ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
15.6.2022
#தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 13 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.47.
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)
தினசரி நாள்காட்டி 15.6.2022 சுபக்கிருது ஆனி மாதம் முதல் நாள்.
1ந் தேதி புதன்கிழமை.மதியம் 1.34 வரை தே.பிரதமை திதி. பிறகு தே.துதியை திதி. மாலை 3.21 வரை மூலம் நட்சத்திரம் பிறகு பூராடம் நட்சத்திரம்.
ராகுநேரம்:12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm
இன்று மதியம் 3.21 மேல் முழுவதும் நல்ல யோகநாள் .
__________________
வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:
மாணவச் செல்வங்கள் என்பவர்கள் இளம் சூரியனுக்கு நிகரானவர்கள். ஒரு குடும்பத்தில் ஒளி விளக்கு ஏற்றும் இளம் தலைமுறையினர் குழந்தைப்பருவம் என்பது ஒரு மனிதனுக்கு உன்னதமான வாழ்க்கையை கொடுக்கிற அஸ்திவாரம் என்று சொல்லவேண்டும். ஒவ்வொரு தாய், தந்தையரும் தனது வாழ்வை விட, தனது பிள்ளைகளின் வாழ்வு உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்று உறுதியோடு இருப்பார்கள். அவர்களுடைய எண்ணம் வெற்றிபெற குழந்தைகளின் படிப்பு அறை என்பது மிக மிக முக்கியம் . அந்த வகையில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்று சொன்னால், அந்த குழந்தைகளின் படிப்பு நிலையை நீங்களாகவே ஆராய முடியும்.
ஒரு இல்லம் இருக்கிறது. அந்த இல்லத்தில் வடகிழக்கு சார்ந்த பகுதியில் படிக்கும் குழந்தையின் படிப்பு அறிவு என்பது மிக உன்னத நிலையில் இருக்கும். வடகிழக்கு படிக்காது எனக்கு இந்த இடம் பிடிக்கவில்லை நீங்கள் படிக்க சொன்னாலும் நான் படிக்க மாட்டேன் வேறு ஒரு வேறு ஒரு இடத்திற்கு சென்று படிக்கிற குழந்தைகள் படிப்பு என்பது குறைவாகத்தான் இருக்கும். இது எனது வாஸ்து பயணத்தில் ஏற்பட்ட அனுபவம் பதிவு. ஒரு இல்லத்தில் குழந்தைகளின் படிக்கும் அறை என்பது, அந்த அறை என்பது திசைகாட்டி 10 டிகிரிக்குள் இருக்கும் பொழுது கிழக்கு அமர்ந்தோ, வடக்கு பார்த்தோ படிக்கலாம். ஒருவேளை கிழக்கு என்பது இடது புறத்தில் பத்து டிகிரிக்கும் மேலாக இருக்கும் பொழுது கண்டிப்பாக அந்த இடத்தில் வடக்கு பார்த்து அமர்ந்து தான் படிக்க வேண்டும். அதே சமயம் வடக்கு என்பது 10 டிகிரிக்கும் மேலாக இடதுபுறம் வந்திருக்கிறது என்று சொன்னாலும் அந்த இடத்தில் கிழக்கு பார்த்து அமர்ந்து படிக்க வேண்டும். இந்த விதிகள் மிக மிக முக்கியம். இதனை தவிர்த்து வடக்கு மட்டும் படிக்கும் அறை என்பது வைத்துக்கொண்டு படித்தாலும், திசைகள் திரும்பி இருக்கும்போது தவறுகளை கொடுத்துவிடும். கவனம் மிக முக்கியம். ஏனென்று சொன்னால், படிப்பு என்பது தான் மிகப்பெரிய சொத்து குழந்தைகளுக்கு. நம்முடைய அறிஞர்கள் கூட முன்னோர்கள் கூட கற்ற கல்வி என்பது அடுத்த ஜென்மத்தில் கூட தொடரும் என்று சொல்வார்கள். அந்த வகையில் தனத்தை தரக்கூடிய கல்வியாக கிடைக்க வேண்டும். வடகிழக்கு சரியாக இருந்து அந்த இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும்.அப்போது அந்த கல்வி கண்டிப்பாக ஒரு குழந்தையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே…..
______________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேஷம்-
ரிசபம்- வெற்றி
மிதுனம்- பக்தி
கடகம்- ஓய்வு
சிம்மம்- சினம்
கன்னி- பாசம்
துலாம் – முயற்சி
விருச்சிகம்- விருத்தி
தனசு – பணிவு
மகரம்- களிப்பு
கும்பம்- தெளிவு
மீனம் – சிந்தனை
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
________________________
#வரலாற்றில்_இன்று
june_15
சர்வதேச காற்று தினம்
டென்மார்க் கொடி நாள்
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் இறந்த தினம்(1948)
ஐ.பி.எம் நிறுவனம் அமைக்கப்பட்டது(1911)
ரப்பர் பதப்படும் முறை, சார்லஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது(1844)
_________________
மேலும் விபரங்களுக்கு
#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

484 total views, 1 views today