
தினசரி நாள்காட்டி 26.11.2022 #சுபக்கிருது; #கார்த்திகை மாதம்.10ந் தேதி .சனிக்கிழமை இரவு 7.30 வரை வ.திருதியை திதி பிறகு சதுர்த்தி திதி. மதியம் 2.46 வரை மூலம் நட்சத்திரம் பிறகு பூராடம் நட்சத்திரம்.
ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம். vastu tips today
பசை இல்லையா?.. அதாவது பணம் இல்லையா?.. பசை ஈரம் என்கிற வார்த்தைகள் நடைமுறையில் பணத்தை தான் நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவருக்கென்னப்பா வசகட்டு பார்ட்டி என்று சொல்வார்கள் . அவர் பெரிய கை என்று சொல்வார்கள். இதைத்தான் அரசு அலுவலகங்களில் ஏதாவது வேலை ஆக வேண்டும் என்று சொன்னால் கையை நனைத்தால் காரியம் நடக்கும் என்பார்கள். கையை நனைப்பதென்றால் கையில் பணத்தை வைப்பது என்று பொருள். ஆங்கில மொழியில் இதற்கு வேறு வார்த்தைகளும் உண்டு. ஆக ஒரு இல்லத்தில் வடகிழக்கு மூலை ஈரமாக இருந்தால் அந்த இல்லத்தில் பண செழிப்பு இருக்கும்.
அதே சமயம் வடகிழக்கு மட்டும் ஈரம் என்கிற விஷயத்தை வைத்தால் பத்தாது. தென்மேற்கு மூலை எப்பொழுதுமே வறண்டு இருக்க வேண்டும். அந்த பகுதியில் வறண்டு இருந்தால் தான் பணம் அந்த இடத்தில் வறண்டு போகாத நிலையை கொடுக்கும். அதே சமயம் அந்த தென்மேற்கு மூலை மூல மட்டத்திற்கு 90 டிகிரி இருக்க வேண்டும். 90 டிகிரி இல்லாத சுற்றுச்சுவர் ஆகட்டும், வீட்டின் உள் அமைப்பு ஆகட்டும், அந்த இடத்தில் பணம் சேராத ஒரு நிலையைக் கொடுக்கும். ஆக ஒரு இல்லத்தில் பணம் சேர வேண்டும் என்று சொன்னால் வடகிழக்கு சுத்தமாக, ஈரமாக இருக்க வேண்டும். தென்மேற்கு வறண்ட நேர்கோட்டில் இருக்க வேண்டும்.அங்கு மேல்நிலை தண்ணீர் தொட்டி நிரம்பி தண்ணீர் வழிந்து ஓடுவதுகூட ஈரம் தான். அதனையும் தவிர்க்க வேண்டும்.
______________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – எதிர்ப்பு
ரிஷபம்- பரிவு
மிதுனம்- நிறைவு
கடகம்- ஓய்வு
சிம்மம்- நலம்
கன்னி- புகழ்
துலாம் – யோகம்
விருச்சிகம்- பயம்
தனசு- ஆதாயம்
மகரம்- மகிழ்ச்சி
கும்பம்- வரவு
மீனம் – சிந்தனை
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
_____________
இன்றைய வரலாறு
#today_history_november_26
இந்திய வெண்மைப்புரட்சி நாயகன்’ வர்கீஸ் குரியன் பிறந்த தினம்
உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்
மும்பை பயங்கரவாத தாக்குதல் தினம் (2008)
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது(1949)
நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1842)
நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா, அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்(2001)