Chennai vastu calendar 4.11.2022

உறவான சொந்தங்களுக்கு கண்ணகுல அருக்காணி ஜெகன்னாதனின் காலை வணக்கங்கள்.  சரியான மணி நேரத்தை கொடுக்கும் எனது  நாள்காட்டி பதிவு உங்கள் பார்வைக்கு. தினசரி தேதி காலண்டரில் துல்லியமாக இல்லாத நிலையில் இந்தவிழிப்புணர்வு பதிவு.இன்று சூரிய உதயம் 6.08 மணி ஆகவே நான் கொடுக்கும் நேரத்தில் 08 நிமிட நேரம்  எல்லா நேரங்களிலும் கூட்டி கொள்ளுங்கள்.அதுதான் நட்சத்திரம் மற்றும் திதி, ராகு, எமகண்டம், நல்ல நேரங்கள் முடியும் நேரம் ஆகும்.நன்றி. வணக்கம்
4.11.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 08 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.08மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 4.11.2022 #சுபக்கிருது; #ஐப்பசி மாதம்.18ந் தேதி . வெள்ளி. மாலை 6.10 மணி வரை வளர்பிறை ஏகாதசி திதி. பிறகு வளர்பிறை த்வாதசி திதி. இரவு12. 00 வரை பூரட்டாதி நட்சத்திரம். பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am
இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm
இன்று   நாள்  முழுவதும் நல்ல யோகநாள்   .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.

நட்சத்திரங்கள் சார்ந்த வரிசையில் 27 நட்சத்திரங்கள் வகையில் 21 வது நட்சத்திரமாக இருக்கக்கூடிய உத்திராடம் நட்சத்திரம் சார்ந்த ஒரு சில கருத்துக்களை இந்த பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம். உத்திராடம் நட்சத்திரம் கால் பகுதி தனுசு ராசியிலும், முக்கால் பகுதி மகர ராசியிலும் இருக்கின்றது . காலபுருச ராசியில் மேஷ லக்னத்திற்கு தனுசு என்பது ஒன்பதாம் வீடு. மகரம் என்பது பத்தாம் வீடு. தனுசு ராசி அதிபதி குரு. மகர ராசிக்கு அதிபதி சனி. உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் . காலப்பருச தத்துவத்தின் படி தர்ம கர்மாதிபதி யோகம் என்பது, சனி குரு சேர்க்கை. ஒருவருடைய ஜாதகத்தில் குரு சனி சேர்க்கை இருந்தால், நல்ல வேலை கிடைக்கும். நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். எந்தவித பிரச்சினையும் இல்லாத சந்தோஷமான வசதி வாய்ப்பான வாழ்க்கை அமையும். இத்தகைய அமைப்பு ஜாதகத்தில் இல்லாதவர்கள் ஒவ்வொரு மாதமும் உத்திராடம் நட்சத்திரம் வரும் நாள் அல்லது ஐயப்பனையோ, அல்லது சங்கரநாராயண பெருமானையோ வழிபட்டு வந்தால், நல்ல உத்தியோகம் அல்லது, தொழில் அமையும்.

இதன் காரணம் என்னவென்று சொன்னால் குருவின் வீட்டையும் சனியின் வீட்டையும் இணைக்கின்ற பாலமாக இருக்கிற நட்சத்திரம் உத்திராடம். உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் என்கின்ற காரணத்தால் அரசாங்கத்தில் பதவி உயர்வு, அரசு உதவிகளை நாடுவதற்கு ஏற்ற நட்சத்திரம். முடி சூடுதல், பட்டாபிஷேக நிகழ்ச்சி செய்ய உகந்த நட்சத்திரம். அதேபோல காலபுருச தத்துவத்தில் தனுசு ஒன்பதாம் இடமாக இருக்கின்ற காரணத்தால், இந்த நட்சத்திரம் தனுசு ராசியில் இருக்கின்ற காரணத்தால் , ஆலய திருப்பணிகள் மற்றும், வாஸ்து சாந்தி , நவகிரக சாந்தி செய்வதற்கு ஏற்ற நட்சத்திரம். பித்ரு காரியங்களுக்கும் ஏற்ற நட்சத்திரம். உத்திராடம் நட்சத்திரத்தின் உருவம் கட்டில் கால் மற்றும் மெத்தை. ஆக கர்ப்பதானம், சாந்தி முகூர்த்தம் செய்ய உகந்த நட்சத்திரம். உத்திராடம் நட்சத்திரத்தின் வசிப்பிடம் வண்ணான் துறை . ஆக வண்ணான் துறை என்பது நீர் நிலைகளை குறிக்கும் இடம். ஆக ஏரி குளம் கிணறு வெட்ட உந்த நட்சத்திரம். சரியான உத்தியோகமோ அல்லது, தொழிலோ அமையாதவர்கள் கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொண்டு அம்மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று சபரிமலைக்கு சென்று ஐயப்ப பெருமானை வழிபட்டால் நிச்சயமாக நல்ல உத்தியோகம் அந்த வருடமே கிடைக்கும். சபரிமலைக்கு செல்ல முடியாதவர்கள் உத்திராடம் நட்சத்திரத்தன்று சங்கரன்கோவில் சென்று வழிபட , வேலை சார்ந்த நிகழ்வில் வெற்றி கிடைக்கும்.
_____________________

Chennai vastu calendar

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –   சிந்தனை
ரிஷபம்- உழைப்பு
மிதுனம்- யோகம்
கடகம்- கவலை
சிம்மம்- ஆதாயம்
கன்னி- நிம்மதி
துலாம் – அமைதி
விருச்சிகம்- தாமதம்
தனசு- சோர்வு
மகரம்- சினம்
கும்பம்- ஏமாற்றம்
மீனம் –    பெருமை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#November_04

பனாமா கொடி நாள்

இத்தாலி ராணுவ படை தினம்

வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1861)

ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது(1918)

அறிவியல் இதழான நேச்சர் முதல் முறையாக வெளியிடப்பட்டது(1869)

மேலும் விபரங்களுக்கு

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு 9965021122
#கொங்கு_திருமணசேவை #கொங்கு_கல்யாணம்
#கொங்குவெள்ளாளக்கவுண்டர்கள் #கவுண்டர்
#கொங்கு_திருமண தகவல்
#konguwedding #kongu #konguvellalagounder
#கொங்கு_கோவில்கள் #Kongu_Kovilgal
#KonguTemple #Kongu #KonguNaadu
#Erode_kongu #Coimbatore_kongu #Tiruppur_kongu #Namakkal_kongu #Karur_kongu #Salem_kongu #Trichy_kongu
#dharmapuri_kongu
#Chennai_kongu
#kongutradition
#kongunadumakkaldesiyakatchi #kongugounder
#kongu_vamsam
#konguvellalarvamsam
#kongugoundachi
#dheeranblood
#dheeran_chinnamalai_gounder
#dheeran_chinnamalai
#dheeran_memorialday
#dheeranday
#dheeranchinnam alaigounderperavai
#dheeranvamsam
#dheeranchinnamalai
#dheeranchinnamalaigounder
#dheeran
#salemkongu
#namakkalkonguparadise
#namakkalkongusonthangal
#namakkalkongu
#mohanur_navaladiyan_temple
#mohanur
#karurkongupadai
#karurkongu
#konguvellalagounder #kongu #konguvellalar #konguculture #konguyoungsters #DheeranchinnamalaiGounder #dheeranchinamalai

Loading