சென்னை வாஸ்துவிற்கும் மற்ற வாஸ்து நிபுணர்களுக்கும் என்ன வித்தியாசம்? காலண்டர் 21.11.2022

Chennai vastu calendar 21.11.22

#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram #vastushastra_tips
#Vastuconsultantchennai

தினசரி நாள்காட்டி 21.11.2022 #சுபக்கிருது; #கார்த்திகை மாதம்.05ந் தேதி .திங்கட்கிழமை. காலை 10.08 வரை த்வாதசி திதி பிறகு தே.திரயோதசி திதி.  இரவு  12.01 வரை சித்திரை பிறகு சுவாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று  பகல் நாள்  முழுவதும் நல்ல யோகநாள் குறைவு   .


__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

சென்னை வாஸ்து ஜெகன்னாதனுக்கும் Vastu Chennai | வாஸ்து நிபுணர் சென்னை, Vastu Shastra Consultants Chennai,Best vastu consultant in Chennai,Chennai Vastu,Andal kovil vastu,வாஸ்து நபர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்கிற கேள்வியை நிறைய மக்கள் என்னிடம் கேட்பார்கள்.அவர்களுக்கான எனது பதிவு என்பது, என்னை பொறுத்த அளவில் கோயில் சார்ந்த நிகழ்வுகளுக்கு வாஸ்து பார்க்க மாட்டேன். அதற்கு காரணம் இருக்கிறது. முடிந்த அளவு முன்னின்று செய்யக்கூடாது என்று சொல்லுவேன். ஆலயங்களை பொறுத்த அளவில் ஆகம விதி  என்கிற விஷயம் மிக மிக முக்கியம். அதே சமயம் ஆதி தெய்வமாக இருக்கக்கூடிய அந்த சாமியின் பிறைமண் எடுத்து வந்து அந்த ஆலய நிகழ்வுகளை தொடங்க வேண்டும். கும்பாபிஷேகம், ஆலய கட்டமைப்பு போன்ற விஷயங்களை தனிப்பட்ட முறையில் ஒரு நபர் செய்யக்கூடாது. பத்தாயிரக்கணக்கான மனிதர்கள் சேர்ந்து செய்கிற நிகழ்வாக இருக்க வேண்டும்.

கோயிலுக்கு வாஸ்து பார்க்க மாட்டேன் இதுதான் எனக்கும் மற்ற வாஸ்து நபர்களுக்கும் உள்ள வித்தியாசம். அதே சமயம் ஒருவர் இல்லத்தில் வாஸ்து குறைபாடு இருந்து என்னை அழைக்கும் பொழுது அவர்களிடம் நான் போய் அவர்களை பயமுறுத்த மாட்டேன். ஏன் எனில் அவர்கள் ஏற்கனவே பல பிரச்சனைகளில் இருப்பார்கள். அவர்களின் பிரச்சனைக்குரிய விஷயங்களை நாசுக்காக சொல்லி, அவர்களின் வாஸ்து பிரச்சனையில் இருந்து அவர்களை நான் வெளியேற்ற தான் முடிவு செய்தேனே தவிர, அவர்களை மிரட்டுகிற செயலை செய்ய மாட்டேன். வட மேற்கில் ஒரு தவறு இருக்கிறது உன்னுடைய மகள் ஓடிப் போய் விடுவார்கள், தென்மேற்கு தவறு இருக்கிறது, வடகிழக்கு தவறு இருக்கிறது. இந்த வீட்டில் ஆண் மரணம் அடைந்து விடுவார்கள் என்று தவறான ஒரு வாஸ்து பிரச்சாரம் செய்ய மாட்டேன்.அப்படி இருக்கிறதா? பயப்பட வேண்டாம் உடனடியாக அதனை அப்புறப்படுத்துகிற வேலையை பாருங்கள் என்று தான் சொல்வேன். தவிர இது இருந்தால் இது நடக்கும். அது இருந்தால் அது நடக்கும். என்கிற தேவையில்லாத பயமுறுத்தல்கள் என்னிடம் கிடையாது. அதேசமயம்  ஆயிரம் ரூபாய்க்கு வாஸ்து அப்பாயின்மென்ட் எடுத்துக்கொண்டு பத்தாயிரம் ரூபாய் பொருள்களை விற்க மாட்டேன். அதாவது ஆயிரம் ரூபாய்க்கு நான் வாஸ்து பார்ப்பேன் என்று சொல்லி, அதே சமயம் ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள ஒரு பொருளை பத்தாயிரம் ரூபாய்க்கு அவர்கள் தலையில் கட்டுகிற செயலை செய்ய மாட்டேன்.ஆக பரிகாரம் சார்ந்த பொருள் விற்பனை செய்யும் வாஸ்து நிபுணராக இருக்க மாட்டேன். இதுபோல யாராவது இருக்கிறார்கள் என்றால் அவர்கள் உண்மையான வாஸ்து நபர்கள் கிடையாது. அதை தெரிந்து கொண்டு வாஸ்து நிபுணரை அழைத்து பாருங்கள். இல்லை என்றால் வாஸ்து பார்க்க கூட அவசியம் இல்லை என்று கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
   ______________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வெற்றி
ரிஷபம்- தாமதம்
மிதுனம்- அன்பு
கடகம்- உயர்வு
சிம்மம்- வரவு
கன்னி- ஆதரவு
துலாம் – நன்மை
விருச்சிகம்- திருப்தி
தனசு- வெற்றி
மகரம்- புகழ்
கும்பம்- நட்பு
மீனம் – அமைதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_____________
இன்றைய வரலாறு
#today_history_november_21

உலக ஹலோ தினம்

உலக மீனவர்கள் தினம்

உலக தொலைக்காட்சி தினம்

வங்கதேச ராணுவத்தினர் தினம்

இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் இறந்த தினம்(1970)

இந்திய விடுதலைக்கு பின் முதல் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(1947

Loading