Calendar chennai tamilnadu |தெருகுத்து தெருதாக்கம் உண்மையா?

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

இன்று #பிரதோஷ_நாள்
#ஒஓோ உள்ள உ அல்ல கலை ஞ
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

10.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 1 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.59.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 10.8.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
25ந் தேதி புதன் கிழமை  .மதியம் 2.17   வரை திரயோதசி திதி. பிறகு வ. சதுர்தசி  திதி.இன்று காலை 9.28   வரை  பூராடம் பிறகு உத்திராடம் நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்

வாஸ்து என்கிற விஷயத்தில் தெருத்தாக்கங்கள், தெருக்குத்துக்கள் என்று நாம் சொல்கிறோம். நல்ல உச்சமான பகுதிகளில் காலியிடங்கள் வைத்திருப்பதுதான் நல்ல தெருக்குத்து. நீசமான பகுதிகளில் தேவையில்லாத காலியிடங்கள் இருப்பதை தவறான தெருக்குத்து என்று சொல்கிறோம். இந்த இடத்தில் ஒரு சில மக்கள் வண்டி வாகனத்தின் விளக்கு ஒளி அடிக்கிறது, கார் விளக்கு அடிகிறது என்று தவறான பிரச்சாரங்கள் செய்வார்கள். அது போன்ற நபர்களை முக்கியமாக தவிர்த்து விடுங்கள் என்று சொல்லுவேன். அப்படிப்பட்ட நபர்களுக்கு வாஸ்து என்ன என்பது உணரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆக மேற்கூறிய விளக்கு வெளிச்சம் அடிக்கிறது என்று சொல்லும் நபர்கள் உங்கள் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கிறார்களா? என்பதை நீங்கள் கூர்ந்து கவனித்து, அதுசார்ந்த மனிதரை அழைத்து வாஸ்து பார்ப்பதை தவிர்க்க பார்க்க வேண்டும் என்பேன். ஆக தவறான இடத்தில் காலி இடங்கள் இருக்கிறது என்று சொல்லும்போது, அதனை தவிர்க்கும் விஷயமாக உங்களுடைய இடத்திலேயே ஒரு சில மாற்றங்களை நீங்கள் செய்யும் பொழுது முன்னேற்றம் என்பது இருக்கும்.

ஆக மேற்கு புறத்தில் காலி இடம் இருக்கும் என்று சொன்னால் மேற்கு பார்த்து கடைகளைக் கட்டி, அதற்குப் பிறகு இல்லத்தை அமைக்கும்போது ஓஹோ என்று வாழ்கின்ற நிலை உங்களுக்கு அமையும். அதே போல தெற்கு புறத்தில் சாலை இருக்கும் என்று சொன்னால் அந்த தெற்கு பார்த்த சாலைக்கு, சாலையை பார்த்து கடைகளைக் கட்டிக்கொண்டு, அதற்குப் பிறகு வடக்கு புறத்தில் நீங்கள் வீடு கட்டினீர்கள் என்று சொன்னால் வடகிழக்கு மனை என்ன பலனை கொடுக்குமோ அதுபோல பலனைக் கொடுக்கும்.  தவறான தெருகுத்து  என்று சொல்லக்கூடிய தெற்கு மேற்கு பகுதிகளில் மற்றும் கிழக்குப் அக்னி பகுதியில், வடக்கு வாயு மூலை பகுதிகளில் காலியிடங்கள் இருக்கும் பொழுது , அந்த இடத்தில் ஒரிரு கடைகளைக் கட்டி, அந்த காலி இடத்தின் தொடர்பு ஏற்படுமாறு செய்யும்பொழுது நிச்சயமாக அந்த கடைக்கு பின்புறத்தில் இருக்கும் உங்கள் வீடு, மிகுந்த நற்பலனை கொடுக்கிற வீடாக இருக்கும். ஆக தயவுசெய்து தெருத்தாக்கங்கள் தெருக்குத்துக்கள் தென்மேற்கு தெருக்குத்து தெற்கும் மேற்கும் சாலையில் இருக்கிறது. வடக்கு வாயு தெற்கு கிழக்கு அக்னி சாலை செல்கிறது என்று பயந்துகொண்டு முடிவு செய்ய வேண்டாம். அது சார்ந்த ஒரு சில மாற்றங்களை மாற்றி வைத்து,  வைக்கும் பொழுது மிகுந்த பலனை கொடுக்கும் இடமாக  உங்கள் இல்லம் இருக்கும். ஆக தெருக்குத்து என்று சொல்கிற மனிதர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு சரியான வழி அமைத்துக் கொடுக்கிற மனிதர்களை ஊக்கப்படுத்துங்கள் .அது நான் இல்லாமல் வேறு யார் வேண்டுமானாலும் வாஸ்து நிபுணர்கள் இருக்கலாம்.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –  பாராட்டு
ரிசபம்- பரிவு
மிதுனம்- நன்மை
கடகம்-  எதிர்ப்பு
சிம்மம்- யோகம்
கன்னி- வரவு
துலாம் – நலம்
விருச்சிகம்- மேன்மை
தனசு – சிந்தனை
மகரம்- கவனம்
கும்பம்- பெருமை
மீனம் – திறமை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
# August_10

இந்திய அணுசக்தி கழகம் ஜவஹர்லால் நேருவால் துவக்கி வைக்கப்பட்டது(1948)

முகம்மது நபி, குர் ஆனை பெற்ற நாள்(610)

மெகலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது(1990)

மிசெளரி, அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது(1821)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.Tamil Calendar – Festivals,tamil Holidays & Panchangam,2022 Tamil Festivals Calendar for Chennai, Month Panchang for Chennai, Tamil Nadu calendar,

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading