வாஸ்து காலண்டர் சென்னை 3.7.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

Chennai vaati calendar

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

3.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 10 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.50.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 3.7.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
19ந் தேதி ஆதிவாரம்.  மாலை 5.08 வரை சதுர்த்தி திதி. பிறகு பஞ்சமி திதி.இன்று காலை 6.15 வரை ஆயில்யம் நட்சத்திரம். பிறகு நாள் முழுவதும் மகம் நட்சத்திரம்.

ராகுநேரம்:4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:


நான் வாஸ்து பார்பதற்காக ஒரு இடம் சென்றேன்.ஆனால் வீட்டின் வடகிழக்கு இல்லாத அமைப்பாக வீடு அமைத்து இருந்தனர்.அவர்களுக்கு பார்த்தீர்கள் என்றால் அந்த வீட்டின் மூத்தஆண் வெளியில் சொல்ல முடியாத ஒரு விசயத்தில் பாதிக்க பட்டு இருந்தார்.ஆனால் அந்த வீட்டிற்கு வடக்கு குபேர பார்வை உண்டு.மற்றும் வடக்கும் கிழக்கும் அதிக இடங்களும் இருந்தன.ஆக வடக்கும் கிழக்கும் இடம் இருந்து வடகிழக்கு பள்ளம் இருந்தாலும் செல்வ நிலையிலோ பணம் சார்ந்த நிகழ்வுகளிலோ எந்த குறையும் இருக்காது.ஆனால் பணத்தால் பெற முடியாத சில விசயங்கள் உள்ளன.அவை தூக்கம் உடல்நலம் நேர்மையான குடும்ப நபர்களுக்கு உண்மையான மனித வாழ்வு இப்படி பல வகைகளில் பாதிப்பகனை வடகிழக்கு வெட்டப்பட்ட மனை கொடுக்கும்.ஈசானம் குறைந்தால் ஆண்கள் பயனற்றவர் ஆகின்றனர்.உடல்நலம் கெடலாம்.விபத்து உண்டாக வாய்ப்புண்டு.அந்த வீட்டு குழந்தைகளின் படிப்பு திருமணம் போன்ற நிகழ்வுகளில் பாதிப்பினை கொடுக்கும்.

சமிபத்தில் திருப்பூரில் ஒரு இடம் சென்று இருந்தேன். அங்கு ஈசானமற்றும் நைருதி பாதிப்பு உள்ள இடம் கூடவே வடமேற்கு சார்ந்த பாதிப்பும் இருந்தது.அந்த வீட்டின் குடும்ப தலைவர் விபத்தின் மூலம் பாதிப்பு அவர்களுக்கு ஒரே மகன் வெளிநாட்டில் வேலை அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நான் இனி இங்கு வர மாட்டேன் என்று சொல்லி விட்டார்.இங்கு அந்த அம்மா மட்டும் தனியாக வசிக்கின்றார்கள் ஆன்ல் கோடிக்கணக்கில் சொத்து உண்டு.இது எனது வாஸ்து பயணத்தில் ஏற்பட்ட அனுபவத்தினை உங்கள் பார்வைக்காக.

ஆகையால் ஈசான குறையை வெறும் செல்வம் என்று நினைக்காமல் உடல் மற்றும் உறவு சார்ந்த பிரச்சனையாக பார்க்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் கீழ்கண்ட அமைப்பில் வீடுகளை அமைத்து வாழ்க்கையின் உறவுகள் இல்லாமல்,அப்படியே இருந்தாலும் இல்லாத வாழ்வு வாழ வேண்டாம்.
______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்-  வெற்றி
ரிசபம்-தனம்
மிதுனம்-லாபம்
கடகம்- முயற்சி
சிம்மம்-போட்டி
கன்னி- நிறைவு
துலாம் – நலம்
விருச்சிகம்- நட்பு
தனசு – நிறைவு
மகரம்- புகழ்
கும்பம்- ஏமாற்றம்
மீனம் – பரிசு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_03

மியான்மர் பெண்கள் தினம்

பெலரஸ் விடுதலை தினம்(1944)

க்யூபெக் நகரம் உருவாக்கப்பட்டது(1608)

அமெரிக்காவின் முதல் சேமிப்பு வங்கி நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1819)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading