குமரக்கோட்டம் Kumarakottam Arulmigu Subramaniya Swami Temple

Kumarakottam Arulmigu Subramaniya Swami Temple

இன்றைய ஆலய தரிசனம்

அருள்மிகு
ஶ்ரீ வள்ளி, ஶ்ரீ தெய்வானை சமேத
ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
குமரக்கோட்டம்,
காஞ்சிபுரம் நகரம் (மாவட்டம்).

(சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இத்தலத்தில்,
‘எனை ஆளும் ஆண்டவன்’ எம்பெருமான்
மூலவர் ஶ்ரீ சுப்பிரமணியராக ருத்ராட்ச மாலையுடனும், கையில் கமண்டலமும் கொண்டு
பிரம்ம சாஸ்தா திருக்கோலத்தில் தரிசனம் தருவது தலச்சிறப்பாகும்.

முருகன் இத்தலத்தில் தவம் இயற்றும் பிரம்மச்சாரியாக தோற்றமளிப்பதால்,
தேவியர்கள் இருவரும் பிரகாரத்தில்
தனித்தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர்.

(சிறப்புக்கள் பல பெற்ற, இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்)

ஒரு புராண நிகழ்வின்படி;
‘ஓம்’ எனும் பிரணவத்தின்
பொருளறியாத
ஶ்ரீ பிரம்மனை சிறையிலடைத்த பிறகு,
பிரம்மசாஸ்தா கோலத்தில் முருகன், படைப்பு தொழிலை இங்குதான் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

(தீபாவளித்திருநாள்
நீங்கலாக)
ஆண்டு முழுவதும்
எண்ணெய் அபிஷேகம் செய்விக்கப்படும் இத்தல இறைவனுக்கு,
தேன் அபிஷேகம் பிரியமானதாம்.

அனந்த சுப்பிரமணியர் எனும் நாகசுப்பிரமணியரின்
திருமேனிக்கு ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, வள்ளி,தெய்வானை உலாத்திருமேனிகளுக்கு மூன்று தலை நாகங்கள் குடை பிடிக்கும் விக்ரகங்கள் இத்தலச்சிறப்புக்களில்
ஒன்று.Kumarakottam Arulmigu Subramaniya Swami Temple

(நாக தோஷம் நீங்கிட,
இத்தல நாக சுப்பிரமணியரை வழிபடுதல் நிச்சயம் நன்மை பயக்குமாம்)

தந்தை ஏகாம்பரேஸ்வரர், தாய் காமாட்சி அருட்குடிகொண்டிருக்கும் ஆலயங்களின் நடுவில், சோமாஸ்கந்தராக
முருகன் இந்த குமரகோட்டத்தில் வீற்றிருப்பதும்,

கந்தன், கச்சியப்ப சிவாச்சாரியாரைக்
கொண்டு, ‘திகடச்சக்கரம்’ என, அடியெடுத்துக்
கொடுத்து ‘கந்தபுராணம்’ எழுத பணித்த சிறப்புமிகு தலமென்பதும்,

(11-ஆம் நூற்றாண்டில்
‘கந்தபுராணம்’ அரங்கேற்றிய மண்டபத்தை இன்றும் காணலாம்)

அருணகிரிநாதர்
தன் திருப்புகழில்
இத்தல இறைவனை போற்றி பாடியுள்ளதும்,

பாம்பன் சுவாமிகள்
இந்த குமரக்கோட்டம் வருவதற்கு வழிதெரியாமல் தடுமாறிட,
நம் வேலவனே  சிறுவன் வடிவில் சென்று வழிகாட்டி அழைத்து
வந்து தரிசனம் தந்த
தலமென்பதும் இத்தல பெருஞ்சிறப்புக்களில் சிலவாகும்.

கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் உட்பட, முருகப்பெருமானுக்குரிய விழாக்கள் அனைத்தும், நல்வினைகள் கிடைக்கப்பெறும் இத்திருத்தலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது).

ஓம் ஶ்ரீ குமரக்கோட்ட முருகனுக்கு,
அரோகரா!
அரோகரா!
அரோகரா!

Kumarakottam Arulmigu Subramaniya Swami Temple

Loading