கிரகப்பிரவேசம் இந்த நட்சத்திரங்களில் செய்ய வேண்டாம். காலண்டர் 19.11.2022

சென்னை வாஸ்து

தினசரி நாள்காட்டி 19.11.2022 #சுபக்கிருது; #கார்த்திகை மாதம்.03ந் தேதி .சனிக்கிழமை. காலை 10.32 வரை தசமி திதி பிறகு தே.ஏகாதசி திதி.  இரவு  10.43 வரை அஸ்தம் பிறகு சித்திரை நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று   நாள்  முழுவதும் நல்ல யோகநாள்   .


__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

   நான் சொல்கிற இந்த பதிவை வாஸ்து பதிவாக கூட எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஜோதிட பதிவாக கூட எடுத்துக் கொள்ளலாம். எதற்காக என்று சொன்னால் வீடு வாஸ்து பூஜை செய்கின்றீர்கள் அல்லது, வீட்டிற்கு வாசல் நிறுத்துகிறீர்கள் அல்லது, வீட்டிற்கு கான்கிரீட் போடுகிறீர்கள் அல்லது, கிரகப்பிரவேசம் செய்கிறிர்கள் . இந்த நான்கு நிகழ்வுகளில் நல்ல நாள், நல்ல நேரம் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கின்ற போது ஒரு சில நட்சத்திரங்கள் வரும் நாளில் மேற்கூறிய செயல்களை செய்யக்கூடாது. அதாவது பாடவாரி நட்சத்திரங்கள் என்று சொல்லக்கூடிய நட்சத்திரங்கள் வரும் நாளில் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பாடவாரி நட்சத்திர நாட்கள் என்பது  அதாவது தேங்காய் உள்ளே தேரை என்னும் சிறு தவளை இருந்தால் அதில்  பருப்பில்லாமல் தேங்காய் சுருங்கி போய்விடும். அதுபோல தேரை தோஷம் இல்லாத நாளாக, தேரை தோஷம் உள்ள நட்சத்திரங்களே பாடவாரி நட்சத்திரங்கள் ஆகும்.  ஆக அதன் பலன்கள்என்னவென்று என்று பார்க்கும் பொழுது, கைப்பொருள் நஷ்டம் ஆகும். உறவினர் பகை ஏற்பட்டு அவர்களால் சிக்கல்கள் ஏற்படும். திருமணம் செய்தால் திருமண பெண்ணிற்கு தோஷம். எந்த காரியமும் முற்று பெறாமல் சேதமடையும். பயணம் மேற்கொண்டால் விபத்துக்கு சமமான கஷ்டத்தை கொடுக்கும். இந்த நாளில் நோய் மருத்துவம் பார்க்க விபரீதம் ஏற்படும். இந்த நாளில் மேற்கூறிய வீடு சார்ந்த நான்கு நிகழ்வுகளை செய்யும்பொழுது தடை தடங்கள், சிரமங்கள் கொடுக்கும். கட்டிடம் பாதியில் கூட நின்று விடும். ஆக இந்த பதிவை வாஸ்து பதிவாக எடுத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட நட்சத்திரம் என்பது பரணி, சதயம், திருவோணம், அனுஷம், கேட்டை, சுவாதி, விசாகம் ஆகியனாகும். இந்த நட்சத்திர நாட்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

Loading