28.8.2022 வாஸ்து காலண்டர்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

28.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 28.8.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
12ந் தேதி ஞாயிற்றுக்க்கிழமை  மதியம்2.47 வரை பிரதமை திதி . பிறகு வ.துதியை திதி  இரவு 9.42 வரை பூரம் நட்சத்திரம். பிறகு உத்திரம் நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

இன்றைய
ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்

  மதில் சுவர்கள் அமைப்பது பற்றி வாஸ்து ரீதியாக தெரிந்து கொள்வோம். மதில் சுவர்கள்தான் ஒரு இல்லத்திற்கு பாதுகாப்பையும்,   தனிப்பட்ட அமைதியை கொடுப்பதற்கு சுற்றுச்சுவர் அவசியம்.  வீடு என்பது சாலையின் ஓரத்தில் இருக்கும் பொழுது தேவையான இடைவெளிகள் வேண்டும். இந்த இடத்தில் வாஸ்து என்கிற ஒரு விஷயத்தை உட்புகத்தாது நாளை சாலைகள் அகலப்படுத்துகின்ற பொழுது வீடு பாதிக்கப்படும் நிலைக்கு இல்லாத அமைப்பில் இடங்களை விட்டு கட்ட வேண்டும். அப்படி இடங்களை விட்டு கட்டும் பொழுது அந்த இடம் நமது இல்லத்திற்கு எப்படி ஒரு உச்சநிலையை கொடுக்கிற வகையில் அமைக்க வேண்டும், காலியிடம் விடுவது பெரிது கிடையாது அதாவது தெற்கிலும் மேற்கிலும் விடுவது தவறு என்று சொல்லுவோம். அப்படி விட்டு கட்டினாலும் அந்த இடத்தில் ஒரு உச்ச நிலை அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.  சாலைக்கு இல்லத்திற்கு இடைப்பட்ட பகுதியில் என்பது மிக மிக முக்கியம். மதில் சுவர் என்பது வீடுகளை ஒட்டாது கட்ட வேண்டும் அதாவது, தாய்ச்சுவரும் தந்தை சுவரும் ஒட்டக்கூடாது. ஆனால் ஒரு சில இடங்களில் சாலைகள் விரிவாக்கம் ஆகும் பொழுது, அல்லது வீடு சார்ந்த வாஸ்து சீர்திருத்தம் செய்யும்பொழுது இருக்கிற இடத்தை உச்ச நிலைப்படுத்துவதற்காக தாய் சுவரையும் தந்தை சுவரையும், அதாவது வீட்டு சுவரையும் மதில் சுவரையும் இணைக்கிற ஒரு சூழ்நிலைகள் கூட ஏற்பட்டு விடுகிறது.

அதாவது ஒரு வீடு இருக்கிறது . அந்த வீட்டிற்கு மேற்கிலும், தெற்கிலும் தரைத்தளம் தாழ்ந்திருக்கும் பொழுது ஒரு சில விஷயங்களை உச்சப்படுத்தும் நிலைக்காக செய்ய வேண்டும். ஆக மதில் சுவர் என்பது அவசியம். ஆனால் அதே மதில்சுவர் நமக்கு அரணாக இருக்கிறதா?. அல்லது அவஸ்தியை கொடுக்கிறதா?. என்பது முக்கியம். ஒரு சில இடங்களில் மதில் சுவர் என்கிற விஷயம் தவறாக கூட ஒரு இடத்திற்கு பலனை கொடுக்கும்  ஒரு சில இடங்களில் மதில்சுவர் கட்டாது இருக்கும் பொழுது கூட நல்ல வாஸ்து பலனை கொடுக்கிற இல்லமாக அது இருக்கும். இதற்கு காரணம் அந்த இடத்தில் இருக்கும்  வாஸ்து தன்மைகள் தான். இந்த விஷயங்களை நான் ஒரு இடத்திற்கு வாஸ்து ஆராய்ச்சி சார்ந்த விஷயத்திற்கு செல்லும் போது தான் அது எனக்கும் புலப்படும். உங்களுக்கும் அது நன்மையாக கிடைக்கும்  ஆக ஒரு சில மக்கள் தொலைபேசியில் கேட்பார்கள். தொலைபேசியில் சொல்வது என்பது தற்காலிக நிவாரணமாக இருக்கலாம். ஆனால் அது நிரந்தர நிவாரணம் கிடையாது.
—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – இரக்கம்
ரிசபம்- உதவி
மிதுனம்- இன்பம்
கடகம்- முயற்சி
சிம்மம்- அன்பு
கன்னி- விவேகம்
துலாம் – அன்பளிப்பு
விருச்சிகம்- மன சஞ்சலம்
தனசு – சிறப்பான நிலை
மகரம்- பெருமைப்படுத்தல்
கும்பம்- வெற்றி
மீனம் – பாசம் கிடைத்தல்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_28

வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்(1789)

ஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்(1609)

குவைத்தை தனது ஒரு பகுதியாக ஈராக் அறிவித்தது(1990)

சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது(1845)

காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்(1898)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

compound wall vastu in tamil ,வாஸ்துப்படி வீட்டில் காம்பவுண்ட் சுவர்,வீட்டு காம்பவுண்டு சுவர்,

Vastu Tips For Compound Wall,Vastu For Compound & Boundary Wall,

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

 384 total views,  1 views today