ஆலய தரிசனம் Tamilnadu Temple 

#ஆலய_தரிசனம்;Tamilnadu Temple 

அருள்மிகு
ஶ்ரீ மாரியம்மன் திருக்கோயில்,
நத்தம் நகரம்,
திண்டுக்கல் மாவட்டம்.

(சுமார் 400-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இத்தலத்தில், 
ஶ்ரீ மாரியம்மன்
சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள்.

சிற்பவடிவாக உள்ள
மூலவர் அம்மன்,
அன்னத்தின் மீது  அமர்ந்து
காலில் அசுரனை மிதித்த நிலையில், தாழ்மலரை பணிந்த பக்தர்களுக்கு
திருஅருள்புரிகின்றாள்.

(சிறப்புக்கள் பல பெற்ற, இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்)

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில்,
முற்காலத்தில்
‘இரசை நாடு’ என்றழைக்கப்பட்ட,
இந்த நத்தம் நகரின் காவல் தெய்வமாக போற்றப்படும்
ஶ்ரீ மாரியம்மனின் கோவிலும் ஒன்று.

இப்பகுதியை ஆட்சிசெய்த
லிங்கப்ப நாயக்கர் என்ற சிற்றரசரின் அரண்மனைக்கு
பால் தரும் பால்காரர் மூலம்,
தான்  பூமியினுள்
இருப்பதை அரசருக்கு உணர்த்தி சுயம்புவாக இத்தலம் வந்தமர்ந்வளாம்
பார்வதியின் அம்சமான நத்தம் ஶ்ரீ மாரியம்பிகை.

அம்மன் சிலையை பூமியிலிருந்து வெளியே தோண்டி எடுக்கும்போது,
ரத்தம் பீறிட்டதாம், பின்பு
அச்சிலையை  வெளியே எடுத்து மஞ்சள் நீராட்டி அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு, பின் ஆலயம் கட்டப்பட்டதாக தலவரலாறு கூறுகிறது.

ரத்தம் பீறிட்டு வெளிவந்த அம்மன் சிலை அங்கு இருந்ததால், ‘ரத்தம்’ என்றழைக்கப்பட்ட இவ்வூர்,
காலப்போக்கில் ‘நத்தம்’
என்றழைக்கப்படலாயிற்றாம்.

(உற்சவர் திருமேனி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிப்பதும், விழாக்காலங்களில்
அம்பிகைக்கு நடைபெறும் அலங்காரங்களும்
அழகு பேரழகு.

கண் திருஷ்டியைப் போக்கிடும்
வெள்ளி கிழமை வழிபாடும்
தல விசேஷம்.

மாசி மாதம் அமாவாசை  அன்று கன்னிமார் தீர்த்தம் எடுத்து வருதலுடன் ஆரம்பிக்கும் மாசித்திருவிழா,
பல லட்சம் மக்கள் 15-நாட்கள் கலந்து கொண்டாடும் பெரும்விழாவாகும்.

திரி சூலம் போன்று கம்பம் நட்டு, பூக்குழி இறங்கி, கழுகு (வழுக்கு) மரம் ஏறி, பக்தர்கள் தங்களது வேண்டுதல் வைத்தும் நேர்த்திகடன் செலுத்தியும் தங்களை வாழவைக்கும்
அம்மனை மகிழ்வித்து
மகிழ்ந்து கொண்டாடும்
மாசிப்பெருந்திருவிழா இத்தலத்தின் சிறப்புமிகு பிரசித்தம்)Tamilnadu Temple 

ஓம் சக்தி பராசக்தி:

திண்டுக்கல் மாரியம்மன்
Tamilnadu Temple 

Loading