Kitchen vastu today
ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
24.9.2022
#தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)
தினசரி நாள்காட்டி 24.9.2022 சுபக்கிருது; புரட்டாசி மாதம்.6ந் தேதி .சனிக்கிழமை இரவு 3.14. வரை சதுர்தசி திதி . பிறகு #மகாளய_அமாவாசை திதி. இரவு 4.53 வரை பூரம் நட்சத்திரம். பிறகு உத்திரம் நட்சத்திரம்.
இன்றைய இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:
ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am.
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .
__________________
வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.Kitchen vastu today
இந்த ஒரு சாண் வயிற்றில் தான் மனித வாழ்க்கையின் பயணம் இருக்கிறது. எப்படி உணவு வாய் வழியாக சென்று உடலில் பயணம் செய்து விடியற் காலையில் கழிவுகளாக வெளியேறுகிறதோ, அது போல தான் மனித வாழ்க்கையின் பயணங்கள் கூட இருக்கிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொல்வார்கள் ஒரு சாண் வயிறு இல்லாட்டா!! உலகத்தில் ஏது கலாட்டா!! என்று நகைச்சுவையாக பாடல் வழியில் சொல்வார்கள். வயிற்றுக்கு உணவு கொடுக்கத்தான் ஓடி ஓடி உழைக்கின்றார்கள் மக்கள். அந்த வகையில் உணவு கொடுக்கும் சமையல் அறை என்பது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். எப்பொழுதுமே இல்லத்தின் சமையலறைகள் தென்கிழக்கில் இருக்க வேண்டும். அது தென்கிழக்கு பகுதியில் இருக்கிறதா,?..என்பதனைகவனித்து அமைக்க வேண்டும். முக்கியமாக தென்கிழக்கு என்பது 135 டிகிரிகள்.ஆக 135 டிகிரிகளில் அது இருக்கிறதா?.அல்லது 155 தெற்கு டிகிரிகளில் இருக்கிறதா? அல்லது 115 டிகிரிகளில் கிழக்கில் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்டு சமையலறை அமைக்க வேண்டும் . இந்த தவறுகள் எங்கு நடக்கும் என்று சொன்னால் திசை திரும்பி இடங்களிலும், நீளமான மனை இருக்கக்கூடிய இடங்களிலும், நீளமான கட்டிடங்கள் இருக்கக்கூடிய இடங்களிலும் நிச்சயமாக தவறு நடந்து விடும்.அந்த தவறை திருத்தும் முகமாக மிகச் சரியான முறையில் சமையலறை அமைக்க வேண்டும்.கேஸ் சிலிண்டர் போன்ற விஷயங்களை வீட்டில் வெளி பகுதியில் வைத்துக் கொள்வது நல்லது. ஒரு சில மக்கள் அதில் தவறான ஒரு விஷயத்தை செய்து இருப்பார்கள். சிலிண்டரின் வெளிப்பகுதியில் அமைப்பது போலவும், உள்ளே வைத்துக் கொள்வது போலவும் உள்ளே ஒரு மறைத்து வைக்கிற நிகழ்வாக, வீட்டில் உள்ளே ஒரு தடுப்புகளை தென்கிழக்கு மூலை வீட்டிற்கு உள் பகுதியில் இல்லாத அமைப்பாக ஏற்படுத்தி இருப்பார்கள்.இந்த மாதிரி நூறு சதவீதம் தவறுகளை செய்ய வேண்டாம்.Kitchen vastu today
வீட்டுக்கு வெளியே தனி அறைகளை ஏற்படுத்தி அதற்கு பிறகு சிலிண்டர் வைத்துக் கொள்வது தவறு கிடையாது. ஆக சமையல் அதை சார்ந்த விஷயங்களில், சமையல் அறையில் எப்பொழுதுமே உச்சப் பகுதிகளில் ஜன்னல் எடுக்க வேண்டும். உச்சப் பகுதிகளில் வாசல் இருக்க வேண்டும். உச்சப் பகுதிகள் என்று சொன்னால் வடக்கும், வடகிழக்கு பகுதியும், தெற்கின் தென்கிழக்கு பகுதியும், கிழக்கின் வடகிழக்கு பகுதியும், மேற்கின் வடமேற்கு பகுதியும் ஜன்னல்களும், வாசல்களும் இருக்க வேண்டும். ஆனால் சமையல் அறையில் வாசல் மட்டும் கிழக்கு பகுதியில் வருவது கடினம். மற்றவகையில் வாஸ்து வகையில் வைத்துக் கொள்ளலாம். வடமேற்கு சமையலறையை பொறுத்த அளவில் தொழில் நிறுவனங்களில், ஹோட்டல் சார்ந்த உணவகங்களில் தாராளமாக அமைத்துக் கொள்ளலாம். அதனையும் வாஸ்து முறைப்படி அமைத்துக் கொள்வது சாலச்சிறந்தது.
