மண்டைக்காடு பகவதி ஆலயம் Mandaikadu Bhagavathi Amman Temple

இன்றைய ஆலய தரிசனம்;

Mandaikadu Bhagavathi Amman Temple

Mandaikadu Bhagavathi Amman Temple
Mandaikadu Bhagavathi Amman Temple

அருள்மிகு
ஶ்ரீ பகவதி அம்மன் திருக்கோயில்,
(மந்தைக்காடு)
மண்டைக்காடு,
நாகர்கோவில் (குளச்சல்) வட்டம்,
கன்னியாகுமரி மாவட்டம்.

சுமார் 500-ஆண்டுகள் பழமையான இத்தலத்தில், (இதுவரை) 15-அடி உயரமாக வளர்ந்து
நிற்கும் புற்றின் மேல் (சுயம்புவாக போற்றப்படும்) பகவதி அம்மனின் திருமுகம் சந்தனத்தால் உருவாகப்பட்டவளாக, (அதாவது) புற்றே அம்மனாக அருட்காட்சியளிப்பது தலச்சிறப்பாகும்.

அந்த புற்று அம்மனின் முன், அமர்ந்த கோலத்தில்
வெள்ளியிலான
பகவதி சிலையும்,  இச்சிலைக்கு முன்
நின்ற திருக்கோலமாக
பகவதிதேவி வெண்கலச்சிலையும்
திருஅருட்காட்சியளிப்பது சிறப்புமிகு சிறப்பு.

(சிறப்புக்கள் பல பெற்ற, இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்)

முற்காலத்தில்,  ராஜேஸ்வரி அருட்குடியிருப்பதாக கூறப்படும் ஶ்ரீ சக்கரத்தை ஏந்தி ஆதிசங்கரரின் சீடர் ஒருவர் இத்தலத்திற்கு வந்ததாகவும், பூஜைநேரமாகிவிட்ட
மாலை வேளையில் அந்த ஶ்ரீ சக்கரத்தினை தரையில் வைத்துவிட்டு,
அச்சீடர் பூஜையில் ஆழ்ந்துவிட, பின்
பூஜை முடிந்து  தரையில் இருந்த ஶ்ரீசக்கரமோ மண்ணை விட்டு வரமுடியாமல் போய்விட, அச்சீடரும் அங்கேயே இருந்து அச்சக்கரத்தை வழிபட்டு ஜீவமுக்தி அடைந்ததாகவும்,  அந்த ஶ்ரீசக்கரமே புற்றாக உருமாறி வளர்ந்ததாகவும், மக்கள் அச்சக்கரத்தினை பகவதிதேவியாக போற்றி வழிபட்டதாகவும்,
இந்த செய்தி அறிந்து இப்பகுதியை ஆண்ட மன்னர் மார்த்தாண்டவர்மர் இந்த புற்று அம்மனுக்கு ஆலயம் கட்டியதாகவும் தலவரலாறு கூறுகிறது.Mandaikadu Bhagavathi Amman Temple

(புற்றாக இருந்தாலும், இப்புற்றினுள் நாகம் போன்ற உயிரினங்கள் ஏதுமில்லை)

அக்காலத்தில், ஆடு,மாடுகள் மேய்ந்த (புல்வெளிகள் நிறைந்த) மந்தைகாடே, பெயர் மருவி இக்காலத்தில் ‘மண்டைக்காடு’ என்றானதாம்.

பெண்களின் உளமார வேண்டுதலுக்கு (நிச்சயம்) கருணையுடன் செவிசாய்ப்பவளாம்
இந்த மண்டைக்காடு
ஶ்ரீ பகவதியம்பிகை.

‘பெண்களின் சபரிமலை’ என, சிறப்புமிகு புனைப்பெயர் கொண்ட இத்தலத்திற்கு,
ஆண்களைவிட பெண்கள்தான் அதிகளவில் தரிசிக்க வருகின்றனர்.

குடும்பத்தில் நலமும், வளமும் பெருகிட,
ஒவ்வொரு ஆண்டும்
மாசி கொடைவிழாவினை ஒட்டி, ஆயிரக்கணக்கான தமிழக,கேரளத்து பெண்கள் 41 நாட்கள் பக்தியுடன் விரதமிருந்து இருமுடி கட்டி இந்த மணாடைக்காடு பகவதியம்மனை தரிசித்து, விரதம் முடித்து,
பொங்கலிட்டுச் செல்வது வியப்புமிகு சிறப்பு).

ஓம் சக்தி #பராசக்தி;

Loading