புதன் வாசல் வாஸ்து 27.11.2022 calendar

27.11.22 calendar vastu tamil

தினசரி நாள்காட்டி 27.11.2022 #சுபக்கிருது; #கார்த்திகை மாதம்.11ந் தேதி .ஞாயிறு மாலை 4.26 வரை வ.சதுர்த்தி திதி பிறகு பஞ்சமி திதி. மதியம்   12.26 வரை பூராடம் நட்சத்திரம் பிறகு உத்திராடம் நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள் .


__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம். vastu tips today

வாசல் வைப்பது என்பது ஒரு இல்லத்தின் தலைவாசல் என்பது எனது ராசிக்கு வடக்கு, எனது ராசிக்கு கிழக்கு, எனது ராசிக்கு மேற்கு சொல்லுகிற  அது சார்ந்த மக்களை சந்தித்து இருக்கிறேன். அதாவது அதன் விளக்கம் என்பது எனக்கு தெரியாததெல்லாம் கிடையாது. வீட்டின் நீளத்தை எந்த பக்கத்தில் வாசல் வைக்க முடிவு செய்திருக்கிறோமோ, அந்த பக்கத்தில் இருக்கும் அளவை 9 பாகங்களாக பிரித்து அதில் சுப கிரகங்கள் இருக்கக்கூடிய இடத்தில் வாசல் வைக்க வேண்டும் என்கிற ஒரு டூபாக்கூர் விதிகளை நமது அந்த கில ஜோதிட மக்கள் கொடுத்து சென்று விட்டனர். இது முழுக்க முழுக்க அந்த கால மார்கெட் விளம்பரம். அதாவது சூரியன் அசுப கிரகம், சந்திரன் பாதி சூபர் பாதி அசூபர் , செவ்வாய் அசூப கிரகம், ஆகவே புதன் குரு சுக்கிரன் சார்ந்த இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் . சனி ராகு கேதுகளை அசுப கிரகங்கள் என்பதால் விட்டு விடுங்கள் என்று, ஒன்பது கிரகங்கள் சார்ந்து நான் சொல்லிய, இந்த ஒன்பது கிரகங்களையும் வரிசைப்படுத்தி புதன் குருவில் வாசல் வைக்க வேண்டும் என்று சொல்வார்கள்.சுக்கிரனை விட்டு விடுவார்கள்.

அதிலும் ஒரு சில டுபாக்கூர் வாஸ்து நிபுணர்கள் புதன் வாசல் வைக்க வேண்டும். கதவை புதன் அமைப்பில் வைக்க வேண்டும் . புதன் வாசல் என்று ஒரு கதவு இருக்கிறது என்று பொய் சொல்கிற வாஸ்து நிபுணர்களும் இருக்கின்றார்கள். இந்த இடத்தில் ஜோதிடத்தில் வேண்டுமானால் சுபர் அசுபர் பகை நீச்சம் உச்சம் என்கிற விஷயம் இருக்கும். ஆனால் வாஸ்துவில் மூன்றே மூன்று வார்த்தைகள் தான், உச்சம், நீச்சம், சமம் . ஆக ஒரு வட்டத்தை டிகிரிகளில் வடக்கு 360 இலிருந்து கிழக்கு 90 டிகிரி வரையில் உச்சம் . இதில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் உங்களுக்கு பொருந்துகிற அமைப்பில் வாசல் வைத்துக் கொள்ளலாம். அதே சமயம் மொத்த வீட்டிற்கு பார்க்காமல், கூடவே அந்த அறைகளுக்கும் அந்த விஷயத்தை பொருத்திப் பார்க்க வேண்டும். அதேபோல மேற்கு என்று பார்க்கும் பொழுது 270 டிகிரி இல் இருந்து 315 டிகிரி வரை  உச்சம். 180 டிகிரிகள் இருந்து 135 டிகிரி வரை உச்சம். இதனைத் தவிர மற்ற பகுதிகள் எல்லாமே நீச்சம். ஆக இந்த டிகிரி இருக்க கூடிய இடங்களில் எந்த வாசலும் வரக்கூடாது. அதாவது தலைவாசல் மட்டுமே. உள்வாசல்கள் பற்றி கணக்கு கிடையாது. உள் வாசலில் அந்த இடத்தில் உச்சப் பகுதியாக பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். இதனை விடுத்து எனக்கு புதன் வாசல் தான் வேண்டும். என்கிற விஷயத்தை எனக்கு ராசிப்படி மேற்கு வாசல் தான் என்று சொல்வது அறியாது சொல்வதாகும் . ஆக இந்த இடத்தில் புதன் வாசல், எனக்கு ராசிப்படி இந்த வாசல் என்று சொல்லுகிற மக்கள் தயவு செய்து என்னை வாஸ்து ஆலோசனைக்கு அழைக்க வேண்டாம். நான் சொல்வதைக் கேட்பதாக இருந்தால் என்னை அழையுங்கள்.அப்படி அழைத்து நான் சொல்வதை கேட்பதாக இருந்தால் அழையுங்கள் வேண்டாம். அதாவதுஎன்னை வரச்சொல்லவில்லை என்றால் உங்களுக்கும் பணம்  மிச்சம்.எனக்கும் நேரம் மிச்சம்.

Loading