காலண்டர் வாஸ்து Overhead Tank Vastu

Overhead Reservoir Tank Vastu

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

23.9.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 23.9.2022 சுபக்கிருது; புரட்டாசி மாதம்.6ந் தேதி வெள்ளிக்கிழமை. இரவு 2.42. வரை திரயோதசி திதி . பிறகு .தே சதுர்தசி திதி இரவு 3.36 வரை மகம் நட்சத்திரம். பிறகு பூரம் நட்சத்திரம்.Overhead Reservoir Tank Vastu

இன்றைய இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am.

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு  .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.

வாஸ்து வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வீட்டின் மொட்டை மாடியில் தென்மேற்கு திசையில் மேல்நிலை தண்ணீர் தொட்டியை அமைக்க வேண்டும். இந்த விதியை உறுதியாகப் பின்பற்றுங்கள். தண்ணீர் தொட்டி வகையில் முதல் தரமாக இருக்கக்கூடிய விஷயம் சிமெண்ட், செங்கல், கான்கிரீட் அமைப்பில் அமைத்துக் கொள்வது முதல் தரமானது . இரண்டாவது வகையாக பிளாஸ்டிக் டேங்க்கை உபயோகப்படுத்தலாம். ஆனால் அதில் வெயிலில் இருக்காத அமைப்பில் அமைத்துக் கொள்ளும் பொழுது நல்ல பலன் கொடுக்கும். மேல்நிலைத் தண்ணீர் தொட்டியை பொறுத்தளவில் நான் சொல்கிற வாஸ்து விதிகளின்படி 90 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட வேண்டும். மேல்நிலைத் தண்ணீர் தொட்டியை பொறுத்த அளவில் பழைய வீடுகளில்  வட கிழக்கு பகுதியில் கூட தண்ணீர் தொட்டிகள் இருக்கும் . இந்த பதிவை பார்க்கின்ற மக்கள் உடனடியாக அதனை அப்புறப்படுத்தி விட்டு சிமெண்ட் மூலம் கட்டவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியை தாராளமாக உடனடியாக வைப்பது நல்லது.

வீட்டில் மாடியில் வடகிழக்கில் தண்ணீர் தொட்டி இருக்கும்பொழுது அந்த வீடுகளில் இருக்கும் வாரிசுகளின் நிலையில் பாதிப்பை கொடுக்கும். வடமேற்கு தண்ணீர் தொட்டி இருக்கின்ற போது அந்த வீட்டின் பயணப்படுகிற நிகழ்வு தடையை கொடுக்கும். தென்கிழக்கில் தண்ணீர் தொட்டி இருக்கும் பொழுது அந்த இல்லத்தின் பெண்கள் சார்ந்த,மற்றும் தொழிற்சாலை நிலையில் வளர்ச்சியை கொடுக்காது. தெற்கு மத்திய பாகத்திலும், மேற்கு மத்திய பாகத்திலும் தாரளமாக இருக்கலாம். ஆனால் இதில் முதல் தரமான பலன் என்பது தெற்கு மத்திய பாகத்தில் இருக்கிற தண்ணீர் தொட்டிக்கு தான். எது எப்படி இருந்தாலும் இந்த ஆராய்ச்சியை விட்டுவிட்டு, தென்மேற்கு பகுதியில் கிழ மேல் நீளத்தில் தண்ணீர் தொட்டி வையுங்கள். அதனையும் தென்வடல் நிலத்தில் வைக்காமல் இருப்பது நல்லது.ஆக தண்ணீர் தொட்டி என்பது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.Overhead Reservoir Tank Vastu
—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பொறுமை
ரிஷபம்- பேராசை
மிதுனம்- உயர்வு
கடகம்- தெளிவு
சிம்மம்- கவனம்
கன்னி- செலவு
துலாம் – மகிழ்ச்சி
விருச்சிகம்- உழைப்பு
தனசு- எதிர்ப்பு
மகரம்- பாராட்டு
கும்பம்- வெற்றி
மீனம் – வரவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_23

சவுதி அரேபியா தேசிய தினம்(1932)

மொசிலா பயர் பாக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது(2002)

நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது(1846)

ஹேர்மன் ஹொலரித், கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்(1884)

நின்டெண்டோ கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது(1889)

______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,

கடைகள்,

,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,

வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான

ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.

Loading