தமிழ் காலண்டர் 26.10.2022


இன்று #சந்திர_தரிசனம்

26.10.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 02 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி

தினசரி நாள்காட்டி 26.10.2022 #சுபக்கிருது; #ஐப்பசி மாதம்.9ந் தேதி .  புதன்கிழமை மதியம் 2.44 மணி வரை பிரதமை திதி பிறகு துதியை திதி. இன்று மதியம் 1.11 வரை சுவாதி நட்சத்திரம்.பிறகு விசாகம் நட்சத்திரம்.

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.

நட்சத்திரங்கள் சார்ந்த பதிவுகளின் வழியாக ஒவ்வொரு நட்சத்திரங்களாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் பனிரெண்டாவது நட்சத்திரமாக இருக்கக்கூடிய உத்திரம் நட்சத்திரம் சார்ந்த ஒரு சில கருத்துக்களை இந்த பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம். உத்திரம் நட்சத்திரத்தின் உருவம் கட்டில் கால் போன்றும் அல்லது கம்புகள் போன்றும் இருக்கும். உத்திர நட்சத்திர அதிபதி சூரிய பகவான் இந் நட்சத்திரத்தின் அதிதேவதையும் சூரிய பகவான். இந்த நட்சத்திரத்தின் வசிப்பிடம் நீர்நிலைகள். உத்திர நட்சத்திரத்தின் உருவம் கட்டில் கால் என்கின்ற காரணத்தால் வீட்டிற்கு தேவையான கட்டில் மேஜை நாற்காலி போன்ற பொருள்கள் வாங்க உகந்த நட்சத்திரம் உத்திரம். நட்சத்திரம் சிறு குச்சி கம்பு போன்று இருக்கின்ற காரணத்தால் ஆண்களின் குறி என்பது கூட கம்பு போன்றது தான் காட்சியளிக்கும். ஆகவே கர்ப்பதானம் செய்வதற்கு ஏற்ற நட்சத்திரம்.மற்றும் சாந்தி மூகூர்த்தம் வைக்க உத்திரம் சிறப்பு. உத்திரம் நட்சத்திரத்தன்று விரதம் இருந்து மாலை நேரம் சிவபெருமானை வழிபட்டு வந்தால் ஆண்மை குறை நீங்கும். ஆண்மை குறை இருக்கிற மக்கள் உத்திரம் நட்சத்திரத்தன்று போகத்தில் ஈடுபட குழந்தை பிறப்பில் வெற்றி கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்திற்கு சுவான நட்சத்திரம் என்று பெயர். ஆகவே நாய் வாங்குவதற்கு ஏற்ற நட்சத்திரம் உத்திரம்.

உத்திரம் நட்சத்திரம் சிறு குச்சிகள் போல தோற்றம் அளிப்பதால், காது குத்த உகந்த நட்சத்திரம். ஆயுத பயிற்சி செய்ய சிறந்த நட்சத்திரம். உத்திரம் நட்சத்திரத்தின் வசிப்பட நிலை என்பது நீர் நிலைகளாக இருக்கின்ற காரணத்தால், குளம் கிணறு வெட்ட உகந்த நட்சத்திரம். ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்து லக்ன கேந்திரங்களில் இருந்தால், ஜாதகம் கல்வி வேள்விகளில் சிறந்து சிறந்து விளங்குவார்கள். இந்த யோகம் ஒருவருக்கு இல்லாமல் இருந்தாலும், உத்திரம் நட்சத்திரம் வரும் நாளில் சங்கரன் கோயில் சென்று சங்கரநாராயண பெருமானை தரிசனம் செய்தால் கல்வி இயல்புகளில் சிறந்து விளங்க முடியும். கல்வியை தொடங்க ஏற்ற நட்சத்திரம் உத்திரம் . ராசி கட்டத்தில் சூரியனுடைய வீடாக இருக்கக்கூடிய சிம்மத்தையும், புதனுடைய வீடாக இருக்கக் கூடிய கன்னியையும் இணைக்கின்ற நட்சத்திரம். ஆக சூரியனுடைய வீட்டிற்கும் புதனுடைய வீட்டிற்கும் ஒரு இணைப்பு பாலமாக இருக்கிற நட்சத்திரம் உத்திரம். ஆகவே மச்சான் மைத்துனர் மாமன் உறவுகளில் சண்டை சச்சரவு இருக்கிற மக்கள் இந்த நட்சத்திரம் அன்று சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் வணங்கி வரும் பொழுது அவர்களின் உறவு பலப்படும் எதிர்நிலை மாறும்.

_____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –      லாபம் 
ரிஷபம்- நலம்
மிதுனம்- தனம்
கடகம்- ஆர்வம்
சிம்மம்- வரவு
கன்னி- ஊக்கம்
துலாம் – வருத்தம்
விருச்சிகம்- போட்டி
தனசு- முயற்சி
மகரம்- இன்பம்
கும்பம்- நிறைவு
மீனம் –   மகிழ்ச்சி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#October_26

ஆஸ்திரியா தேசிய தினம்(1955)

அமெரிக்க செனட் அவை உறுப்பினர் ஹிலாரி கிளிண்டன் பிறந்த தினம்(1947)

அமெரிக்கா, அந்நாட்டு தேசப்பற்று சட்டத்தை நிறைவேற்றியது(2001)

நார்வே, ஸ்வீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது(1905)

ஆஸ்திரியா அணிசேரா நாடாக தன்னை அறிவித்தது(1955)

Loading