ஶ்ரீ உளுந்தாண்டார் ஆலயம் Sri Machapureeswarar Temple – Ulundurpettai

Sri Machapureeswarar Temple – Ulundurpettai

Sri Machapureeswarar Temple – Ulundurpettai,ஶ்ரீ உளுந்தாண்டார் ஆலயம்,ஶ்ரீ உளுந்தாண்டார் ஆலயம்,ஶ்ரீ உளுந்தாண்டார் ஆலயம்,

#ஆலய_தரிசனம்;

அருள்மிகு
ஶ்ரீ லோகாம்பிகை சமேத
ஶ்ரீ உளுந்தாண்டார் (என்றழைக்கப்படும்)
மேஷபுரீஸ்வரர்
திருக்கோயில்,
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.

பல்லவர்களால் கட்டப்பட்ட,
சுமார் 1000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இத்தலத்தில்
நம் இனிய ஈசன்,
சுயம்பு லிங்கத்திருமேனியராய்
ருத்ராட்ச பந்தலின் கீழ் அழகு அருட்காட்சியளிக்கிறார்.

அம்பிகை
தனி சன்னதியில், நின்ற திருக்கோலமாய் அழகு திருக்காட்சியளிக்கிறாள்.Sri Machapureeswarar Temple – Ulundurpettai
சிறப்புக்கள் பல பெற்ற, இத்தலத்தின் பதிவுகள் உங்கள் பார்வைக்கு.

அகத்திய மாமுனிவர் வழிபட்டதாக கூறப்படும்
இத்தல இறைவனை,
ஆதிகாலத்தில்
மிளகு மூட்டையுடன் வழிபட வந்த
வணிகரிடம்,
முதியவர் ஒருவர் வந்து
“இது என்ன மூட்டை?”என வினவ,
வணிகர்
‘உளுந்து மூட்டை’ என்று வேடிக்கையாக பொய் கூறிட,
“அஃது அப்படியே ஆகுக” என அம்முதியவர் கூறிட,
அவ்வாறே
மிளகு மூட்டை
உளுந்து மூட்டையாக மாறிப்போனதாம்.
முதியவராக
தன்னை சோதித்தது சிவபெருமானே என்பதை
உணர்ந்த வணிகர்,
தன் தவறை மன்னித்தருள வேண்டி
அவரை வழிபட்டு
இந்த ஆலயத்திற்கு திருப்பணிகள் செய்ததாக தலவரலாறு கூறுகிறது.

அதனாலேயே இத்தலம் முற்காலத்தில்,
‘உளுந்தையம்பதி’ எனவும், பிற்காலத்தில் ‘உளுந்தாண்டவர் கோயில்’ என்றும் அழைக்கப்பட்டு
பின் அப்பெயர் மருவி,
தற்காலத்தில் இவ்வூரின் பெயர்
உளுந்தூர்பேட்டை
என்றானதாம்.

மார்கழி மாத ஆருத்ரா  தரிசனம் சிறப்புமிகு திருவிழாவாகும்.

தீவினைகளின் தாக்கம்
குறைந்து, நல்வினைகளின் ஆக்கம் ஏற்படவும், செய்யும் தொழில்களில் ஏற்றம் பெறவும். நடைபெறும் பிரதோஷ வழிபாடு இத்தலத்தில்
வெகு பிரசித்தம்).

ஓம் நமச்சிவாய நமக:

Loading