tamil panchangam
தினசரி நாள்காட்டி 15.10.2022 #சுபக்கிருது; #புரட்டாசி மாதம்.28ந் தேதி . சனிக்கிழமை நாள் முழுவதும் சஷ்டி திதி பிறகு தே.சப்தமி திதி. இரவு 12.06 வரை மிருஹஷிரிஷம் நட்சத்திரம். பிறகு திருவாதிரை நட்சத்திரம்.
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)
இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:
ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.Chennai vastu tamil panchangam
.
27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் அஸ்வினி. அஸ்வினி என்றால் குதிரை என்று பொருள். இந்த நட்சத்திரத்தின் உருவம் வானத்தில் குதிரை போல் இருக்கும். ஆக அஸ்வனி நட்சத்திரம் சூரியன் உச்சமடைகிற நட்சத்திரம். ஆகவே அஸ்வினி நட்சத்திரம் அன்று சிவபெருமானை வணங்குவது சிறப்பு. அஸ்வினி நட்சத்திர அதிபதி கேது . ஆக இந்த நாளில் விநாயகர் வழிபாடு சிறப்பு.. கோயிலில் முடி காணிக்கை செலுத்த அஸ்வினி நட்சத்திரம் சிறப்பு. நூல் கயிறு குறிக்கும் கிரகம் கேது. ஆகவே அன்று குழந்தைகளுக்கு அறைநாண் கயிறு கட்ட, பூணூல் போட சிறப்பு. திருமணத்தில் முக்கியமான மங்களப் பொருள் தாலி ஆக திருமணம் நட்சத்திரமாக அசுவினி நட்சத்திரம் இருக்கின்றது . ஆண்களின் உயிரணுக்கள் உள்ள விந்து என்ற உயிரணுவை குறிக்கும் கிரகம் கேது. ஆகவே இன்று இருக்கக்கூடிய மருத்துவத்தில் குழந்தை பேரு மருத்துவங்களில் மருத்துவ சிகிச்சை செல்லும் பொழுது விந்து தானத்தை இந்த நட்சத்திரத்தில் செய்யலாம்.
அஸ்வினி நட்சத்திரத்தின் உருவம் குதிரை என்பதால் குதிரை வண்டி , மாடு மாட்டு வண்டி வாங்க உகுந்த நட்சத்திரம். அந்த காலத்தில் குதிரை தான் இருசக்கர வாகனங்கள் போல பயன்பட்டது . இன்றைக்கும் கூட வாகனங்களை உந்து சக்தியை குதிரை திறனாய் தான் பார்க்கின்றனர். ஆக புதிய வாகனங்கள் வாங்குவதற்கும் புகந்த நட்சத்திரம் அஸ்வினி. நட்சத்திரத்தின் அதிதேவதை சரஸ்வதி என்பதால் கல்வி தொடங்க சிறப்பு நட்சத்திரம். இது சமநோக்கு நாள் நட்சத்திரம் என்பதால், ஆடு மாடு கால்நடை வாங்க உகந்த நட்சத்திரம். அரசாங்கத்தில் உயர் பதவியை விரும்புகிற மக்கள் ஆறு மாத காலம் தொடர்ந்து அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் திருவண்ணாமலை சென்று வழிபாடு செய்து வர, நினைத்த பதவி அடைய முடியும். அருணன் என்றால் சூரியன். சலம் என்றால் மலை. திருவண்ணாமலைக்கு வேறொரு பெயர் சூரிய மலை . ஆகவே திருவண்ணாமலை செல்லும் பொழுது நல்ல ஒரு பலனை கொடுக்கிற ஆலயமாக இருக்கும். அதே சமயம் ஒரு வீட்டில் வாஸ்து ரீதியாக கிழக்கு மூடப்பட்ட விஷயங்கள் இருந்தால் திருவண்ணாமலை பரிகார தளமாக இருக்கும். கிழக்கு என்பது சூரியன் திசை. கிழக்கு மூடப்பட்டு ஒரு இல்லம் இருந்தால் அதனை பரிகார ஸ்தலமாக திருவண்ணாமலை எடுத்துக் கொள்ளலாம்.Chennai vastu tamil panchangam
_____________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – நற்செயல்
ரிஷபம்- ஊக்கம்
மிதுனம்- செலவு
கடகம்- நிம்மதி
சிம்மம்- அமைதி
கன்னி- ஏமாற்றம்
துலாம் – புகழ்
விருச்சிகம்- உதவி
தனசு- ஆதரவு
மகரம்- வெற்றி
கும்பம்- உயர்வு
மீனம் – சுகம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
________________________
#வரலாற்றில்_இன்று
#October_15
உலக தர நிர்ணய தினம்
இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது(1948)
சிறுவர் நூலான வின்னீ தி பூ வெளியிடப்பட்டது(1926)
விண்ணிலிருந்து முதலாவது நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு அப்போலோ 7 விண்கலத்தில் இருந்த மேற்கொள்ளப்பட்டது(1968
