சுற்றுச்சுவர் வாஸ்து vastu compound wall

ஒரு இல்லத்திற்கு சுற்றுச்சுவர் என்பது மிகப்பெரிய அரண். நம்முடைய வீட்டைச் சுற்றி ஒரு எல்லையை நிர்ணயம் செய்கிற விஷயத்தை நம்முடைய சுற்றுச்சுவர் தான் கொடுக்கிறது . ஆக இந்த சுற்றுச்சுவருக்கு அற்புதமான ஒரு கட்டுப்பாடு, அற்புதமான ஒரு சக்தி, அற்புதமான ஒரு எல்லை என்கிற விஷயம் உண்டு. இது இல்லை என்று சொன்னால் பல இன்னல்களை கொடுக்கிற நிகழ்வாக மனித வாழ்க்கையில் இருக்கும்.

vastu chennai

ஒரு மனித வாழ்க்கையில் கூட ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை என்கிற தராதரம் இருக்கின்றது. அந்த தராதரத்தை தாண்டினால் உறவுகளில் சீர்கேடுகள் ஏற்படும். அதுபோலத்தான் ஒரு இல்லம் சார்ந்த நிகழ்வுகளிலும் எல்லை என்கிற விஷயத்தை கொடுக்கிற விஷயமாக ஒரு இல்லத்தை கட்டுப்பாடுடன் வைத்திருக்கிற நிகழ்வாக ஒரு எல்லை இருக்கின்றது. ஆக அந்த கட்டுப்பாடு எங்கு மீறும் என்று சொன்னால் சுற்றுச்சுவர் இல்லாத வீடுகளில் தான். அது மேலும் அதாவது ஒரு இல்லத்தில் தகப்பனாரோடு பேசும் போது ஒரு மரியாதை, தாயுடன் பேசும் போது ஒரு பாசம், மனைவியோடு பேசும்போது ஒரு பாசம் கலந்த ஒரு அன்பு, ஒரு செல்ல மகளோடு ஒரு நிலை, குழந்தைகளோடு பேசும் பொழுது ஒரு ஈர்ப்பு ஒரு அன்பு ஒரு மகிழ்ச்சி, நண்பர்களோடு  இருக்கும் பொழுது அவரவர்கள் அவரவருக்கு தகுந்தாற்போல கட்டுப்பாடுகளும் எல்லைகளும் மகிழ்ச்சியும் சந்தோசமும் கூடும் குறையும். இந்த இடத்தில் யார் எல்லையை மீறி நடக்கின்றனாரோ அந்த இடத்தில் சண்டை சச்சரவு உறவுகளில் பிரிவு போன்ற விஷயங்கள் ஏற்படும். அதேபோலத்தான் ஒரு எல்லையில்லாத ஒரு இல்லத்தில், பல குழப்பங்களை கொடுக்கிற இல்லமாக அது இருக்கும். ஆக ஒரு இல்லத்திற்கு எல்லையை நிர்ணயம் செய்கிற சுற்றுச்சுவர் என்பது மிக மிக அவசியம்.

அப்படிப்பட்ட சுற்றுச்சுவரின் இடைவேளைகள் என்பது மிக மிக முக்கியம். அந்த இடைவேளைகள் என்பது தெற்கில் அடி அளவு குறைவாகவும், மேற்கில் அதனை விட கொஞ்சம் அடி அளவு அதிகமாகவும், அதைவிட கிழக்கு இரண்டு மடங்கு அதிகமாகவும், அதைவிட வடக்கு இரண்டு மடங்கு அதிகமாக ஒரு இல்லத்தில் சுற்றுச்சுவர் இருக்க வேண்டும். அதுதான் வாஸ்து சுற்றுச்சுவர் என்று என்னால் அழைக்கப்படுகிறது

Loading