சொந்த வீடு அமைய?


சொந்த வீடு, மனை,
நிலபுலன் அமைய வேண்டுமா?
    
           
ஒரு மனிதவாழ்வில் ப  அடிப்படைத் தேவைகள்  குடியிருக்க வீடும், உடுத்த உடையும்,உண்ண உணவும் ஆகும். அதில் வீடு என்பது மிக முக்கியம்., அந்தவகையில் சொந்த வீடு என்றால் எல்லோருக்குமே வேண்டும். இது யாருக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றால் வாழ்க்கையில் வாடகை வீட்டிலேயே குடியிருக்கும் மக்களுக்கு முக்கியம்.
சொந்த வீடு, மனை, நிலபுலன் என்றால், இவற்றுக்குக் காரகனாக அமைபவர் ஜாதகத்தில் செவ்வாய் பகவான். மற்றும் நான்காம் வீடு . அதேசமயம் சரியான வாடகை வீட்டில் குடியிருக்கும் போதும் நல்ல வீடு அமையும்.மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் பரந்த விரிந்து இருக்கும் நிலபுலன்கள், மனை குடியிருப்பு பிரிக்க வைக்கும் செயலை செய்ய வைக்கும் நிலை, போன்றவற்றுக்கான காரகன் செவ்வாய்.

சகோதரி சகோதரர்களுக்கு இடையே இடப்பிரச்சனை உண்டாகுமா? பூர்வீகச் சொத்தில்  தகராறு மற்றும், பூர்வீகச் சொத்துகள்  பிரச்னை,
சொந்தமாக வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் பங்களா போன்றவை செவ்வாய் பகவான் தயவு என்பது 2,4,6,10 தொடர்பில் இருந்தால்தான்  பெறமுடியும். ரியல் எஸ்டேட், நிலம் வாங்கி விற்கும் தொழில், கட்டடத் தொழில், சிவில் இன்ஜினியரிங் மற்றும் என்னைப்போல வாஸ்து தொழில் போன்றவற்றில் புகழும்,செல்வமும் குவியும்.

செவ்வாய்தான் பூமி சார்ந்த விசயத்தில் மங்களங்களை அருள்பவர். செவ்வாய் கிழமையில் சொத்துகள் வீடுகள், நிலங்கள் வாங்குவது, விற்பது பற்றிப் பேசலாம். இடம், தோட்டம், நிலத்தைப் போய்ப் பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.
சகோதரர்களிடையே பிரச்னை இருந்தால் இந்நாளில் பேசித் தீர்த்துக்கலாம். பூமி பூஜைக்கு சுத்தம் செய்யலாம்.  வீடு மாற புதிய வீடு சுத்தம் செய்ய நன்று.
செவ்வாய்க்குரிய கடவுள் முருகன். எல்லா முருகன் தலங்களும் செவ்வாய் பரிகாரத் தலங்களே. ஆனால் ஜாதகத்தில் செவ்வாய்2.4.6.10 பாவங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

அறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனை வணங்கினால், செவ்வாயால் உண்டாகும் பிரச்னைகள் விலகும்.

ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் 5,9,8,12 பாவங்களை தொடர்புகொண்டு பலமற்று இருந்தால் வீடு அமையும் யோகம் தடைப்படும்.

ஒருசிலருக்கு நிலம் அமைந்துவிட்டது. ஆனால் வீடு கட்ட தாமதம் ஆகிறது, அப்படி என்றால், ஒருமுறை திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரை வணங்கி ஆலயத்திலே ஒரு இரவு நேரம் தங்கி, கடல் நீரை எடுத்து வந்து மஞ்சளுடன் கலந்து, வீடு கட்டுகின்ற நிலத்தைச் சுற்றித் தெளிக்க வேண்டும். அப்படிச் செய்தால், நிச்சயம் தடைகள் விலகும்.

ஒருசிலருக்கு வீடு, வாசல் நிரந்தரமாக அமையாது. அடிக்கடி இடம் மாறுபவர்கள், செம்பு சார்ந்த பொருள்களை  தானம் கொடுப்பது சிறந்த பரிகாரம். இதனால், நிச்சயம் வீடு வாங்கும் வாய்ப்பு வந்து சேரும்.
முருகப் பெருமானின் ஒருசில தலங்கள் மண், மனை யோகம் தரும்.
வீடுமனை அமையாதவர்களுக்கு,
நிலமே கிடைக்காதவர்களுக்கு, வீடு அமைவதே குதிரைக் கொம்பாக இருப்பவர்களுக்கு, வாடகை வீட்டிலேயே வாழ்க்கை முடிந்துவிடுமோ? என்று இருக்கும் மக்களுக்குவழிபாடு உள்ளது.
வாழ்க்கையில் ஒரு தடவை சிறுவாபுரி முருகரை தொடர்ந்து ஒன்பது செவ்வாய்களில் வணங்கி வர, வாழ்வில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். இடம் வாங்கி, வீடு கட்டும் ஆசை நிறைவேறும்.
ஒன்பது செவ்வாய்க்கிழமைகள், தொடர்ந்து கோயிலுக்குச் சென்று,சொந்த வீட்டில் குடியேறும் வாய்ப்பு கிடைக்கும்.

இத்தலத்துக்குரிய திருப்புகழான ‘அண்டர்பதி குடியேற’ என்ற திருப்புகழை தொடர்ந்து பாராயணம் செய்துவர , ஒருகாலகட்டத்தில் சொந்த வீடு அமையும். இன்றும் சிறுவாபுரி முருகன் அருளால் சொந்த வீடு என்பது உறுதி.

உங்கள் இல்லத்திற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா?
உங்களுக்கு சொந்த வீடு அமையுமா? .உங்களுக்கு சொந்த தொழிலா?..அல்லது வேலை செய்யும் நபரா?.  ஜாதக பலன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.அதற்கு பிறகு முடிவு செய்யுங்கள். தற்பொழுது நடக்கும் தசாபுத்தி பலாபலன் & வாழ்க்கை முழுவதும் ஜோதிட பலன்கள் தொலைபேசி வழியாக ஆலோசனை.

Loading