வாஸ்துவில் சனி மூலை

வாஸ்துவில் சனி மூலை. வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு சில மக்கள் சொல்லுகிற விஷயம் சனி மூலை எப்படி இருக்க வேண்டும் என்கிற கேள்வியை நிறைய மக்கள் என்னிடம் கேட்கின்றனர். சனிமூலை என்பது ஈசானிய மூலையை தான் சனிமூலை என்று சொல்கிறோம்.இதனை ஒரு சனியின் மூலையோ என்றும் கேட்கின்றனர். இந்த இந்த ஈசானிய மூலை 90 டிகிரி இருக்க வேண்டும். இல்லை என்றால் கொஞ்சம் குறுகிய அமைப்பில் இருக்கலாம். ஆனாலும் அது தவறுதான். ஆனால் அந்த மூலை விரிந்த அமைப்பில் எப்பொழுதும் இருக்கக் கூடாது. மடங்கிய அமைப்பாகவோ, முனை சிதறிய அமைப்பாகவோ இருக்கக் கூடாது. ஈசானிய மூலை எக்காரணம் கொண்டும் வெட்டுப்படக்கூடாது . ஒரு சில நகர்ப்புற நகர அமைப்பு விதிகளின்படி அந்த மூலையை மடக்கி வைத்து விடுகின்றனர். அப்படி மடக்கி வைப்பதும் மிகப் பெரிய தவறு. அந்த ஈசானிய மூலையில் எப்பொழுதுமே மரங்கள் மற்றும், உயர்ந்த படிகள், உயர்ந்த அமைப்பில் சுவர்கள், மாடிக்கு ஏறுகிற லிப்ட் சார்ந்த விஷயங்களை  வைக்கக் கூடாது. இது வீடுகள் மட்டும் இன்றி எந்த கட்டிடமாக இருந்தாலும் இந்த விதி பொருந்தும்.

sani corner in Vastu. A lot of people ask me the question of what a few people say in Vastu Shastra, how should the Saturn corner be? Shanimulai is the eastern corner of Saturn. We call it Sanimulai. This right angle should be 90 degrees. If not, maybe in a slightly shorter setting. But that is wrong. But that corner shouldn’t always be in a sprawling setting. It should not be a folded structure or a scattered structure. Isaniya corner should not be cut for any reason. Some urban planning rules allow the corner to be folded. Wrapping it up like that is a big mistake. Never place trees and high steps, high structure walls, elevators going up to the floor in that eastern corner. This rule applies to any building, not just houses.

Loading