வாஸ்து சாஸ்திர கோட்பாடு Vastu theory

Vastu theory


வாஸ்து சாஸ்திர கோட்பாடு நெறிமுறைகளை, வாஸ்து விதிகளை கடைபிடிக்காமல் இருந்தால் அல்லது, அந்த விதிகள் இல்லாத வீட்டில் என்ன நடக்கும் என்கிற கேள்வி ஒரு சில மக்கள் பகுத்தறிவாக என்னிடம் கேட்பார்கள். அவர்களுக்கு எதிர்மறை செயல்களை சொல்வது என்பது என்னைப் பொறுத்தவரை அவர்களை பயப்படுத்துற நிகழ்வாக இருக்கும் . ஆகவே நிச்சயமாக சொல்ல மாட்டேன். ஆனால் இந்த பதிவின் வழியாக அதனை தெரியப்படுத்திக் கொள்வது நலம் என்று நினைப்பேன். அதேசமயம் என்னை இந்த மாதிரி கேள்வி கேட்கிற மக்களிடம், எனது இணையதளத்தில் நான் நீங்கள் கேட்கிற விஷயம் இருக்கும். போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவேன். அந்த வகையில் ஒரு தவறான வாஸ்து இருக்கக்கூடிய இல்லத்தில் எந்த மாதிரி செயல்களை கொடுக்கும் என்று பார்க்கும் பொழுது,அதனை தெரிந்து கொள்வது நலம்.

ஒரு இல்லத்தில் வசிக்கிற மக்களுக்கு உடல் நலக்குறைவு , துயர மரணங்கள், துயர சம்பவங்கள், அவலமான நிலை, அதிர்ஷ்டம் கிடைக்காது துரதிஷ்ட நிலை, கணவன் மனைவியை இழத்தல், அல்லது மனைவி கணவனை இழத்தல், பெற்றோர் பிள்ளையை இழத்தல், பிள்ளை பெற்றோரை இழத்தல், சகோதரர் அல்லது சகோதரியை இழந்து விடுவது, தேவையில்லாத வம்பு வழக்குகள், குடும்பத்தில் இருக்கிற மக்கள் ஒருவரை ஒருவர் வெறுத்து சண்டையிட்டுக் கொள்ளுதல், அக்கம்பக்கத்தாரோடு அனுசரையின்றி சண்டையிடுதல் , பேரும் புகழும் செல்வாக்கும் மன அமைதியும் இழந்து போவது, வியாபாரத்தில், தொழிலில், அரசியலில் , தொழில் உற்பத்தியில், வேலை சார்ந்த நிகழ்வுகளில் நிலையற்ற தன்மை, விபத்துக்களை ஏற்படுத்திக் கொள்வது, விபத்துக்களை ஏற்படுத்துதல் , கொலை செய்வது, தற்கொலை முயற்சி, திருட்டு நடப்பது,திருட்டு கொடுப்பது ஒழுக்க கேடாக நடந்து கொள்வது, ஓடிப் போவது, பைத்தியம் பிடிப்பது, மனைவி கருவுறாமல் இருப்பது ,அதே சமயம் கருவுற்றாலும் ஊனமற்ற மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பது, இதுபோல என்ன என்ன எதிர்மறை செயல்கள் உண்டோ?. அது சார்ந்த நிகழ்வுகளை ஒரு இல்லத்தில் எட்டு திசைகளும் வைத்திருக்கின்றன . எட்டு திசைகளும் வாஸ்து விதிகளுக்கு வரும்பொழுது மேற்கூறிய எதிர்மறை செயல்கள் ஒரூ இல்லத்தில் நிச்சயமாக நடக்காது. ஜாதகத்தில் அந்த நிலை இருந்தாலும் கூட, ஒரு இல்லம் உங்களை மழைக்கு குடை பிடிப்பது போல காப்பாற்றி கூட்டிக்கொண்டு செல்லும்

A few people will rationally ask me the question of what happens in a house that does not adhere to Vastu Shastra principles, rules of Vastu or what happens in a house without those rules. Saying negative things to them would be a frightening event for me. So I definitely won’t say. But I think it is good to make it known through this post. But to the people who ask me this kind of question, on my website I will ask you. I would say go and take care of it. In that way, it is good to know what kind of actions it will give in a house where there may be a wrong Vastu.
Illness, tragic deaths, tragic incidents, unfortunate condition, bad fortune, loss of husband and wife, or loss of wife or husband, loss of parents and children, loss of parents, loss of brother or sister, unnecessary fuss cases. , people in the family will hate each other and fight with each other, fighting with neighbors without approval, loss of wealth, fame, influence and peace of mind, instability in business, profession, politics, industrial production, work-related events, causing accidents, causing accidents, murder, suicide attempt, Stealing, giving stolen goods is immoral behavior, running away, going crazy, wife not getting pregnant, and at the same time giving birth to children with mental retardation even if they are pregnant, what are the negative actions like this? All the eight directions in a house hold related events. When all the eight directions come to Vastu rules, the above negative actions will definitely not happen in a house. Even if you have that position in your horoscope, a house will protect you like an umbrella from the rain

Loading