வாஸ்து ஸ்தான பலன்

வாஸ்துவின் ஸ்தான பலன் என்பது முக்கியம்.அதாவது வாஸ்து பலன் என்று பார்க்கும் பொழுது   நிலையாக இருக்கக்கூடிய விஷயம். நிலையாக ஒரு பலனை வழங்குகிற விஷயம் ஸ்தான பலன். இதுவே முதல் விஷயம். இதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது அடி கணக்கில் இது இருக்கலாம். ஏன் அங்குல கணக்கில் கூட இருக்கலாம். வடகிழக்கு மூலைக்கும் வடமேற்கு மூலைக்கும் இடங்கள் இணையாக இருக்கலாம். அல்லது கொஞ்சம் குறையலாம். அதேபோல வடமேற்கு மூலைக்கும் தென்கிழக்கு மூலைக்கும் இணையாக இருக்கலாம். அல்லது தென்கிழக்கு மூலை கொஞ்சம் குறையலாம். அதற்குப் பிறகு தென்கிழக்கு மூலைக்கும் தென்மேற்கு மூலைக்கும் கொஞ்சம் குறையலாம். அதாவது தென்மேற்கு மூலை அல்லது இணையாக இருக்கலாம். இது உயரமாகட்டும் இடத்தின் அகலங்கள் ஆகட்டும் இரண்டுக்கும் இந்த விதி பொருந்தும். இது எந்த திசை பார்த்த வீடுகளாக இருந்தாலும் இந்த விதி பொருந்தும்.

வடக்கு பார்த்து இருந்தாலும் சரி, கிழக்கு பார்த்த இருந்தாலும் சரி, தெற்கு பார்த்து, மேற்கு பார்த்து இருந்தாலும் சரி ஆக இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் ஸ்தானப்பலம் என்கிற விஷயம் ஒரு இல்லத்தில் அமையும். அப்படி ஸ்தான பலத்தோடு பொருந்தி ஒரு இல்லத்தை அமைத்தால் அனைத்து போக பாக்கியங்களும் நன்மக்கட்பேரும் அனைத்து சுகங்களும் பெற்று அற்புதமான வாழ்க்கை வாழ்வார்கள். இதைத்தான் திருவள்ளுவர் தன்னுடைய குறளில் தன்பக்கம் இடம் அறிந்து தம்மை காத்துக் கொண்டு ஒரு செயலை செய்பவன் வலிமை இல்லாத போதும், வலிமை உடைய மனிதராக இருக்கின்றார் என்கிறார். அதாவது பகைவனை வெல்வார் என்று கூறுவார்.  ஆழமாக உள்ள நீரில் வலிமையுள்ள முதலை பல உயிர்களை வெல்லும். அதே சமயம் நீரில் இருந்து அது வெளியே வந்தால் பிற உயிர்கள் அதனை அழிக்கும். முதலையின் வலிமை என்பது நீரில் மட்டுமே. அதேபோல பெரிய சக்கரங்கள் உடைய தேரானது கடலில் போக முடியாது. கடலில் ஓடுகிற படகு தரை உள்ள இடத்தில் ஓடாது. தேருக்கு நிலமும் , படகுக்கு கடலும் வலிமை தரும் இடம் ஆகும். அதுபோல எங்கு வலிமை இருக்கிறதோ அந்த வலிமையை ஆராய்ந்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். அதற்கு உதவுகிற விஷயம் வாஸ்து என்பது மட்டும் நிச்சயமாக உண்மை.

Loading