கதவு மற்றும் ஜன்னல் வாஸ்து | window door vastu

வாஸ்து அமைப்பில் கதவுகள், மற்றும் ஜன்னல்கள் எங்கே எப்படி வர வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வோம். ஜன்னல் மற்றும் கதவுகள் என்று பார்க்கும் பொழுது கதவுகள் எப்பொழுதுமே ஒரு அறைக்கு உச்ச பாகத்தில் வரவேண்டும். உச்சம் என்று பார்த்தால் ஒரு அறைக்கு வடக்கு பகுதி வாசல் வருகிறதென்று எடுத்துக்கொண்டால் அதன் வடகிழக்குப் பகுதியில் வரவேண்டும். அதேசமயம் கிழக்கு பகுதியில் வாசல் வருகிறது எடுத்துக்கொண்டால், அதன் வடகிழக்குப் பகுதியில் வர வேண்டும். மேலும் தெற்கு பார்த்த வாசல் என்று இருக்கும் பொழுது அதன் தென்கிழக்கு பகுதியில் வரவேண்டும். மேற்கு பார்த்த வாசல் என்று எடுத்துக்கொண்டால், மேற்கு சுவரில் வடக்கு ஒட்டி அந்த வாசல் வர வேண்டும். இந்த அமைப்பு எல்லாமே உச்ச வாசல் என்று பார்க்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் புதன் வாசல் அமைப்பு பொருத்துவார்கள். எக்காரணம் கொண்டும் அந்த அமைப்பு என்பது ஒரு இல்லத்திற்கு ஒரு அறைகளை ஏற்படுத்திய பிறகு மொத்த இல்லத்திற்கான முதல் வாசலாக அமைக்கவேண்டும். இல்லை என்று சொன்னால், வடகிழக்கு அதாவது, வடகிழக்கு பாகத்தில் புதன் வாசல் அமைக்கிறார்கள்.   வடக்கில் ஒரு படிக்கும் அறையை அமைத்த பிறகு அதற்குப் பிறகு தெற்கு புறத்தில் அல்லது, வடக்கிலிருந்து மேற்குப் புறத்தில் புதன் வாசலை அமைத்துக் கொண்டால் எந்த விதத்திலும் அது தவறு செய்யாது. அதனை தவிர்த்து ஒரு அறைக்கு நீச்ச பாகத்தில் வாசல்கள் வைக்க முடிவு செய்தால் வாஸ்து ரீதியாக தவறாக முடிந்துவிடும். அதேபோல ஜன்னல்கள் என்று பார்க்கும் பொழுது இதனில் உச்சம், நீச்சம் என்கிற விஷயம் இல்லை என்று சொன்னாலும் கூட, பாசிட்டிவான இடம், நெகடிவான இடம் தெரிந்துகொண்டு ஜன்னலை வைப்பது சாலச்சிறந்தது. வடக்கில் வடக்கு பார்த்த வாயில் ஒரு இல்லம் இருக்கிறது என்று சொன்னால் 16 அடிகள் வடக்குப் புறத்தில் இருக்கும் பொழுது, வடகிழக்குப் பகுதியில் வாசலை வைத்த பிறகு இடையில் ஒரு தூண் அமைப்பு ஏற்படுத்திய பிறகு, ஜன்னலை அமைக்க வேண்டும் .அதற்குப் பிறகு ஜன்னலுக்கு கிழக்கு புறத்தில் இரண்டடி இருக்கிறது என்று சொன்னால், ஜன்னலுக்கு மேற்குப் புறத்தில் நான்கு அடிகள் சுவர் இருக்க வேண்டும். இதனை தவிர்த்து எந்த அறையாக இருந்தாலும் அந்த அந்த அறையின் எதிர்மறை பாகத்தில் ஜன்னல்களை வைப்பது தவறு. உதாரணமாக படுக்கை அறை இருக்கிறது படுக்கை அறையின் தெற்குப் பகுதியில் வாசல் நேர் நீச பாகத்தில் ஜன்னல் என்பது கூடாது. ஒரு அறைக்கு ஜன்னல் என்பது மேற்குப் பகுதியில் வடக்கு ஒட்டி வைக்க வேண்டும்.தெற்கு பகுதியில் கிழக்கு ஒட்டி வைக்க வேண்டும். இதனை தவிர்த்து வேறு இடங்களில் ஜன்னல்களை வைப்பது  தவறான எதிர்மறை ஜன்னலாக வேலை செய்யக் கூடிய இடமாக மாறிவிடும். ஜன்னல்களை பொறுத்தளவில் கிழக்கு திசை தெற்கு என்று பார்க்கும் பொழுது அதில் சிறிய அளவிலும், வடக்கு வரவர கொஞ்சம் பெரிய அளவில் அமைக்க வேண்டும். அதேபோல தெற்குப் புறம் என்று பார்க்கும் பொழுது தென்மேற்கில் சிறிய அளவாக பிறகு தென் கிழக்கு நோக்கி வர வர பெரிய அள வாகவும் அமைக்க வேண்டும். இல்லை என்றால் ஒரே அளவாக  குறைத்துக் கொள்ளலாம். அதாவது உயரம் ஆகட்டும் அல்லது அகலம் ஆகட்டும்  மேற்குப் புறத்தில் தெற்கிலிருந்து வடக்கு வரவர கொஞ்சம் அதிகப் படுத்திக் கொள்ளலாம். இல்லை என்று சொன்னாலும் கூட ஒரே அளவாக வைத்துக் கொள்ளலாம். இந்த விதி வடக்கு திசைக்கும் பொருந்தும். இந்த வகையில் தான் ஜன்னல் என்கிற விஷயத்தை நீங்கள் பொருத்திப் பார்க்கவேண்டும். அதே வகையில் வடகிழக்குப் பகுதியில் வடக்கிலும், கிழக்கிலும், ஜன்னல் என்ற விஷயம் கட்டாயமாக ஒவ்வொரு இல்லத்திற்கு வேண்டும். அது இல்லமாக இருந்தாலும் சரி , அலுவலக இருந்தாலும் சரி, தொழிற்சாலையாக இருந்தாலும் சரி எதற்கும் இந்த விதி என்பது பொருந்தும்.

எந்த இடத்திலும் எதிர்மறை சார்ந்த ஜன்னல்களை அமைப்பது என்பது வாஸ்துவின் ரீதியாகத் தவறு. அந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் நீங்கள் செய்ய வேண்டாம்.  ஒரு சில இல்லங்களில் தெற்கு பகுதிகளில் ஜன்னல் அமைக்கும் பொழுது சமையல் சார்ந்த பகுதியில் கொஞ்சம் உயரம் படுத்தி அமைத்திருப்பார்கள். அப்படி அமைகின்ற பொழுது தெற்குப் பகுதியின் மேற்கு புற ஜன்னல்கள் தாழ்ந்த அமைப்பில் வரும்பொழுது வாஸ்து ரீதியாக அது குற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஆகவே ஜன்னல் உயரம் என்பது தெற்கு சார்ந்த ஜன்னல் என்ன உயரத்தை நீங்கள் கடைப்பிடிக்கிறார்களோ அதே உயரத்தை தெற்கு திசை சார்ந்த தென்மேற்கு, தெற்கு, மத்திய பாகங்களிலும் நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தென்மேற்கு பகுதியில் திறப்புகளை கொடுக்கவேண்டாம். வடகிழக்கு பகுதிகளில் வடக்கும், கிழக்கும் கட்டாயம் ஜன்னல் என்பது வேண்டும். கதவுகளை பொருத்தளவில் ஏற்கனவே சொன்ன மாதிரி உச்ச பகுதியில் தான் வரவேண்டும். ஒரு வீட்டிற்கு தலை வாயில் கதவு என்பது   பிரதான வாயில் கிழக்கு புறத்தில் அமைந்தால் மேற்குப் புறத்தில் பின்புற வாயில் வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதேசமயம் வடக்கு பார்த்த வீடுகளுக்கு பின்புற வாயில் வைத்து தான் ஆக வேண்டும் என்கிற விஷயம் கிடையாது. ஆனால் ஒரு தெற்கு பார்த்த வீட்டிற்கு அல்லது, தெற்கு பார்த்து தலை வாசல் இருக்கும் வீட்டிற்கு நிச்சயமாக அதன் எதிர்ப்புறம்  வடகிழக்கு பகுதியில் கண்டிப்பாக வாசல் என்கிற ஒரு விஷயம் வேண்டும். இதே விதியை மேற்கு பார்த்த, மேற்கு பார்த்து தலை வாசல் இருக்கிற வீடுகளுக்கு வடகிழக்கு வாசல்  வைத்துக்கொள்ளுங்கள். கண்டிப்பாக அதன் நேர் எதிர்புறம் ஆன வடகிழக்குப் பகுதியில் கிழக்கு பார்த்து ஒரு பின்புற வாயில் கட்டாயம் வேண்டும். கட்டிடத்தின் நான்கு புறத்திலும் வாயில்கள் தாராளமாக அமைத்துக் கொள்ளலாம். ஆனால் அது உச்ச பகுதியாக இருக்க வேண்டும். நான்கு புறமும் உங்களுக்கு இடம் இருக்கின்ற பட்சத்தில் நான்கு புறமும் 100% வாயில் வைத்துக் கொள்ளலாம். தலைவாயில் மேல் பகுதியில் சிற்ப வேலைகள் செய்வது அலங்காரம் படுத்துவது கொள்ளலாம். ஆனால் தெய்வத்தின் உருவங்கள், தலைவாசல் இருந்து வெளியில் பார்க்கிற அமைப்பு என்பது தவறு. உட்புறம் சார்ந்து   உட்புறப் பகுதிகளில் இறை உருவங்களை செதுக்கி கொள்வதில் தவறு இல்லை. கிழக்கு-மேற்கு இரண்டு சாலைகள் அமைந்த மனைகள் பிரதான தலைவாசல் கிழக்குப் பகுதியில் அமைப்பது மட்டுமே சிறப்பு. வடக்கு மற்றும் தெற்கு இரண்டு பகுதிகளிலும் சாலைகள் இருக்கின்றபோது வடக்குப் பகுதியில் தலைவாசல் வைப்பது சிறப்பு. வடக்கு மற்றும் தெற்கு சாலைகள் இருந்து  தெற்கு மட்டுமே வாயில் வைப்பது தவறு. வடக்கு மற்றும் தெற்கு திசை பார்த்த மனையில் பிரதான தலைவாசல் வடக்கு திசையில் இருப்பது தான் சிறப்பு. கிழக்கு மற்றும் தெற்கு திசை பார்த்த மனையில் பிரதான வாசல் கிழக்கு மட்டுமே சிறப்பு. வடக்கு மேற்கு திசை பார்த்த மனையில், பிரதான வாசல் வடக்குப் பகுதியில் அமைந்தால் சிறப்பு . தெற்கு மேற்கு இரு சாலைகள் அமைந்த மனையில் பிரதான தலைவாசல் மேற்குப் பகுதியில் அமைப்பது சிறப்பு. தெற்கு மேற்கு சாலைகள் இருக்கக்கூடிய மனைகள் பொது கட்டிடங்களாக , வணிக கட்டிடங்கள் ஆக இருந்தால் கொஞ்சம் பலனடையும். வீடுகளை பொருத்த அளவில் பலன்  கொஞ்சம் குறைவு.ஆக வாசல் மற்றும் ஜன்னல் வாஸ்து விதிகளை கொண்டிருக்க வேண்டும்.chennaivastu


Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *