வாஸ்து காலண்டர் சென்னை வாஸ்து 3.6.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

3.6.2022
#தமிழ்_காலண்டர்.

சென்னை வாஸ்து 3.6.2022

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 3.6.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
20ந் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு  2.44 வரை வ.சதூர்த்தி திதி.பிறகு வ.பஞ்சமி திதி.   மாலை 6.50 வரை புனர்பூசம் நட்சத்திரம் பிறகு பூசம் நட்சத்திரம்.

ராகுநேரம்:10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am.

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

மாலை 6.50 வரை  நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:

வாஸ்து ரீதியாக வாடகை வீடு ஒருவர் குடி போகிறார் என்று சொன்னால், வடக்கு அதிக காலி இடம் இருப்பது போல பார்ப்பது நலம். வடக்கு காலியிடங்கள் அதிகமாக இருக்கும் பொழுது மற்ற பகுதிகளில் வாஸ்து குற்றங்களும் பெருமளவில் குறைந்துவிடும். எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும் சரி வடக்கு காலியிடம் என்பது வீட்டுக்கு, இடத்திற்கு வேண்டும். இதனைத்தான் ஐயா #திருப்பதி_வாஸ்து #ரெட்டி ஐயா அவர்கள் அவருடைய இல்லத்தில் முதன் முதலாக அந்த விஷயத்தை உட்புகுத்தி இன்று உலகத்திற்கு கொடுத்த விஷயமாக என்னால் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வடக்கு என்பது காலியிடம் வேண்டும். அதற்கு பிறகு தான் ஒரு வாடகை வீட்டில் மற்ற வாஸ்து விசயங்களை கவனிக்க வேண்டும். ஒரு இல்லத்தில் இருக்கின்ற  படிகளால் தோசமா?.. என்பதை நம் கவனித்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் படிகள் என்பது எக்காரணம் கொண்டும் வடகிழக்குப் பகுதியில் இருக்கக்கூடாது. பல வீடுகள் ஒன்றாக இருக்கின்ற கட்டிடங்களில் ஒரு சில வீட்டிற்கு படிகள் தோஷத்தை கொடுக்கும். இரண்டாவது தண்ணீர் தொட்டி மற்றும் கழிவு நீர் தொட்டிகள் வாடகை வீடுகளில் குற்றங்களாக வந்துவிடக்கூடாது.அதனையும் கவனிக்க வேண்டும். என்னைப் பொறுத்தளவில் வாடகை வீடுகள் என்று பார்க்கும்பொழுது தரைத்தளத்தை சமமாக விட்டு, முதல் மாடி , 2 வது மாடி, மூன்றாவது மாடியில் தாராளமாக வடக்கு காலி இடங்களாக இருக்கும் பொழுது வாடகை வீட்டுக்கு உட்புகுந்து விடலாம் என்று சொல்லுவேன். நிறைய மக்களுக்கு வாஸ்து ரீதியாக வாடகை வீடு எடுத்து கொடுக்கும் பொழுது பத்து பதினைந்து வடக்கு பார்த்த வீடுகளை தேடி பார்க்க சொல்வேன் . அதில் ஏதாவது ஒன்றை, இருப்பதில் நல்லபடியாக இருப்பதை எடுத்துக் கொடுப்பேன். நிறைய இடங்களில் இந்த மாதிரி எனது வாஸ்து பயணம் இருந்து இருக்கிறது. ஆகவே வாடகை வீடு என்பது  மிகுந்த முன்னேற்றத்தை கொடுக்கிற இல்லமாக வேண்டும் என்று சொன்னால் 15 வீடுகளை தேடி பார்த்து வைத்துக்கொண்டு என்னை அழைக்கும் போது சிறப்பான, நல்ல பலம் பொருந்திய, வெற்றியை கொடுக்கிற இல்லத்தை  என்னால் தேர்ந்தெடுத்துக் கொடுக்க முடியும். எதற்காக இந்த பதிவு என்றால் என்னை அழையுங்கள் என்று சொல்வதற்கு கிடையாது. ஒரு விழிப்புணர்வு பதிவு ஆகும்.
.
_______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- சிக்கல்
ரிசபம்-ஆதரவு
மிதுனம்-  பணிவு
கடகம்-  ஏமாற்றம்
சிம்மம்- லாபம்
கன்னி- புகழ்
துலாம் – சுகம்
விருச்சிகம்- கவலை
தனசு – வெற்றி
மகரம்- நன்மை
கும்பம்- முயற்சி
மீனம் – பயம் 

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
April_03

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி ஐயா பிறந்த தினம்(1924)

நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது(1965)

மொண்டெனேகுரோ நாடு, செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது(2006)

அறிவியலாளர் வில்லியம் ஹார்வி இறந்த தினம்(1657)

____________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading