மேற்கு வீடுகளில் வாஸ்து|தினசரி காலண்டர் 25.4 2022

இன்று
#தமிழ்_காலண்டர்.

இன்றைய நாள்காட்டி 25.4.2022 சுபக்கிருது சித்திரை மாதம்
12ந் தேதி . சோமவாரம்

நள்ளிரவு 1.40  வரை தசமி திதி  பிறகு    தே.ஏகாதசி திதி.  இன்று மாலை 4.59 வரை அவிட்டம் நட்சத்திரம். பிறகு சதயம்.

இன்றைய
ராகுநேரம்: 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm.

இன்று  நல்ல யோகநாள்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். இன்று நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் இன்று சென்னை சூரிய உதயம் காலை 5.55.
___________________

இன்றைய வாஸ்து குறிப்புகள்:
Today Vastu tips:

மேற்கு திசை சார்ந்த வாஸ்து பற்றி தெரிந்து கொள்வோம். இடத்திற்கு மேற்குப்புறம் தெற்கு வடக்காக செல்லும் சாலை இருக்குமிடம் மேற்கு திசை  மனை மற்றும் வீடுகள் எனப்படும். மேற்கு திசை வீடுகளை கட்டும்பொழுது, கிழக்கு வடக்கு காலி இடங்கள் விட்டு வீடு கட்ட வேண்டும். மேற்கு திசை வீடுகளுக்கு முதன்மை பலன்களைக் கொடுக்கும் தலைவாசல் என்பது வடகிழக்கு வடக்கு பகுதியில் வைத்தால் சிறப்பு. மேற்கு திசைகளில் வரண்டா, பந்தல் , கொட்டகை போன்ற அமைப்புகள் வீட்டைவிட பள்ளமாக இருக்கக்கூடாது. மேற்கு திசை வீடுகளை அமைக்கும் பொழுது மேற்கு சாலை என்கிற அமைப்பு காலி இடமாக இருக்கும்  அதனை வாஸ்து ரீதியாக சரியான முறையில் அமைக்க வேண்டும். மேற்கு வாசல் வீட்டிற்கு கழிவு நீர் எல்லாம் வடகிழக்கு வந்து அதற்குப் பிறகு வெளியேறும் அமைப்பாக மாற்றி வைக்க வேண்டும். மேற்கு வாசல் மேற்கு பார்த்த வீடுகளில் அதிக பலன் என்பது ஆண்கள் மீது இருக்கும்  ஆண்களின் நிலையை தொழிலை சொல்லுகிற இடமாக மேற்கு வீடுகள் இருக்கும். ஆகவே மேற்கு பார்த்த வீடுகளை, நல்ல ஒரு வாஸ்துசாஸ்திரம் பொருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும்.
____________________

இன்றைய இராசிபலன்
Today rasipalan :

மேஷம்- நலம்
ரிசபம்- லாபம்
மிதுனம்- முயற்சி
கடகம்- துணிவு
சிம்மம்- நற்செயல்
கன்னி- மேன்மை
துலாம் – பக்தி
விருச்சிகம்- உற்சாகம்
 தனுசு- பேராசை
மகரம்- ஆதரவு
கும்பம்- லாபம்
மீனம் – உயர்வு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

வரலாற்றில் இன்று
ஏப்ரல்_25

சர்வதேச மலேரிய விழிப்புணர்வு தினம்

போர்ச்சுகல் விடுதலை தினம்(1974)

வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த தினம்(1874)

அமெரிக்கா, ஸ்பெயின் மீது போரை அறிவித்தது(1898)

காலண்டர் 25.4.2022

Loading