வாஸ்து பார்க்க உகந்த நாட்கள் Best days to see Vastu

Best days to see Vastu

வாஸ்து பார்ப்பதற்கு நமது மக்கள் நல்ல நாள் வேண்டும் என்று சொல்கிறார்கள். நான் பார்க்கிற பஞ்சாங்கத்தில் கூட வாஸ்து பார்ப்பதற்கு தேய்பிறை பிரதமை திதியை தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.. இந்த இடத்தில் ஒரு வாஸ்து நிபுணர் வருகிறார் என்றால் வாஸ்து கருமம் நீக்கும் செயலாக பார்க்க வேண்டும். ஆக இந்த இடத்தில் நல்ல நேரம் தேடிக்கொண்டிருக்க வேண்டாம் என்பது எனது கருத்து. அஸ்டமி வருகிறது, நவமி வருகிறது, ராகு காலம், எமகண்டம், சுப ஹோரை, என்கிற விஷயம் இல்லை. இப்படி நாட்களை எண்ணிக் கொண்டிருக்க கூடாது. வாரத்தில் உதாரணமாக சனிக்கிழமை வேண்டாம் என்று ஒரு சிலர் சொல்வார்கள். செவ்வாய்க்கிழமை வேண்டாம் என்று சொல்வார்கள். இந்த இடத்தின் தொழிலுக்கு காரணமாக உத்தியோகத்திற்கு காரணமாக இருக்கக்கூடிய நாள் சனிக்கிழமை 100% சனிக்கிழமை வாஸ்து பார்க்கலாம்.. வாஸ்து சீர் திருத்த வேலைகளை செய்யலாம்.. அதேபோல செவ்வாய்க்கிழமை என்பது தமிழகத்தில் மட்டும் அமங்கல நாளாக குறிக்கப்படுகிறது.. தமிழ்நாடு தவிர கேரளா ஆகட்டும். என் வடநாடுகளில் ஆகட்டும், இங்கு செவ்வாய் மங்களவாரம் என்று குறிப்பிடுகின்றனர். நல்ல மங்கலகரமான செயல்களை அந்தநாளில் செய்கின்றனர் .ஆக செவ்வாய்க்கிழமையும் வாஸ்து பார்க்க என்னை அழைக்கலாம்.

Our people say that it is a good day to see Vastu. Even in the almanac that I am looking at, they have mentioned the first Tithi of Teipira to see Vastu.. If a Vastu expert comes to this place, then Vastu should be seen as an act of removing blackness. So my opinion is don’t look for a good time in this place. Astami is coming, Navami is coming, there is no such thing as Rahu Kalam, Emakandam, Subha Horai. Don’t count the days like this. A few will say no to Saturday for example during the week. They will say no on Tuesday. Due to the occupation of this place Saturday is 100% Saturday Vaastu can be seen.. Vaastu repair work can be done.. Similarly Tuesday is marked as Amangala day only in Tamil Nadu.. Except Tamil Nadu let it be Kerala. Even in my northern countries, here they refer to Tuesday as Mangalavaram. Good and auspicious things are done on that day. So you can call me for Vastu on Tuesday also.

Loading