வாஸ்து பூஜை நாட்கள்

வாஸ்து பூஜை போட அதாவது, பூமி பூஜை போட நாட்களை தேர்வு செய்வதில் கவனம் தேவை . வாஸ்து நாள் என்று முழுவதுமாக அந்த நாளை எடுத்துக் கொள்ள வேண்டாம். அப்படி வாஸ்து நாள் வருகிறது என்று சொன்னால், அந்த நாளில் வருகிற ஒரு சில விஷயங்களை கவனித்து, இதன் பாதிப்பு இது சார்ந்த நாட்கள் அந்த நாளன்று இல்லை என்றால் தாராளமாக உபயோகிக்கலாம். திதிகளில் பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி நாட்களைத் தவிர்க்க வேண்டும். அதேபோல தேய்பிறை நாட்களையும் தவிர்த்துக் கொள்வது நலம். தனிய நாள், கரிநாள், கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஒரு கண் உள்ள நாள், செவ்வாய் மற்றும் சனிக்கிழமை தவிர்ப்பது நலம். கரணங்களில் சகுனி, சதுஷ்பாதம், நாகவம்,  கிம்ஸ்துக்னம் நாட்களைத் தவிர்க்க வேண்டும். பிரபலிஷ்ட யோகங்கள்,  மரண யோகங்களை தவிர்க்க வேண்டும். நேரங்களில் ராகு, எமகண்டம், சந்திராஷ்ட தின நேரங்களை தவிர்க்க வேண்டும்.வாஸ்து நாளில் இந்த நாள் வரும் பொழுது அந்த வாஸ்து பூஜையை தவிர்க்க வேண்டும்.

Loading