Sukreeswarar temple
இன்றைய ஆலய தரிசனம்;
அருள்மிகு
ஶ்ரீ ஆவுடையநாயகி சமேத
ஶ்ரீ சுக்ரீஸ்வரர் திருக்கோயில்,
(முகுந்தாபுரிபட்டிணம்)
சர்க்கார் பெரியபாளையம்,
(கூலிபாளையம் நால்ரோடு அருகில்)
திருப்பூர் (மா) வட்டம்.
(மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள,
சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக கணிக்கப்படும் இத்தலத்தின் கருவறையில்
நம் இனிய ஈசன்,
சற்றே பிரமாண்டமான தோற்றத்தில் சுயம்பு லிங்க திருமேனியராய் அருட்காட்சியளிக்கிறார்.
(இந்த சுக்ரீஸ்வரர் விக்ரகம், 31.5 -அடி உயரம் கொண்டதாகும்.
28-ஆக விதிகளை கணக்கிட்டு, 28-அடி சிலை கருவறையில் புதைக்கப்பட்டு, 3.5-அடி விக்ரகம் மட்டும் வெளியே தெரியும் வகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக கருத்து நிலவுகிறது)
தனி சன்னதியில்,
நம் அம்பிகை நின்ற திருக்கோலமாக
வீற்றிருக்கிறாள்.
(சிறப்புக்கள் பல பெற்ற, இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்)
மற்ற கோவில்களைப்போல மூலவரை நேரடியாக எதிரே வந்து தரிசிக்க முடியாது. (மூலவர் சன்னதிக்கு எதிரே வழியே இல்லை)
இக்கோயிலில் தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது வித்தியாசமான ஆலய அமைப்பாகும்.
ராமாயண காலத்தில்,
ஶ்ரீ ராமருக்கு உதவிய வானரங்களின் அரசன் சுக்ரீவன், தன் அண்ணன் வாலியின்
அன்பு மீண்டும் கிடைக்கப்பெற,
இத்தலத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து, (ஓராண்டு மட்டும்) வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது.
(ஆலயத்திருச்சுற்றில்,
சுக்ரீவன் குத்திட்டு அமர்ந்த நிலையில் சிவலிங்கத்தினை
வழிபடும் புடைப்புச்சிற்பமாகவும் மற்றும்
கருவறையின் முன்புற திருசுவற்றின் மேல் (நம் யானையாரும்தான்)
நின்றபடி சிவலிங்கத்தினை
வழிபடும் சிற்பவடிப்புமாய் காட்சியளிப்பதும் சிறப்பு)Sukreeswarar temple
‘மிளகு ஈஸ்வரர்’,
‘தென் குரங்கு தளிநாதர்’ என்றெல்லாம் அழைக்கப்படும் இறைவனை,
(குரங்கு வழிபட்ட தலமாதலால்)
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
“கொங்கிற் குறும்பில் குரங்கு தளியாய்..,” என,
ஊர்த்தொகையில் பாடியுள்ளார்.
(பிற்காலத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வின் காரணமாக,
இரட்டை நந்திகள் இத்தலத்தில் அமைந்துள்ளதும், லிங்க வழிபாடு செய்யும் கிளி சிற்ப வடிப்பும்,
காலம்காலமாக
மாலை நேரங்களில் 500-க்கும் மேற்பட்ட கிளிகள் இந்த ஆலயப்பிரகாரங்களில் தங்கிச் செல்வதும் இத்தலச்சிறப்புக்களில்
சிலவாகும்)
சிவபெருமானுக்குரிய
முக்கியமான விழாக்கள் அனைத்தும் சிறப்பாக கொண்டாடப்படும்
இத்தலத்தில்,
பிரதோஷ காலங்களில்
இரட்டை நந்திகளுக்கு
நடைபெறும் அலங்காரங்களும், வழிபாடுகளும் தல விசேஷமாம்.
சகோதர உறவுகள் என்றென்றும் மேன்மையுற,
இத்தல
இறை தம்பதியரை
உளமார வழிபடுதல்
நிச்சயம்
நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை).Sukreeswarar temple
ஓம் நமச்சிவாய நமக:




