surrounding vastu

வாஸ்து முறையில் வீடு, மற்றும் தொழிற்சாலைகளுக்கு சுற்றுப்புற அமைப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஒரு இல்லம் இருக்கிறது அல்லது, ஒரு தொழிற்சாலை கட்டிடம் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் சொந்த வணிகத்திற்கான ஒரு கடை சார்ந்த கட்டிடம் இருக்கிறது என்று சொன்னால், இங்கு எவ்வளவு இடத்தை விட வேண்டும் என்கிற ஒரு விதி மிக மிக முக்கியம். அந்த வகையில் எப்பொழுதுமே வடக்கை நமது பிரதானமாக எடுத்துக் கொள்ள வேண்டும். வடக்கு எப்பொழுதுமே நமக்கு மேல் உள்ள பகுதியாக இருக்கின்ற படியால் முடிந்த அளவிற்கு ஆகாயம் என்பது வெட்ட வெளியாக இருக்கின்ற படியால் அதனை, வடக்கு திசை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் . அந்த வகையில் வடக்கில் அதிக இடங்கள் இருப்பது போல எந்த கட்டிடமாக இருந்தாலும் அமைத்துக்கொள்வது சரியான முடிவு. surrounding vastu

அதற்கு பிறகு கிழக்கில் வடக்கு விட குறைத்தும் இருப்பது சாலச் சிறந்தது  அப்படியே இருந்தாலும் இணையாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அதிகமாக இருக்கக் கூடாது. அதற்குப் பிறகு மேற்கில் கிழக்கு இருப்பதை விட பாதி காலியிடம் இருப்பது போல அமைத்துக் கொள்ள வேண்டும் . surrounding vastu அதே போல தெற்கில் எவ்வளவுக்கெவ்வளவு குறைத்து இடம் என்பது வேண்டுமோ அந்த அமைப்பு கட்டாயமாக ஒரு இல்லத்தில், ஒரு கட்டிடத்தில், ஒரு தொழிற்சாலையில் நிச்சயமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஐஸ்வர்யத்தை கொடுக்கிற, சந்தோஷத்தைக் கொடுக்கிற, பொருளாதாரத்தை வெளிப்படுத்துகிற ஒரு இடமாக அந்த இடம் இருக்கும். நன்றி வணக்கம்.

Loading