாராட்டு
கன்னி- பயம்
துலாம் – முயற்சி
விருச்சிகம்- தெளிவு
தனசு- ஆதாயம்
மகரம்- பக்தி
கும்பம்- உழைப்பு
மீனம் – தாமதம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#October_02

சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினம்

மகாத்மா காந்தி பிறந்த தினம்(1869)

தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்த தினம்(1908)

இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்(1904)

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு தினம்(1975)

Loading