இன்றைய பஞ்சாங்க காலண்டர் வாஸ்து நாள்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

22.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 22.8.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
6ந் தேதி திங்கட்கிழமை நாள் முழுவதும் தே. ஏகாதசி திதி .   காலை 7.25 வரை மிருகஷிரிசம் நட்சத்திரம். பிறகு திருவாதிரை நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்

வாஸ்து சார்ந்த விஷயத்தில் படுக்கையறை சார்ந்த விளக்கங்களை தெரிந்து கொள்வோம். படுக்கையறை எங்கு இருந்தால் சிறப்பு என்கிற விஷயம் மிக மிக முக்கியம். ஒரு இல்லத்தில் முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருந்து அந்த குழந்தைக்கு உரிய இடமாக தெற்கு மத்திய பாகமும் மேற்கு மத்திய பாகமும் விளங்குகிறது என்று சொல்லலாம். இரண்டாவது குழந்தை தூங்கும் இடமாக அது ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் தென்கிழக்கு அக்னி பகுதி தலைசிறந்த இடமாக பார்க்கப்படுகிறது. நைருதிப்பகுதியில் அம்மா அப்பாவோடு இணைந்து இருக்கிற படுக்கை அறையாக குழந்தைகளுக்கு வைத்துக்கொள்ளலாம். ஒரு இல்லத்தில் மூன்றாவது குழந்தையின் இடமாக வடமேற்கு படுக்கையறை விளங்குகிறது. அந்த இடத்தை வடமேற்கு இடத்தை உதாரணமாக மூன்றாவது குழந்தைக்கு கொடுக்கணும். வடக்கு பகுதியிலும், கிழக்கு பகுதியிலும் தாராளமாக குழந்தைகளுக்கான படுக்கையறையை அமைத்துக்கொள்ளலாம்.

தூங்குகிற நிலை என்பது கிழக்கு தலை வைத்து படுப்பதும், தெற்கு தலை வைத்து படுப்பது, மேற்கு தலை வைத்து படுப்பது சாலச்சிறந்தது. எக்காரணம் கொண்டும் தம்பதிகளின் அறையாக, குடும்ப தலைவன் தலைவியின் அறையாக, வடக்கு அறைகளை உபயோகப்படுத்த வேண்டாம்.அதிக மக்கள் செய்யக்கூடிய விஷயம் படுக்கை அறையில் இருக்கிற இடத்தில் வடக்குப் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படுக்கை அறையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கழிவறை சார்ந்த விஷயத்திற்காக, குளியலறை சார்ந்த விஷயத்திற்காக தரைத்தளத்தை உயரப் படுத்துவார்கள். அந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. அதேபோல திசை திரும்பிய இடங்களில் படுக்கை அறை என்பது தலை தென்மேற்குப் பகுதியில் வைத்து படுப்பது போல இருப்பது சாலச் சிறந்தது. எந்த இடத்திலும் தென்கிழக்கு  வைத்துக்கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் வடக்கு வடமேற்கு,வடகிழக்கு கிழக்கு வடகிழக்கு தலை வைத்து படுக்கை வைக்க வேண்டாம்.. அதேசமயம் ஈசானியத்தில் தலை வைத்து படுப்பது போல வைக்க வேண்டாம்.  வீதிசை  திரும்பிய வீடுகளில் படுக்கையறை சார்ந்த விசயத்தில் கவனித்து வைப்பது வாஸ்து வகையில் சாலச்சிறந்தது.

Koyambedu vastu consultant,
கோயம்பேடு வாஸ்து நிபுணர் ஆலோசகர் ,
Madhavaram vastu consultant,
மாதவரம் வாஸ்து நிபுணர் ஆலோசகர் ,
Madhavaram Milk Colony vastu consultant,


—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பக்தி
ரிசபம்- முயற்சி
மிதுனம்- சாந்தம்
கடகம்- களிப்பு
சிம்மம்- பெருமை
கன்னி- வெற்றி
துலாம் – பிரீதி
விருச்சிகம்- ஆர்வம்
தனசு – கீர்த்தி
மகரம்- வரவு
கும்பம்- வாழ்வு
மீனம் – பயம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
# August_22

ரஷ்ய கொடி நாள்

சென்னை நகரம் உருவாக்கப்பட்ட தினம்(1639)

தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது(1926)

12 நாடுகள் இணைந்து ஜெனீவாவில் செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்தன(1864)

நெப்டியூனின் முதல் கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது(1989)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading