வாஸ்து / பூராடம் நட்சத்திரம் / காலண்டர் 3.11.2022

தினசரி நாள்காட்டி 3.11.2022 #சுபக்கிருது; #ஐப்பசி மாதம்.17ந் தேதி . வியாழக்கிழமை. இரவு 7.32 மணி வரை தசமி திதி பிறகு ஏகாதசி திதி. இரவு12. 5 வரை சதயம்நட்சத்திரம். பிறகு பூரட்டாதி நட்சத்திரம்.

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

  இன்று பகல்  நாள்  முழுவதும் நல்ல யோகநாள் குறைவு  .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.

27 நட்சத்திரங்கள் சார்ந்த விஷயங்களை ஒவ்வொரு பதிவின் வழியாக சொல்லி வருகின்றேன். அந்த வகையில் 20 வது நட்சத்திரமாக இருக்கக்கூடிய பூராடம் நட்சத்திரம் சார்ந்த ஒரு சில கருத்துக்களை இந்த பதிவின் வழியாக குறிப்பிடுகின்றேன். பூராடம் நட்சத்திரம் கால புருஷ ராசியில் மேசத்துக்கு ஒன்பதாம் வீடாக இருக்கக்கூடிய தனுசுவில் இருக்கின்றது. தனுசு ராசி அதிபதி குரு. பூராடம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். பூராடம் நட்சத்திரத்தின் வடிவம் கட்டில் கால் அல்லது தண்டம். பூராடம் நட்சத்திரத்தின் வசிப்பிடம் வீட்டுக் கூரை.பூராடம் நட்சத்திரத்தின் அதிதேவதை வருணன். பூராடம் நட்சத்திரத்தின் அதிதேவதை சுக்கிரன் என்கின்ற காரணத்தால் வீடு வாகனங்கள் வாங்க, ஆடை ஆபரணங்கள் முத்து பவளம் வாங்க, உந்த நட்சத்திரம். பூராடம் நட்சத்திரம் மேஷ ராசிலிருந்து 9-ம் வீடான தனுசு ராசியில் இருக்கின்ற காரணத்தால், நீண்ட தூர பயணங்களை குறிக்கின்ற ஒரு நட்சத்திரம்.. ஆக பொழுதுபோக்கு உல்லாசம் சார்ந்த உல்லாச பயணங்கள், தொலைதூர பயணத்திற்கு உகந்த நட்சத்திரம்.  கல்விக்கு காரகம் புதன் என்று சொன்னால், கல்வியில் மிகப்பெரிய புலமை  புகழ்ச்சியும் கொடுப்பது சுக்கிரன். மேலும் ஒன்பதாம் இடம் உயர் கல்வியை குறிக்கும். ஆராய்ச்சி திறமையை தனுசு ராசி கால புருஷ ராசியில் ஒன்பதாம் இடமாக இருக்கின்ற காரணத்தால் உயர் கல்வி சம்பந்தமான முயற்சிகளை ஈடுபடுவதற்கு பூராடம் நட்சத்திரம் உகந்தது. பொதுவாக ஜோதிடத்தில் பணத்தில் குருவை குறிப்பிடுவோம். ஆனால் சுக்கிரனை நாடி ஜோதிடத்தில் தன காரகன் என்று குறிப்பிடுகின்றன. இருந்தாலும் கையில் இருக்கும் பணத்திற்கு சுக்கிரன் என்கின்ற காரணத்தால், சுக்கிரன் நட்சத்திரம் வரக்கூடிய நாளில் கடன் தொல்லையில் கஷ்டப்படுகிற மக்கள் பூராடம் நட்சத்திரம் வரும் நாளில் மகாலட்சுமி வழிபாடு செய்து வந்தால் கடன் தொல்லை நீங்கி பண வசதி பெருகும். நட்சத்திரநாளில் சென்னிமலை சென்று அங்கிருக்க கூடிய சிரகிரி வேலவனை வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கும்.

Vastu calendar tamil

Loading