கொங்கு நாடு ஆலயம் செல்வோம்

#பரஞ்சேர்வழி அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில்

கொங்கு நாடு ஆலயம்

சென்னிமலை – காங்கேயம் சாலையில் உள்ள நால்ரோட்டின் கிழக்கே 1 1/2 கி.மீ
தொலைவில் நால்ரோடு-நத்தக் காடையூர் சாலையில் தொன்மைப் பதியாகிய பரஞ்சேர்வழி அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

சிறிய ஊராக இருப்பினும்
மிகச்சிறந்த வரலாற்றுப் பெருமையுடைய நகராக பரஞ்சேர்வழி விளங்கியுள்ளது.

கொங்கு நாட்டில் ஒவ்வொரு பழமையான ஊருக்கும் அங்குள்ள கோவிலுக்கும் உரிமையுடையவர்கள் காணியாளர்கள் எனப்படுவர்.

பரஞ்சேர்வழியில் காணி உரிமை கொண்டவர்கள் பயிர குலத்தார், செம்ப குலத்தார், ஒதாள குலத்தார், ஆவ குலத்தார், ஆட குலத்தார், விளிய குலத்தார் எனும் ஆறு கூட்டத்தார் ஆவர்.(பழைய காணிப் பாடல்களில் இந்த ஆறுவகை கூட்டங்களோடு, வண்ணக்கன், ஈஞ்சன், வாணன் ஆகிய குலத்தாரும் பரஞ்சேர்வழி காணியாளர்களாய் இருந்துள்ளனர் என்றும், இவை இன்று இல்லை என்றும் தெரிகிறது)

இத்துடன் பிராமணர்களும், செட்டியார்களும் இவ்வூர்க் காணியாளர்களாக இருப்பது விஷேசமானதாகும்

ஈங்கூர், ஈஞ்ச கூட்டத்தில் உள்ள ஒரு சிலர் பன்னெடுங் காலத்திற்கு முன்னர் பரஞ்சேர்வழி காணியாளர்களாக இருந்ததையும் அருள்மிகு கரியகாளியம்மனை வணங்கிப் பேறு பெற்றதையும்
ஒரு பழம்பாடல் மூலம் நினைவு கூர்கிறார்கள்


#பரஞ்சேர்வழி #கரியகாளியம்மன்  #பரஞ்சேர்வழிஅருள்மிகுகரியகாளியம்மன்திருக்கோவில் #அருள்மிகுகரியகாளியம்மன்திருக்கோவில் #ஸ்தலவரலாறு  #ஆலயம்அறிவோம் #temple #kovil #koyil #கோவில் #கோயில் #templesofsouthindia #templeshistory #perumaltemples #ChennaiVastu #ஆலயம் செல்வோம் #ஆலயவாஸ்து #kovilvastu #templehistory #historyoftemples

 58 total views,  1 views today