Changu Narayanan Temple
இன்றைய ஆலய தரிசனம்;




அருள்மிகு
ஶ்ரீ (கருட நாராயணன்)
சங்கு நாராயணன் திருக்கோயில்,
சங்கு கிராமம்,
(தவளகிரி மலைப்பகுதி)
பக்தபூர் மாவட்டம்,
நேபாள நாடு.
( கி.மு. மூன்றாம் நுற்றாண்டில்,
லிச்சாவி வம்ச மன்னர்
ஹரி தத்தா வர்மன் காலத்தில் கட்டப்பட்ட
இந்த வைணவ திருத்தலம்தான், நேபாள நாட்டிலேயே மிகவும் பழமையான ஆலயமாக கருதப்படுகிறது.
சங்கு நாராயணன் கோயில் (Changu Narayanan Temple)நேபாள நாட்டின் பக்தபூர் மாவட்டத்தில் தவளகிரி மலைப்பகுதியில் சங்கு என்ற கிராமத்தில் அமைந்த பண்டைய இந்து சமயக் கோயிலாகும். காத்மாண்டு சமவெளியில் உள்ள காத்மாண்ட் நகரத்தின் கிழக்கில் இருபது கிலோ மீட்டர் தொலைவிலும், பக்தபூர் மாவட்டத் தலைமையிடமான பக்தபூர் நகரத்திற்கு வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவிலும் சங்குநாராயாணன் கோயில் அமைந்துள்ளதுChangu Narayanan Temple.
இரண்டடுக்குகள் கொண்ட கருங்கற்களாலான,
நேபாள பெளத்த கட்டிடக்கலை வடிவில் கட்டப்பட்ட இத்தலத்தில்
நம் திருமால், ஶ்ரீ சங்கு நாரயணப்பெருமாளாக அருள்புரிகின்றார்.
(சிறப்புக்கள் பல பெற்ற, இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்)
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, உலகப்பாரம்பரிய களங்களில் ஒன்றாக இந்த சங்கு சக்கர நாராயணர் கோயில் விளங்குவது தலச்சிறப்பாகும்.
ஆலயத்தின் மேற்கு வாயிலிலும், கிழக்கு வாயிலிலும்
உள்ள தூண்களில்,
திருமாலின்
ஆயுதங்களான சங்கு, சக்கரம், கட்கம் மற்றும் தாமரை ஆகியவை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது வித்தியாசமான காட்சியாகும்.
லிச்சாவி வம்ச மன்னர் மனதேவன்,சிவ சிம்ம வர்மன், பட்டத்தரசி கங்கராணி, மன்னர் பாஸ்கர மல்லர் என, பல அரசர்களின் காலங்களில் வடிக்கப்பட்டிருக்கும் கருட வாகனத்தில் பறக்கும் திருமாலின் ஏழாம் நூற்றாண்டின் சிற்பம் (இச்சிற்பம், நேபாள் நாட்டின் பத்து ரூபாய் தாளில் அச்சடிக்கப்பட்டுள்ளது), விஷ்ணு, லக்ஷ்மி,நரசிம்மர், உலகளந்த பெருமாள், வாமணன்
என, (இச்சிற்பங்களின்
எந்த புகைப்பட பதிவினை சேர்ப்பது, விடுவது!?! அக்காலத்தில், இந்த இந்து நாடும் நம் நாடே என உறுதிகூறுவது போல, ) எத்திசை நோக்கினாலும்
பல சிறப்புமிகு சிற்பங்கள் காணப்பரவசம்.
இத்தலத்தில்,
காட்சிதரும் கருடாழ்வார்
சிற்பம் வித்தியாசமான வடிவமைப்பாகும்.
திருவேங்கடவனுக்குரிய பிரசித்திபெற்ற அத்தனை விழாக்களும்
சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில், (இந்த புரட்டாசி மாதம்)
வம்சம் தழைத்தோங்க
நடைபெறும் ‘தீஜ்’ எனும்
திருவிழா, லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டாடும் பெரும் விழாக்காலமாம்).
ஓம் நமோ நாராயணாய நமக
332 total views, 3 views today