Vastu calendar 20.6.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

20.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 20.6.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
6ந் தேதி திங்கட்கிழமை. இரவு 9.03 வரை தே. சப்தமி  திதி.  பிறகு தே.அஸ்டமி திதி. நாளை விடியற்காலை காலை 4.22 வரை பூரட்டாதி நட்சத்திரம் பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம்.

ராகுநேரம்:7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்து சாஸ்திர வகையில் படிகள்  சம்பந்தப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்வோம். அந்த வகையில் வீட்டில் வெளிப்பகுதியில் வடமேற்குப் பகுதியில் படிகள் அமைக்கும் பொழுது எப்பொழுதுமே படிகளுக்கு கூண்டு அமைக்க கூடாது. அப்படி அமைக்கும் பொழுது வடமேற்கு உயரம் ஆகி வாயு மூடல் என்கிற விஷயத்தை கொண்டு வந்துவிடும். அதேபோல தென்கிழக்கு மூலையில் படிகள் அமைக்கும் பொழுது கூண்டுகளை அமைக்கும்போது, தென்கிழக்கு உயர்ந்த அமைப்பில் வந்து , வாஸ்து குற்றமாக அமைந்துவிடும். அதேசமயம் தென்கிழக்கு வளர்ந்த அமைப்பாகவும் மாறிவிடும். அதேபோல தென்மேற்கு பகுதியில் படிகளை அமைத்து கூண்டு அமைக்கும் போது, கூண்டுகள் என்பது உயரமாக இருந்தாலும், கூண்டுகளுக்கு உள்ளாக இருக்கும் படிகள் என்பது பள்ளமாக  மாறிவிடும். அவை மேல் வீடுகளுக்கும், மேல் மாடியில் உள்ள வீடுகளுக்கும், பள்ளம் அமைப்பை கொடுத்து விடும் . அதேபோல மேற்குப் பகுதியில், தென்மேற்கு பகுதியில் படிகள் அமைக்கும் பொழுது கூண்டு அமைத்து படிகளை அமைத்தால், வாஸ்து ரீதியாக குற்றமாகிவிடும். அந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்ய வேண்டாம். படிகளை பொறுத்த அளவில் வெளிப்படி அமைப்பதாக இருந்தால் என்னைப் பொருத்தளவில் மேற்கு மற்றும் தெற்கு மத்திய பாகங்கள் சிறப்பான படிகள் என்று சொல்வேன். 

______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- போட்டி
ரிசபம்-  சினம்
மிதுனம்- தேர்ச்சி
கடகம்- உயர்வு
சிம்மம்- சுகம்
கன்னி- செலவு
துலாம் – வரவு
விருச்சிகம்- முயற்சி
தனசு – பரிவு
மகரம்- பாராட்டு
கும்பம்- சிந்தனை
மீனம் – வெற்றி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#june_20

உலக அகதிகள் தினம்

அர்ஜெண்டீனா கொடி நாள்

விக்கிமீடியா அமைப்பு உருவானது(2003)

இந்திய சிப்பாய் கலகம் முடிவுக்கு வந்தது(1958)

மாலி, செனகல் ஆகிய நாடுகள் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தன(1960)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading