ஆலய தரிசனம் Temple visit

Temple visit

இன்றைய ஆலய தரிசனம்:

அருள்மிகு
ஶ்ரீ (தாயம்மை)
அறம்வளர்த்தநாயகி  சமேத
ஶ்ரீ அறப்பளீஸ்வரர் திருக்கோயில்,
(அறமலை)
கொல்லிமலை,
நாமக்கல் மாவட்டம்.

( நமது தமிழகத்தின் நடுப்பகுதியில், 280-சதுர கிலோமீட்டர் பரப்பளவும்,
அதிகபட்ச உயரமாக (1400-மீட்டர்) 4663- அடிகளும்,
மொத்தமாக 72- கொண்டை ஊசி வளைவுகளும் உடைய, இன்றளவும் பதிணென் சித்தர்கள் தவம்புரிவதாக கருதப்படும், மூலிகைகள் நிறைந்த கொல்லிமலையில், சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இத்தலத்தில்
நம் இனிய ஈசன், 
சுயம்பு லிங்க திருமேனியராய் அருட்காட்சியளிக்கிறார்.Temple visit

ஶ்ரீ அறம் வளர்த்த நாயகி, தனிசன்னதியில் நின்ற திருக்கோலமாக வீற்றிருக்கிறாள்.

(சிறப்புகள் பல பெற்ற, இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்)

ஆதிகாலத்தில்
இப்பூமியில் வாழும் உயிர்கள் மகத்துவம் பெற, இறை வழிபாடு மேற்கொண்ட சித்தர்கள் தவம் செய்ய தேர்ந்தெடுத்த இடங்களில்
பேரமைதி நிறைந்த  இந்த கொல்லிமலை தலமும் ஒன்று.

சித்தர்கள்,
தர்மம் எனும் அறத்தை
பின்பற்றி
தவம்புரியும் முன்,
லிங்கம் பிரதிஷ்டை செய்து ‘அறப்பலீஸ்வரர்’ எனும்
திருப்பெயரிட்டு வழிபட்டதாகவும், காலப்போக்கில் விளைநிலமாக மாறியபோது புதைந்து  போன அந்த  சிவலிங்கம், பலங்காலமாக பூமியுனுள் இருந்து பிற்காலத்தில்,
விவசாயி ஒருவரால் நிலம் உழும் கலப்பையின் மூலம்  வெளிபட்டு, இங்கு ஆலயம் கொண்டதாகவும் தலவரலாறு கூறுகிறது.

(சிவலிங்கத்தின் உச்சியில்,
உழவு கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு உள்ளது) Temple visit

“கொல்லி குளிர் அறைப்பள்ளி” என்றும்,
“கள்ளால் கமழ் கொல்லி அறைப்பள்ளி” என்றும் (ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களான) திருநாவுக்கரசர் இத்தலத்தினை தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளதும்,
திருஞானசம்பந்தர்  தனது திருத்தல கோவையில் அறைப்பள்ளியை போற்றியுள்ளதும்
இந்த தேவார வைப்புத்தலத்தின் பழம்பெருமையினை பறைசாற்றுகிறது.

(ஆலயத்தின் அருகில் ஓடும் மஞ்சநதியில
நம் ஈசன் மீனாக இருப்பதாக ஐதீகம். அதனாலேயே,25 Temple Tour Packages 
தினமும் காலையில் சுவாமிக்கு படைத்த நைவேத்தியத்தை, இத்தீர்த்தத்திலுள்ள மீன்களுக்கு இடுகின்றனர்)

அருணகிரிநாதர் தன் திருப்புகழில், இச்சிவத்தலத்தில் ஶ்ரீவள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கும் எம்பெருமான் முருகனை போற்றி பாடியுள்ளார்.
(இத்தலத்தில் அருள்புரியும் அம்பிகையையும்  அவளது சன்னதியின் எதிரே தம்பதி சமேதராக அருட்காட்சிதரும்
இளைய அழகு மகனையும்
ஒருசேர வழிபட,
தாய் மகன் மனகசப்பு நீங்கப்பெற்று, புரிதலும்
அன்பு மிளிரும் என்பது நம்பிக்கை)

கொல்லி வேந்தர் வல்வில் ஓரி,
தஞ்சை பெரிய கோயிலை நமக்கு தந்த
மாண்புமிகு ராஜராஜசோழரின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன்மாதேவி, விஜயநகர அரசர் வேங்கடபதி, சோழமன்னர்கள் பரகேசரிவர்மர்,
குலோத்துசோழர், பராந்தக சோழர் மற்றும் பல சேர, சோழ, பாண்டிய, நாயக்கர் மன்னர்கள் இத்தல இறைவனை வழிபட்டுளனர்.

ஐந்து நாட்கள் நடைபெறும்
ஆடி 18-ஆம் பெருக்கு விழா, நாமக்கல், சேலம், ஈரோடு உட்பட, பல மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டாடும் பெரும் கலாச்சார திருவிழா காலமாகும்).

Loading