பூஜையறை வாஸ்து puja room vastu

வாஸ்துபடி ஒரு இல்லம் என்பது எல்லா அறைகளும் இருக்கக்கூடிய அமைப்பாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு இல்லத்திற்கு பூஜை அறை அவசியமா? என்றால் என்னைப் பொருத்தளவில் அவசியம் என்றுதான் சொல்லுவேன். பண்டைய காலத்தில் வடகிழக்குப் பகுதியில் மட்டுமே பூஜை அறைகளை அமைத்தார்கள் . பூஜை அறைகள் என்று சொல்வதைவிட சாமி கோயிலின் அறை என்று வழிபாடு செய்தார்கள். மேலும் தென்மேற்கு அறையில் கூட சாமி கோயில் என்று வழிபாடு செய்தார்கள். ஆனால் வாஸ்து ரீதியாக இந்த இரண்டு அறைகளும் என்னைப் பொருத்தளவில் தவறாக பார்க்கப்படுகிறது. கடவுளைப் பற்றி ஒரு விளக்கம். ஒரு கோயிலில் சிலை கடவுள் இருக்கிற  கோயில் கருவறை நோக்கி காலை நீட்டி அவ்வை பிராட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அதனை பார்த்த கோயிலில் பூஜை செய்யும் பூசகர், இப்படி நீங்கள் உட்காரக்கூடாது. கொஞ்சம் மாற்றி அமருங்கள் என்று சொல்ல, அவ்வை பிராட்டி காலை வேறு பக்கம் திருப்பி வைத்துக்கொண்டார். கோயில் பூஜை முடிந்து நடை சாத்தும் நேரத்தில் பூசகரை பார்த்து, அவரை அழைத்து கடவுள் இருக்கிற திசையை நோக்கி கால் நீட்டி ஓய்வெடுத்தேன் அது தவறு என்று நீங்கள் சொன்னீர்கள். நீங்கள் சொன்ன வார்த்தைக்கு நான் கட்டுப் பட்டேன். இப்பொழுது நான் கால் நீட்டி ஓய்வெடுக்க வேண்டும். கடவுள் இல்லாத இடத்தை நீங்கள் கூற,  அதற்கு அர்ச்சகர் கடவுள் அனைத்து இடங்களிலும் இருக்கிறார். கடவுள் இல்லாத திசை  எது என்று என்னால் கூற  இயலாது. என கூறினார்.அதற்கு அவ்வை பிராட்டி சொன்னாள், காலை அருகில் வைத்து அமர்வதால் தவறு, அதுவே வெகுதூரத்தில் காலை நீட்டி அதில் தவறு கிடையாது. அதுபோல இல்லத்திலும் அனைத்து இடங்களிலும் பூஜை அறை வைத்துக் கொள்ளலாம். ஆனால் வாஸ்து சாஸ்திர ரீதியாக ஒரு சில நெருடல்கள் இருக்கும். அதற்கு தகுந்தாற்போல்  நாம் மாற்றி வைத்துக்கொள்வது நல்லது என்று இந்த இடத்தில் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்னை பொறுத்த அளவில் மிகச்சரியான பூஜை அறை அமைப்பு என்பது ஒரு இல்லத்தில் தென்கிழக்கு பகுதி மட்டுமே. ஆனால் ஒரு சில இல்லங்களில் அசைவ உணவு சமைக்கின்ற காரணமாக , அங்கு இறைவனை நாம் அவமதிப்பு செய்கிற நிலை உருவாகும். ஆகவே அந்த இடத்தில் கொஞ்சம் தவிர்த்துக்கொள்வது நல்லது.

ஒரு பூஜை அறை தனியாக அமைக்க விரும்பினால்   ஈசான மூலை தவிர்த்தும், நைருதி மூலை தவிர்த்து வைத்து கொள்ளலாம். வருண திசையிலோ, வாயு திசையிலோ தாராளமாக அமைத்துக் கொள்ளலாம். தெற்கு, மேற்கு பகுதிகளில் தாய் சுவர் சார்ந்த எடை அதிகம் இருக்கிற அமைப்பில் வடக்கு, கிழக்கு பார்த்து பூஜை அறை அமைத்துக் கொள்ளலாம். பூஜையறையில் எப்போதும் தூண் போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். பூஜையறை சுவர்கள் எப்பொழுதும் எடை இல்லாத லாப்ட் இல்லாத அமைப்பாக இருப்பது நல்லது. . கிழக்குப் பகுதி அறைகளில் பெரிய ஜன்னல்கள் அமைப்புடன் பூஜை அறை அமைத்துக்கொள்ளலாம். பிரதான வடகிழக்கு பகுதியில் பூஜை அறை அமைக்கக் கூடாது. ஒரு சிலர் நினைப்பார்கள் பிரம்மஸ்தான இடத்தில் பூஜை அமைத்தால் கோயில் போல மத்திய பாகத்தில் இருக்கும் என்று நினைப்பார்கள். என்னைப் பொறுத்தளவில் அது மிக மிகத் தவறு. பழைய நூல்களிலும், வடகிழக்குப் பகுதியில் பூஜை அறை அமைத்து கொள்ளுங்கள் அல்லது, பிரம்ம ஸ்தானத்தில் அமைத்துக் கொள்ளுங்கள். அல்லது தென்மேற்கு பகுதியில் அமைத்துக் கொள்ளுங்கள் என்பார்கள். எனது அறிவின் படி அதனைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.  பூஜையில் வைக்க கூடிய படங்கள் என்பது நமது நாபி கமலத்திற்கு மேலாக இருக்க வேண்டும். அதேசமயம் நித்திய பூஜை செய்கின்ற இல்லங்களில் இறை உருவங்களை  தரையோடு தரையாக வைத்துக்கொள்வதில் தவறில்லை. பூஜை செய்யும்போது தரையோடு தரையாக அமர்ந்து பூஜை செய்வது தவறு கிடையாது. ஆகவே ஆத்மார்த்த பூஜை செய்யாத இல்லங்களில் அதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் கிடையாது. பஞ்சாயன பூஜை செய்யக்கூடிய இல்லங்களில், விநாயகருக்குரிய சிலாஉருவமும்,  முருகருக்கு உரிய வேல்வழிபாடு, அதேபோல அம்பிகையின் சிலை உருவமும், சிவபெருமான் லிங்க சோனபத்ர உருவமும், மகாவிஷ்ணு வழிபாட்டில் சாலகிராம பெருமாளும் வைத்துக்கொள்வதில் தவறில்லை. எது தவறு என்று பார்த்தால், பெரிய உருவங்களை ஒரு பூஜைஅறையில் கட்டைவிரலுக்கும் மேலாக எக்காரணம் கொண்டும் சிலா உருவங்களை வைப்பது தவறு. அதேபோல நம்முடைய தலை உயர அமைப்பில் இறைவனின் படங்களை வைப்பதும் மிகப்பெரிய அளவில் தவறு. அந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. நமது மக்கள் பூஜை அறையில் செய்யக் கூடிய பெரிய தவறுகள் என்று பார்க்கும் பொழுது, பூஜை அறையை கிழக்கும், வடக்கும், தெற்கும் மூடப்பட்டு மேற்கு நோக்கி அமைப்பில் மேற்கு சுவரைப் பார்த்து வணங்குவது போல வைப்பார்கள். அல்லது வடக்கு,ம் கிழக்கும், மேற்கும் மூடப்பட்டு தெற்கு பார்த்தது போல் ஒரு சில இடங்களில் தெற்குவாசல் வீடுகளில் அமைத்திருப்பார்கள். இந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. பூஜை பொறுத்தளவில் பூஜை அறையின் கதவு என்பது, வெளிப்புற வாசலை பார்ப்பதாகவும் அல்லது, வெளிப்புற சுவரில் இருக்கும் ஜன்னலை பார்த்து இருக்க வேண்டும். ஒரு சுவரைப் பார்த்து மூடப்பட்ட அமைப்பில் வைப்பது என்பது மிக மிக தவறு. அப்படி இருக்கும் ஒரு சில இடங்களில் வாஸ்து ரீதியாக தற்காலிக பரிகாரமாக கண்ணாடி வைப்பது சாலச்சிறந்தது.ஆனால்  ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இறைவன் திருவுருவங்கள் பிரபஞ்சத்தை பார்த்தது போல இருக்க வேண்டும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *