Interior decoration work in the house is Vastu

Interior decoration work in the house is Vastu

ஒரு இல்லத்தில் உள் அலங்கார வேலைகள் என்பது வாஸ்துவோடு பொருந்தி இருப்பது நலம். அந்த வகையில் தங்க நிற பொருள்கள் உலோக சார்ந்த பொருட்கள் மற்றும் வட்ட வடிவமான பொருட்கள் உள் அலங்காரத்தில் தாராளமாக பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தும் பொழுது உங்களுடைய பணம் சார்ந்த வரவு செலவுத் திட்டத்தில் செயல் திறமையை கூட்டும். அடுத்தது ஒரு இல்லத்தின் உள் அமைப்பில் கட்டில்கள் இருக்கும். அந்த கட்டில்களுக்கு அடியில் குப்பை கூலங்களோ மேலும் அந்த கட்டிலின் தரைத்தளத்திலும் குப்பைக் கூலங்கள்  ஒரு இடத்தில் இருப்பது அந்த இடத்தின் செல்வநிலை சக்தியை குறைக்கும். இதனையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு ஒரு இல்லத்தில் சரியான முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல ஒரு இல்லத்தில் சாலை வடகிழக்கு நோக்கி செல்லும் பொழுது அது மேற்கு புறமாக இருக்கும் பொழுது,அந்த கட்டிடம் இழுத்த அமைப்பில் இருந்தால், அது வடமேற்கு வாய்மூலை பார்வையாக இருக்கும். அதுபோன்ற இடங்களிலும் பணம் சார்ந்த பாதிப்பு இருக்கும். அப்படிப்பட்ட இடங்களில் உங்களுடைய வீடு வெளிப்பார்வைக்கு அதாவது வடக்கிலிருந்து பார்த்தால் உங்கள் வீடு தெரியாத அமைப்போடு பொருத்தி வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பணம் சார்ந்த நிகழ்வுகளில் முன்னேற்றம் கிடைக்கும். இதனையும் வாஸ்து சாஸ்திரத்தோடு பொருத்திப் பார்த்து ஒரு இல்லத்தில் பணத்தின் வெற்றியை பெருக்கிக் கொள்ள வேண்டும்.

Interior decoration work in the house is Vastu,

Vastu Shastra Interior design PDF,

Vastu interior design,

Vastu in interior Design ppt,

Loading