வாஸ்து சாஸ்திர படுக்கையறை Vastu bedroom

வாஸ்து சாஸ்திர படுக்கையறை Vastu bedroom

வாஸ்து சென்னை

நன்றாக உழைத்திடுங்கள் அந்த உழைப்பிற்கு தகுந்த ஊதியமாக உறக்கம் என்பது மனித உடலுக்கு வேண்டும். இந்த இடத்தில் நல்ல உறக்கத்தை கொடுக்கிற விஷயமாக அவசியம். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் சொல்ல வேண்டும். டால்பின் நீந்திய படியே உறங்குகின்றது. மீன் நீந்தி கொண்டே உறங்குகின்றது. வவ்வால் தலைகீழாக ஊஞ்சலாடியபடியே உறங்குகிறது. கோழி குறுக்கு மரத்தில் கொம்புகளில் மீது  உறங்குகின்றது. பூனை பந்தை போல் ஒடுங்கியும் உறங்குகின்றன. இப்படி அனைத்து உயிரினங்களுக்கும் ஓய்வை உண்டாக்கி வைத்திருக்கிறார் இறைவன். ஆக மனிதனுக்கு வீடாக இருந்தாலும் சரி தங்குகிற ஓய்வு அறைகளாக இருந்தாலும் சரி ஆனந்தத்தை கொடுக்கிற இடமாக இருக்க வேண்டும். அப்படி ஆனந்தத்தை கொடுக்கிற இடமாக ஒரு இல்லத்தில் படுக்கையறை இருக்க வேண்டும். இந்த இடத்தில் உண்மை சொல்ல வேண்டும் என்று சொன்னால் உடலுக்கு இதயத்தைப் போன்றது தான் ஒரு இல்லத்தின் படுக்கை அறை. வீட்டில் இருக்கும் அதிக நேரத்தில் அதிகம் இருக்கக்கூடிய இடமும் படுக்கை அறை தான். 8 திசைகளில் நைருதி மட்டுமே பெரியவர்கள் சார்ந்த இடமாக கொள்ள வேண்டும். மற்ற படுக்கை அறைகளை தெற்கு மத்திய பாகம், மேற்கு மத்திய பாகம், தென்கிழக்கு பாகம், வடமேற்கு பாகம் ஆகிய பகுதிகளில் அமைத்துக் கொள்ளலாம்.

இந்த இடத்தில் அதிக மக்கள் இருக்கிற இல்லமாக இருந்தால் வயதில் மூத்தவர்கள் தென்மேற்கு அறையையும், இரண்டாம் நிலையில் இருக்கின்ற மக்கள் தெற்கு மத்தியில் மேற்கு மத்தியையும், அதற்கு பிறகு இளம் வயதில் இருக்கின்ற மக்கள் தென்கிழக்கு பாகத்தையும், வடமேற்கு பாகத்தையும், படுக்கை அறையாக பயன்படுத்தலாம். இந்த இடத்தில் படுக்கையறை என்பது ஒரு வடக்கு பகுதியிலும் கிழக்கு பகுதியிலும் வடகிழக்கு பகுதியிலும் வரக்கூடாது. அப்படி வருகின்ற பொழுது கட்டாயமாக படுக்கையறை வேண்டும் என்று சொன்னால், அந்த இடத்தில் ஒரு கட்டில் போடாது. தரையோடு தரையாக படுக்கும் அமைப்பில் படுக்கையறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவும் எடை அதிகம் இல்லாத அமைப்பில் அமைத்துக் கொள்ளலாம். இதுதான் வாஸ்து சாஸ்திர வகையில் சரியான படுக்கை அறை என்று சொல்லுவேன். அது சார்ந்த விதியை உட்புகுத்தி ஒரு இல்லத்தில் படுக்கையறை பொறுத்தி வைத்து கொள்ளுங்கள்.

Work hard. Sleep is what the human body needs as a reward for that hard work. The bedroom is essential in Vastu Shastra as a matter of good sleep in this place. I must say one thing at this point. A dolphin swims and sleeps. The fish swims and sleeps. A bat sleeps upside down. The chicken sleeps on the branches of the cross tree. Cats sleep curled up like a ball. In this way the Lord has created rest for all creatures. So, whether it is a house or a resting place for a person, it should be a place that gives happiness. A bedroom in a home should be a place that gives such happiness. To tell the truth in this place, the bedroom of a house is like the heart of the body. The bedroom is the place where you spend most of your time in the house. Of the 8 directions only Nairuti should be considered as an adult oriented place. Other bedrooms can be arranged in South Central, West Central, South East and North West areas. If there are many people in this house, the seniors can use the south-west room, the second-ranked people can use the south-middle-west room, and then the young people can use the south-east part and the north-west part as bed rooms. The bedroom in this location should not come in a north side, east side or northeast side. If you say that you must have a bedroom when you come, a bed will not be put in that place. The bedroom should be arranged in a floor-to-floor arrangement. It can also be set up in a lightweight setting. I would say this is the right bedroom in terms of Vastu Shastra. Keep a bedroom in a house by instilling the relevant rule.

Loading