Tamilvastu chennai today 18.6.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

18.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 18.6.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
4ந் தேதி சனிக்கிழமை. நள்ளிரவு 12.22 வரை தே.பஞ்சமி  திதி.  பிறகு தே.சஷ்டி திதி. காலை 7.28 வரை திருவோணம் நட்சத்திரம் பிறகு அவிட்டம் நட்சத்திரம்.

ராகுநேரம்:9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்துவில் இடம் குறைவது அல்லது, இடம் அதிகமாவது என்கிற விஷயம் மிக மிக முக்கியம். அந்த வகையில்  கெளரு #திருப்பதி_வாஸ்து ரெட்டி ஐயா அவர்கள் சொல்லக்கூடிய விஷயம் தான் இது. இதனை எனது வாஸ்து பயணங்களில் உட்புகுத்தி இருக்கின்றேன். அது முழுக்க முழுக்க பயன் கொடுக்க விஷயமாக இருக்கிறது . அதனை தான் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அந்த வகையில் ஒரு இடத்திற்கு ஈசான பாகம் குறைந்திருக்கலாம். ஆனால் வாயு பாகத்தை விட குறைய கூடாது. வாயு பாகம் குறைந்து இருக்கலாம். ஆனால் அக்னி பாகத்தை விட குறைய கூடாது. அதேபோல நைருதி பாகத்தை விட அக்னி பாகம் குறைந்து விடக்கூடாது. இந்த இடத்தில் இடம் எங்கே இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம். அதே சமயம் இடம் அதிகமாக எங்கு இருக்கக்கூடாது?. என்கிற விஷயம் முக்கியம் .

சதுரங்க ஆட்டத்தில் ஒரு சிப்பாய் முன் பின் சிந்திக்காது நகரும் பொழுது அந்த ஆட்டத்தின் அந்த விளையாட்டில் தோல்வி என்பதும் தவிர்க்க முடியாதோ?.. அதுபோல நாம் மனம் போன போக்கில் திசைகள் குறைந்த அமைப்பில் இல்லம் இருந்தாலும், திசைகள் திருப்பிய அமைப்பில் இல்லம் இருந்தாலும் வாஸ்து ரீதியாக வாழ்க்கையில் தீய பலன்கள் நடக்கும். சதுரங்க ஆட்டத்தில் ஆடுகிற நபர் மட்டுமே தோல்வியடைவார். ஆனால் வாஸ்து திசைகளின் சதுரங்கத்தில் வீட்டில் உள்ள மக்கள் எல்லாம் தோல்வி அடைவார்கள். ஆகவே திசைகளின் மூலைகளின் அளவுகளை, இடங்களை தெரிந்துகொண்டு இல்லத்தை கட்டி, வாஸ்துவின் துணையோடு வளமாக வாழுங்கள்.

______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- சுகம்
ரிசபம்-  நிறைவு
மிதுனம்- வரவு
கடகம்- செலவு
சிம்மம்- நட்பு
கன்னி- நலம்
துலாம் – எதிர்ப்பு
விருச்சிகம்- அலைச்சல்
தனசு – ஆர்வம்
மகரம்- துயரம்
கும்பம்- சலனம்
மீனம் – முயற்சி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
june_18

சென்னை அடையாறு புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டது (1954)

எகிப்து குடியரசானது (1953)

சலி ரைட், விண்ணுக்கு சென்ற முதல் அமெரிக்க பெண் ஆனார்(1983)

இந்திய ரூபாய், அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்பூர்வ நாணயமாக அறிவிக்கப்பட்டது(1869)

ஜெனீவாவில் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் 2 மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலை நிறுவப்பட்டது(2004)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading