சென்னை வாஸ்துவின் மனையடி சாஸ்திரம்

நம்முடைய சாஸ்திரத்தில் மனையடி சாஸ்திரம் போன்ற அனேக வீடு கட்டுகிற சாஸ்திரங்கள் இருந்திருக்கின்றன. அவைகளை நமது முன்னோர்கள்  பாடல்களாகவும், விருத்தங்கள் ஆகவும் வெண்பாக்கள் ஆகவும் கொடுத்துவிட்டு நம்முடைய முன்னோர்கள் மறைந்துவிட்டார்கள். அப்படிப்பட்ட பதிகங்களில் இருக்கிற விஷயங்கள் எல்லாமே கற்றுக்கொண்ட மக்களுக்கே தவிர,மற்றவர்களுக்கு கிடையாது. மற்றும் அதற்கு பெரிய அளவில் பயன் இருக்காது.

Chennai Vastu manayadi

அந்த வகையில் எனது மானசீக குருவின் ஆசிர்வாதத்தாலும்,  கடவுளின் அருளாலும் மனையடி சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய குழி கணக்கு ஆயாதி கணிதம் என்று சொல்லக்கூடிய விஷயத்தை வாஸ்துவின் வழியாக சொல்லி வருகிறேன். அந்த வகையில்  சென்னை வாஸ்து என்கிற பெயரில் இருக்கும் நான் அனைத்து விசயங்களையும் உங்களுக்கு வழங்கி வருகிறேன்.

அமிர்தயோகம். சித்தயோகம். நட்சத்திர பலன். ஆதாய பொருத்தம், ஆதாய செலவு, ராசி பொருத்தம், கதவு நிலை நிறுத்துதல், கிணறு இருக்கும் திசை, மண்ணின் அமைப்பு,  கர்ப்ப பொருத்தம்,  சந்து குத்தல்கள், சல்லியம் சார்ந்த 16 ஜாதிப் பொருத்தங்கள், சுபகாரியங்கள் செய்ய விதி, சுக்லபட்ச, அமர பட்ச விதி. சுக்கிர வாரம், சுவர் வெடிப்பு அல்லது பிளப்பு அல்லது புற்று சாந்த பலன்கள், நான்கு வகை வர்ணங்கள், சாதி சார்ந்த சூத்திர பலன், செலவு பொருத்தம், திருமண பொருத்தம், திசை தெரிந்து வாசல் வைப்பது, 8×8= 64, 9×9=81 என்று சொல்லக்கூடிய ஆயாதி குழிக்கணக்கு அங்குல அளவுகளை ஒருவீட்டில் நிர்ணயம் செய்வது மிக மிக முக்கியம். நீங்கள் மனதுக்கு பிடித்ததுபோல் வீடு கட்டாது மணியடி பொருத்தி வீடு கட்டுவது மிக மிக நலம்.

அந்தவகையில் மனையடி சார்ந்த அளவுகளை ஒரு இல்லத்தில் கண்டிப்பாக பொருத்தி வைப்பது நலம். மனையடி அளவுகள் என்பது ஒரு சிலர் அது மூடநம்பிக்கை காலத்திற்கு ஒவ்வாத விஷயங்கள் என்று கூறுவார்கள். இருந்தாலும் அதனை நாம் ஒரு இல்லத்தில் முடிந்த அளவிற்கு பொருத்தி வைப்பது நலம். ஒருசில மக்கள் வெளி அளவு மனையடி, உள் அளவு மனையடி என்று குழப்பிக் கொண்டிருப்பார்கள். எது எப்படி இருந்தாலும் எனது அனுபவ அறிவு சார்ந்த முறையின்படி, மனையடி என்பது உள்ளளவாகவும், ஆயாதி அளவு என்பது வீட்டின் வெளிப்புற அளவாகவும் அமைப்பது சரியான முறை என்பேன்.
மனையடி அளவுகள் பொறுத்தளவில் ஆறு அடிக்கும் கீழாக அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது ஆறடிக்கு மேலாக நல்ல அளவுகள் எது  என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எட்டடி நல்ல அளவு அதன் பலன் என்பது எண்ணிய காரியம் வெற்றி அடையும் துஷ்டன் நெருங்க மாட்டான் பட்டமரம் துளிர்க்கும் பாக்கியம் உண்டாகும்.

பத்தடிக்கு பலன்கள் ஆடு மாடு குறைவில்லா வாழ்வு பாலும் சோறும் மிகுந்து வேளாண்மை உற்பத்தி அதிகமாகும்.

11 அடி பலன்கள் பால் பாக்கியம் உண்டு.

16 பலன்கள் பாக்கியம் சேரும் எதிரி சற்று விலகி போவான் அதிக அடிமைகள் இருப்பார்கள்.

17 அடி பலன் எதிரியும் வணங்கி நிற்பான். தரணியை வெல்ல முடியும். பாரினில் மன்னராவார். பாக்கியம் உண்டாகும். சீரோடு வாழமுடியும். செல்வமும் அதிகம் உண்டு.

20 அடி பலன் ஆணும் பெண்ணும் பிரபல யோகமுண்டு. குதிரை யோகம் உண்டு. வியாபாரம் பலிக்கும். மகாலட்சுமி ஆசிர்வாதம் உண்டு. பால் பசுக்கள் இருக்கும்.

22 அடி பலன் எதிரியும் அஞ்சுவார்கள். வெற்றி மேல் வெற்றி உண்டு.

இருபத்தி ஆறு அடிகள். நன்மையுண்டு.

27 அடி தாழ்விலா வாழ்வு கிடைக்கும். பூமியில் மதிப்போடு வாழ்வார்கள் .

28 அடி பலன் எதிரியும் அஞ்சி நிப்பான். குறைவிலா பாக்கியம் உண்டு.

29 நல்ல பலன்.

30 அடி பலன் அனேக யோகம் கிடைக்கும்.

31 மற்றும் 32 அடிக்கு பலன்கள். பல அடிமை மக்கள் இருப்பார்கள். வையகம் முழுவதும் வாழ்வார்கள். அற்புதப் பலன்கள் கிடைக்கும்.

32 அடி பலன் அடைய முடியும் இறைவன் அருள் கிடைக்கும்.

33 அடி பலன்கள் நல்ல நன்மைகள் உண்டு.

35 அடி பலன்கள் ஐஸ்வர்யம் தேடி வரும்.

முப்பத்தி ஆறு அடி பலன்கள் ராஜ பதவி கிடைக்கும்

முப்பத்தி ஏழு அடி பலன்கள். தொழிலில் வெற்றி செல்வாக்கு பயணத்தில் வெற்றி கிடைக்கும்.

முப்பத்தி ஒன்பதுஅடி பலன்: நல்ல இனிமையான வாழ்வு, கடின உழைப்போடு உழைப்பால் வெற்றி.

நாற்பத்தி ஒரு அடி பலன்கள்
செல்வாக்கு உயரும்.

42 அடி பலன்கள் செல்வம் நிலையாக இருக்கும்.

நாற்பத்தி ஐந்து புத்திரர்கள் அதிகம் பிறப்பார்கள்.

50 அடி பலன்கள் இழந்த செல்வம் தேடி வரும்.

   50 அடி பலன்கள் இழந்த செல்வம் தேடி வரும்.

52 அடி பலன்கள் தானிய லாபம் நிம்மதி உண்டாகும்.

54 பலன்கள் நல்ல லாபம் கிடைக்கும் .

ஐம்பத்திஆறு அடி பலன்கள் புத்திரர்களால் பலன் உண்டு.
அறிவு விருத்தியடையும்.

64அடி பலன்கள் சகல சம்பத்தும் கிடைக்கும்.

அறுபத்தி ஆறு அடி பலன் லாபங்கள் பெருகும். யோகமுண்டு.

72 அடி பலன்கள் அதிர்ஷ்டம் தேடி வரும்.

73 பலன்கள் வாகன பாக்கியம் உண்டாகும்.

எழுபத்தி நான்கு அடி  பலன்கள் எடுத்த காரிய வெற்றி உண்டாகும்.

75 அடி பலன்கள் நல்ல சுகபோக வாழ்க்கை கிடைக்கும்.

  எழுபத்தி ஏழு அடி பலன்கள் அரச வாழ்வு.

79 அடிக்க பலன்கள் பால் பாக்கியம் உண்டாகும்.  மகாலட்சுமி நிரந்தர வாசம் செய்வார்கள்.

எண்பத்தி நான்கு அடிக்கு பலன்கள். நல்ல சமூக வாழ்க்கை கிடைக்கும்.

எண்பத்தி ஐந்து அடிக்கு பலன்கள்: செல்வ செழிப்போடு வாழ்வார்கள்.

எண்பத்தி எட்டுஅடி பலன்கள் நல்ல சக்திகள் பெருகி வாழ்வார்கள்.

89 அடி பலன்கள்அதிக வீடுகளைக் கட்டுவார்கள்.

90 அடிக்கு பலன்கள் எதிர்பாராத தனப்பிராப்தி தேடி வரும்.

91 அடிக்கு பலன். பெண்கள் கல்வியில் மேன்மை கிடைக்கும்.

92 பலன்கள் எல்லா செல்வங்களும் தேடி வரும்.

93 அடித்து பலன்கள் இடம் விட்டு இடம் மாறி கொண்டு வாழ்வார்கள்.

94 பலன்கள் வெளிநாட்டு பயணங்கள் மூலம் வெற்றி கிடைக்கும் .

தொண்ணூற்று ஐந்து பலன்கள் செல்வ செழிப்பும் பெருகும்.

96அடி பலன்கள் வெளிநாட்டு பணம் தேடி வரும்.

தொண்ணூற்று ஏழு அடி பலன்: நீர் சம்பந்தப்பட்ட வியாபாரம் லாபம் கிடைக்கும்.

தொண்ணூத்தி எட்டு அடிக்கு பலன்கள் தூரதேச பிரயாணங்கள் லாபம் கிடைக்கும்.

99 அடிக்கடி ராஜ்ய பரிபாலனம் செய்வார்கள்.

100அடி பலன்: பிரபலங்கள் நண்பர்களோடு சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள்.

நூற்றி இரண்டடிக்கு பலன்கள் அரசாங்க வெகுமதி.

104 அடிக்கு பலன்கள் சுபமங்களம் கிடைக்கும்.

105 பலன்கள் நற்பெயர் நிலைக்கும் .

114 அடி பலன்கள் திடீர் யோகம்.

115 பலன்கள் காரிய வெற்றி.

116 பழங்கள் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும்.

120 சர்வமும் வெற்றி.

மனையடி பொருத்தளவில் பொறுத்து வைத்துக்கொண்டு வளமாக வாழுங்கள் நன்றி வணக்கம்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *