பணம் இல்லையா? Don’t have money?

Don’t have money?

இல்லையா?.. அதாவது பணம் இல்லையா?.. பசை ஈரம் என்கிற வார்த்தைகள் நடைமுறையில் பணத்தை தான் நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவருக்கென்னப்பா வசகட்டு பார்ட்டி என்று சொல்வார்கள் . அவர் பெரிய கை என்று சொல்வார்கள். இதைத்தான் அரசு அலுவலகங்களில் ஏதாவது வேலை ஆக வேண்டும் என்று சொன்னால் கையை நனைத்தால் காரியம் நடக்கும் என்பார்கள். கையை நனைப்பதென்றால் கையில் பணத்தை வைப்பது என்று பொருள். ஆங்கில மொழியில் இதற்கு வேறு வார்த்தைகளும் உண்டு. ஆக ஒரு இல்லத்தில் வடகிழக்கு மூலை ஈரமாக இருந்தால் அந்த இல்லத்தில் பண செழிப்பு இருக்கும்.

அதே சமயம் வடகிழக்கு மட்டும் ஈரம் என்கிற விஷயத்தை வைத்தால் பத்தாது. தென்மேற்கு மூலை எப்பொழுதுமே வறண்டு இருக்க வேண்டும். அந்த பகுதியில் வறண்டு இருந்தால் தான் பணம் அந்த இடத்தில் வறண்டு போகாத நிலையை கொடுக்கும். அதே சமயம் அந்த தென்மேற்கு மூலை மூல மட்டத்திற்கு 90 டிகிரி இருக்க வேண்டும். 90 டிகிரி இல்லாத சுற்றுச்சுவர் ஆகட்டும், வீட்டின் உள் அமைப்பு ஆகட்டும், அந்த இடத்தில் பணம் சேராத ஒரு நிலையைக் கொடுக்கும். ஆக ஒரு இல்லத்தில் பணம் சேர வேண்டும் என்று சொன்னால் வடகிழக்கு சுத்தமாக, ஈரமாக இருக்க வேண்டும். தென்மேற்கு வறண்ட நேர்கோட்டில் இருக்க வேண்டும்.அங்கு மேல்நிலை தண்ணீர் தொட்டி நிரம்பி தண்ணீர் வழிந்து ஓடுவதுகூட ஈரம் தான். அதனையும் தவிர்க்க வேண்டும்.

I mean no money?.. Our forefathers used to say that the words ghu eram” mean money. They call him Kennappa Vasakatu Party. They say he has a big hand. This is what happens in government offices when they say that if something is to be done, it will happen. To dip one’s hand means to put money in one’s hand. There are other words for this in the English language. So if the north-east corner is wet in a house, there will be financial prosperity in that house.At the same time, if we put the matter of moisture only in the northeast, it is not enough. The south-west corner should always be dry. If the area is dry then the money will give the place that it is not dry. At the same time, the south-west corner should be 90 degrees to the source level. Be it a 90 degree non-circular wall or the internal structure of the house, it will give a position where money does not accumulate. So if it is said that money should accumulate in a house, the north-east should be clean and moist. Southwest should be in a dry straight line. There the overhead water tank is full and even the overflowing water is wet. That too should be avoided.

Loading